வட மாகாண சபையில் இருக்கின்ற அனைத்து அமைச்சர்களும் இராஜினாமா செய்துவிட்டு, புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமானம் செய்ய வேண்டும் என்று வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே கூறியுள்ளார்.
எந்தவொரு மாகாண சபையிலும் ஐந்து அமைச்சர்களே இருக்க வேண்டும் என்றும், நீதிமன்ற தீர்ப்பையடுத்து வடமாகாண சபையில் ஆறு அமைச்சர்கள் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
இதன் காரணமாக வட மாகாணத்தின் நிர்வாகத்திற்கான சட்ட திட்ட கொள்கைகளை கூட வகுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பா. டெனிஸ்வரனை மீண்டும் அமைச்சுப் பதவியில் இருக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினால் இந்த நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதுடன், இதற்கு தீர்வாக அனைத்து அமைச்சர்களும் இராஜினாமா செய்து விட்டு புதிய அமைச்சர்கள் பதவியேற்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
அமைச்சர் ஒருவரை நியமிப்பதற்கோ அல்லது பதவி நீக்குவதற்கோ தனக்கு அதிகாரம் இல்லை என்பதால் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் இந்தப் பிரச்சினையை விரைவாக தீர்க்க வேண்டும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment