ஒவ்வொரு தீபாவளியும் தீர்வு பற்றி விசாரிப்பவர் சம்பந்தர் மட்டுமே - மைத்திரி - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, November 5, 2018

ஒவ்வொரு தீபாவளியும் தீர்வு பற்றி விசாரிப்பவர் சம்பந்தர் மட்டுமே - மைத்திரி

"ஒவ்வொரு பண்டிகை சமயத்திலும், தொலைபேசியில் அழைக்கும் சம்பந்தன் தீர்வு திட்டம் குறித்து என்னை வலியுறுத்துவார். இனப்பிரச்சனை தீர்வு முயற்சியில் அவர் அதிக அக்கறையுடன் இருக்கிறார்" என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்ற தீபாவளி நிகழ்வில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த டக்ளஸ் தேவானந்தா எம்.பி பேசும்போது, "நாங்கள் அடுத்த தீபாவளிக்கு தீர்வு என கூறி மக்களை ஏமாற்ற மாட்டோம். சாத்தியமான இலக்குகளை நோக்கி, சாத்தியமான வழிகளிலேயே பயணிப்போம்" என குறிப்பிட்டார்.

அண்மைய வருடங்களில், இனப்பிரச்சனை தீர்விற்காக சில தீபாவளிகளை காலஅவகாசமாக எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டு வந்த நிலையில், டக்ளஸ் தேவானந்தாவின் உரையில், அதையே குறிப்பிட்டதாக கருதப்பட்டது.

டக்ளஸ் தேவானந்தா அப்படி உரையாற்றியபோது, இரா.சம்பந்தனின் முகம் இறுக்கமுமடைந்திருந்தது.

பின்னர், உரையாற்றிய சம்பந்தன், சற்று கோபமாக தீபாவளி காலஎல்லை பற்றி விளக்கமளித்தார். "ஜனாதிபதி மீதான நம்பிக்கையில், தீர்வு முயற்சிகளின் மீதான நம்பிக்கையில் நாங்கள் அப்படி கூறினோம். நம்பிக்கையுடன் தான் இந்த முயற்சிகளை செய்யலாம். இன்னொரு தரப்புடன் அவநம்பிக்கையுடன் இந்த கருமங்களை ஆற்ற முடியாது. அந்த அடிப்படையிலேயே, தீபாவளியில் தீர்வுபற்றிய நம்பிக்கையை வெளியிட்டிருந்தோம். இனப்பிரச்சனை தீர்வு முயற்சிகளை உடனடியாக மேற்கொள்ளுங்கள் என இப்பொழுதும் மன்றாட்டமாக கேட்கிறேன்" என்றார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றிய போது, இரா.சம்பந்தனை சமாதானம் செய்யும் விதமாக உரையாற்றினார். "ஒவ்வொரு பண்டிகை சமயத்திலும் என்னிடம் பேசும்போதும், தீர்வு பற்றியே இரா.சம்பந்தன் வலியுறுத்தி வருகிறார். இனப்பிரச்சனையை தீர்க்க வேண்டுமென அவர் இதயபூர்வமாக விரும்புகிறார், செயற்படுகிறார். அதை நாமும் சரியாக பயன்படுத்திக் கொள்வோம் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad