கட்சி மாறுதல் என்பது சாதாரண விடயம். அதற்காக யாருக்காவது சன்மானங்கள் வழங்கப்படுமாக இருந்தால் அதனை இலஞ்சமாக கருதமுடியாது. அப்படியானால் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படுவதும் இலஞ்மாகவே கருதப்படவேண்டும் என்று தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
சோசலிச மக்கள் முன்னணி கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
கட்சி தாவுதற்கு பெருமளவு பணம் வழங்கப்படுவதாக ஆதாரங்களுடன் ஐக்கிய தேசியக் கட்சி தகவல் வெளியிட்டிருந்தது. அரச தரப்பு அதனை மறுத்திருந்தது. இவ்வாறானதொரு நிலையிலேயே அரச தரப்பு அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
எமக்கு பெரும்பான்மைப் பலத்தை நிரூபிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவையும் நாங்கள் கோரியுள்ளோம். அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன கூட்டமைப்பின் தலைவருடன் இது தொடர்பாக கலந்துரையாடியுள்ளார். அவர்களின் கோரிக்கைகளில் எங்களால் நிறைவேற்ற முடியுமான விடயங்களை செய்துகொடுக்க தயாராக இருக்கின்றோம்.
பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும் மத்திய வங்கி ஊழல் மோசடியுடன் தொடர்ப்புபட்ட எவரையும் எம்முடன் இணைத்துக் கொள்ளப்போவதில்லை – என்றார்
No comments:
Post a Comment