செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, August 14, 2018

செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு


முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2006 ஆவணி மாதம் 1 4 ம் திகதி சிறிலங்கா வான்படை கிபிர் விமானங்கள் நடாத்திய மிலேச்சதனமான தாக்குதலில் படுகொலை  செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள் 54 பேர் மற்றும் பணியாளர்கள் 4 பேரினதும் பன்னிரெண்டாவது ஆண்டு நினைவுநாள் இன்று உணர்வுபூர்வமாக மக்களது கண்ணீருடன் நடைபெற்றது.

செஞ்சோலைப் படுகொலை இடம்பெற்ற வள்ளிபுனம் பகுதியில் படுகொலை செய்யப்பட்டவர்களது  திருவுருவப்படங்கள் வைக்கப்பட்ட விசேடமாக அமைக்கப்பட்ட நினைவிடத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் உயிரிழந்தவர்களின் உறவுகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad