நாட்டில் மீண்டும் ஜனாதிபதியாகும் சந்தர்ப்பம் மஹிந்த ராஜபக் ஷவுக்கு இல்லை. அதனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவாகும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
அங்குனுகொல பெலஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
அரசியலமைப்பின் பிரகாரம் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு நியமிக்கப்பட வாய்ப்பில்லை. அதுதான் நாட்டின் சட்டம். அதனால் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தகுதியான வேட்பாளராக இருப்பது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவாகும். சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் என அனைத்து இலங்கையர்களதும் நம்பிக்கையை வெற்றிகொண்டிருக்கும் ஒரே தலைவரும் அவராகும். அதனால் மைத்திரிபால சிறிசேனவை மீண்டும் ஜனாதிபதியாக்குவதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்பார்ப்பாகும் என்றார்.
No comments:
Post a Comment