தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய ஜனாதிபதி அதிரடி உத்தரவு!! - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, November 4, 2018

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய ஜனாதிபதி அதிரடி உத்தரவு!!

ல ஆண்டுகளாக விசாரணைகள் எதுவும் இல்லாமல் சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு விடிவு காலம் கிட்டியுள்ளது.

இலங்கையில் உருவாகியுள்ள அரசியல் குழப்பநிலையில் , சிறுபான்மை கட்சிகளை மகிந்த பக்கம் இழுக்கும் மும்முரமாக நடவடிக்கையில் ஜனாதிபதி மைத்திரியும் ஈடுபட்டு வருகின்றார்.

தமிழ் கூட்டமைப்பின் ஆதரவை பெறும் நோக்கில், பல பேரம் பேசல்களில் ஈடுபட்டு வந்த மகிந்த தரப்புக்கு ஆதரவு அளிக்கும் வண்ணம் ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.இதன் படி தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுவரை காலமும் தமிழ் கூட்டமைப்பு பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்த நிலையில் எதுவித பதிலும் கொடுக்காமல் இழுத்தடித்து வந்த ஜனாதிபதி மைத்திரி அரசியல் அனுகூலத்தை அடையும் வகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad