என்னிடம் 50 கோடி பேரம் - கூட்டமைப்பு எம்பி! - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, December 1, 2018

என்னிடம் 50 கோடி பேரம் - கூட்டமைப்பு எம்பி!

தமிழ் தரப்புக்களிடம் மண்டியிடும் நிலையில் தேசிய கட்சிகள் உள்ளதாகவும் 6 கோடி முதல் 50 கோடிவரை தன்னிடம் பேரம் பேசினார்கள் எனவும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார்

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கூழாமுறிப்பு பகுதியில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையின் அரசியல் வரலாற்றிலே சிறுபான்மை இனம் என்று தமிழர்களை ஓரங்கட்டிய சிங்கள அரசியல்வாதிகள் இன்று தமிழினத்திடம் மண்டியிடுகின்ற ஒரு நிலை வந்துள்ளது. இவ்வாறு ஒரு நிலை ஏற்ப்படும் என்று மகிந்த ராஜபக்ஷ நினைத்திருப்பாரா?

மகிந்த ராஜபக்ஷ எங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களை விலைக்கு வாங்குகின்ற வகையில் பேரம் பேசுகின்ற நிலை தனக்கு ஏற்ப்படும் என்று நினைத்திருக்கவேமாட்டார்.

இவர் என்ன விலை கொடுக்க முடியும் எமது தமிழ் இனத்துக்காக? தங்கள் இன்னுயிர்களை ஈர்த்த எங்கள் தியாகிகளுக்கு என்ன விலை கொடுக்க முடியும்? இது ஒரு தாய் மனத்தினுடைய கண்ணீர். ஒரு தாயினுடைய மன உக்கிரம் தான் இன்று மகிந்தவை மண்டியிட வைத்திருக்கிறது.

அதுமட்டுமல்ல தமிழினம் தங்களுக்கு தேவையில்லை, அவர்கள் சிறுபான்மை இனம் என்று ஓரங்கட்டி வைத்திருந்த தேசிய கட்சிகள் அனைத்துமே இன்று தமிழர்களையே நம்பியிருக்கிறது. இந்த தமிழர்கள் ஆணையிட்டு அனுப்பி வைத்திருக்கின்ற கூட்டமைப்பை நம்பியே அவர்கள் இன்று ஆட்சி பீடம் ஏறவேண்டிய நிலை வந்துள்ளது.

ஏனைய உறுப்பினர்களிடம் எவ்வளவு பேரம் பேசப்பட்டது என எனக்கு தெரியாது. ஆனால் என்னிடம் 6 கோடி முதல் 50 கோடிவரை பேரம் பேசப்பட்டது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad