நாடாளுமன்றுக்கு பிரதமராக நவம்பர் 5 வர மகிந்தவுக்கு சம்மதம்!! - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, November 1, 2018

நாடாளுமன்றுக்கு பிரதமராக நவம்பர் 5 வர மகிந்தவுக்கு சம்மதம்!!

5ம் திகதி நாடாளுமன்றம் கூடுகிறது: மஹிந்த அறிவிப்பு!

நாடாளுமன்றத்தை நவம்பர் 5 ஆம் திகதி கூட்டுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சற்று முன்னர் இதனை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் கூடும்போது பிரதமரின் ஆசனத்தை மகிந்தவுக்கு வழங்க சபாநாயகர் சம்மத்தித்ததை தொடர்ந்து இவ்வறிப்பு வெளிவந்துள்ளது .

நாடாளுமன்றத்தை உடன் கூட்டும்படி சபாநாயகர் நேற்று ஜனாதிபதியை சந்தித்து வலியுறுத்தியிருந்தார். இதேவேளை, நாடாளுமன்றத்தை கூட்டும்படி சர்வதேச நாடுகளும் மைத்திரியை வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையிலேயே 5ம் திகதி நாடாளுமன்றத்தை கூட்டும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad