விடுதலைப் பாடல் தந்த இசையமைப்பாளர் ரமணனிற்கு ஈழத்தில் அஞ்சலி! - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, August 13, 2018

விடுதலைப் பாடல் தந்த இசையமைப்பாளர் ரமணனிற்கு ஈழத்தில் அஞ்சலி!

ஈழத்தின் பிரபல இசைக்கலைஞரான ரமணன் இன்று யாழ்ப்பாணத்தில் இயற்கை எய்தியுள்ளார். 

யாழ்.ரமணன் ஈழ விடுதலைக்கு உரமூட்டிய பாடல்கள் பலவற்றினை இசையமைத்துள்ளார். அதில் ஓ.. மரணித்த வீரனே பாடல் இவரது இசையில் வெளியானவற்றில் முக்கியமானது. அதைப்போல பிஞ்சு மனம் படத்தில் வரும் பூத்தகொடி பூக்களின்றி தவிக்கின்றது பாடலிற்கு அவர் இசை அமைக்க குமாரசாமி பாடியிருந்தார்.

ஈழக் குடும்பங்களின் சிதைவை சித்திரிக்கும் அற்புதமான பாடலாக அது அமைந்திருந்தது. திசைகள் வெளிக்கும் உட்பட தமிழீழ பெண் போராளிகளுடன் இவர் இணைந்து பணியாற்றியுள்ளார். 

தமிழீழ தேசியத்தலைவரது நன்மதிப்பினை பெற்றிருந்த ரமணனின் இறுதிக்கிரியைகள் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

ஈழ விடுதலைப்போராட்டத்தில் 600 இற்கும் அதிகமான பாடல்களிற்கு இசைத்தமைவர் என்ற பெருமையினை ரமணன் பெற்றுக்கொண்டிருந்தார். 
ரமணின் புகழுடலிற்கு மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

1 comment:

  1. விடுதலை பயணத்தில் உரமாக இருந்த ரமணா அண்ணாவுக்கு இதயஅஞ்சலி!

    ReplyDelete

Post Bottom Ad