யாழ் நகரசபை பாதீடு: செய்யப்பட்ட திருத்தங்கள் இவைதான்!! - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, December 12, 2018

யாழ் நகரசபை பாதீடு: செய்யப்பட்ட திருத்தங்கள் இவைதான்!!

2019 ஆம் ஆண்டுக்கான யாழ்.மாகர சபையின் பாதீட்டினை இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆதரித்தது.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இவ் பாதீட்டினை ஏன் ஆதாரரித்தது என்ற வினாவுக்கு விடை கிடைக்க வேண்டும் என்றால் இப் பாதீடு தொடர்பான கடந்த காலங்களை பார்க்க வேண்டும் அந்த வகையில்,

29.11.2018 அன்று முதல் முதலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தனது பதீட்டினை சபையில் சமர்பணம் செய்தது. ஆனால் ஒரு பாதீடு சமர்ப்பிப்பதற்குரிய அடிப்படைய நடைமுறைகள் பின்பற்றாமையின் காரணமாகவும் சமர்ப்பிக்கப்பட்ட பாதீட்டு ஒரு வருமான செலவுக்கூற்றாகவே காணப்ட்டதன் காரணமாகவும் அடுத்த சபை அமர்வின் ஒரு பாதீட்டுக்குரிய நியதிகளுடன் நடைமுறைகளுடன் பாதீட்டினை சமர்ப்பிக்குமாறு நாம் கேட்டிருந்தோம்.

அந்த வகையில் 07.12.2018 அன்று பாதீடு மீண்டும் சபையில் சமர்ப்பணம் செய்யப்பட்டு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அன்று சமர்ப்பிக்கபட்ட பாதீட்டினை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி 4 பிரதான காரணங்களைக் காட்டி சபையில் எதிர்த்தது.


  • •சபையின் சுய வருமானம் 911 மில்லியன் ரூபாவாக காணப்பட்டது. அதில் 355 மில்லியன் ரூபா உறுதி செய்யப்பட முடியாத நிச்சயமற்ற வருமானமாக காணப்பட்டது.
  • சபை உறுப்பினர்களின் நலநோன்புக்கு 47.37 மில்லியன் ரூபா காணப்பட்டது
  • மக்களின் சமூக நலன் மேம்பாடுக்கு குறைந்த அளவு தொகை ஒதுக்கப்பட்டிருந்தது
  • ஒரு குறிப்பிடத்தக்க புதிய பொறிமுறை செயற்றிட்ட மெதுவும் இல்லாமை


அக நிச்சயிக்கப்பட்ட 528.04 மில்லியன் ரூபாவுக்குரியதும்இ ஆடம்பரச் செலவுகள் நீக்கப்பட்ட பாதீட்டினை மீண்டும் சீர் செய்து சபையின் அடுத்த அமர்வில் சமர்ப்பிக்குமாறு நாம் மீண்டும் கோரியிருந்தோம்.
அந்த வகையில் இன்று (12.12.2108) திருத்தியமைக்கப்பட்ட பாதீடு சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

அப் பாதீட்டில் உறுப்பினர்களுக்கான நலநோன்புத் தொகை குறைக்கப்பட்டு காணப்பட்டது ஆனாலும் மக்களின் சமூக நலமேம்பாட்டுக்கும் குறைந்த அளவிலான தொகை ஒதுக்கப்பட்டு காணப்பட்டது. அத்துடன் முதல் பாதீட்டில் காணப்பட்டது போலவே ஒரு குறிப்பிடத்தக்க புதிய பொறிமுறை செயற்றிட்ட மெதுவும் காணப்படவில்லை.

இப் பாதீட்டின் விவாதத்தின் போது நாம் பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டோம்.

• பாதீட்டில் காணப்பட்ட நிர்வாகச் செலவுகளை இயலுமானவரை குறைத்து அதன் மூலம் கிடைத்த நிதியினை பிரதேச அபிவிருத்திக்கு ஒதுக்கினோம். இதன் மூலம் பாதீட்டின் ஆரம்பரத்தில் வட்டார அபிவிருத்திக்கென ஒதுக்கப்பட்டிருந்த ஒரு மில்லியன் ரூபா இறுதியில் 2.7 மில்லியன் ரூபாவாக அதிகரிப்பட்டது.

• ஒரு குறிப்பிடத்தக்க புதிய பொறிமுறை செயற்றிட்ட மெதுவும் இல்லாத நிலையில் காணப்பட்ட பாதீட்டில் யாழ்.மாநகரத்தின் முக்கிய பிரச்சனையாக காணப்படுகின்ற திண்மக் கழிவகற்றல் பொறிமுறைக்கான செயற்றிட்டம் எம்மால் முன்வைக்கப்பட்டது. எம்மால் தேர்தல் காலத்தில் முன்வைக்கப்பட்ட தூய நகரம் தூயகரங்கள் என்னும் செயற்றிட்டத்துக்கு அமைவாக அதற்கு வலு சேர்க்கும் முகமாக எம்மால் பிரேரிக்கப்பட்ட இத்திட்டத்திற்கு ஆகும் செலவு 50 மில்லியன் ரூபாவாகும். அதனை ஏற்றுக் கொண்ட சபை அதனை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்ற வகையில் 30 மில்லியன் ரூபா இப் பாதீட்டில் ஒதுக்கப்பட்டது.

ஆக முதலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பால் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட பாதீட்டினை எதிர்த்த நாம். அதன் பின்னர் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட பாதீட்டில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் தங்களது சுய ஆளுமையினால் குறிப்பிடத்தக்க பல மாற்றங்களைச் செய்து அது ஒரு மக்கள் நலம் சார்ந்த ஒரு பாதீடாக மாற்றியமைக்கப்பட்டது. இந்த மாற்றத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் கிருபாகரன் அவர்களின் பங்கு காத்திரமானது

இது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சமர்ப்பித்த பாதீடு ஆகவே அதனை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணக்கருவுடன் நாம் முதலில் எதிர்க்கவில்லை. முதலில் எதிர்த்து நிராகரித்து விட்டோம் எனவே அதே போல் தொடர்ந்தும் செயற்படவேண்டும் என்ற கொள்கைளையும் நாம் பின்பற்றவில்லை. இதனை ஒரு வினைத்pறன் மிக்க பாதீடாக மாற்றியமைக்கவேண்டும் என்பதில் மிகுந்த முனைப்புக் காட்டினோம். இதில் வெற்றியுமடைந்தோம்.ஆனால் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினர் குறித்த பாதீட்டினை மக்கள் நலம்சார்ந்த பாதீடாக மாற்றியமைப்பதற்கு எந்த வகையிலும் முயலவில்லை. அவர்கள் அதனை தொடந்து எதிர்பதிலேயே அதிக கரிசணை காட்டினர்.

ஆனால் எமது எதிர்புக்களுக்கு மத்தியில் சபையில் ஒன்றுக்கு 3 முறை சமர்ப்பிக்கப்பட்ட பாதீட்டில் பின்வரும் மக்கள்இ சமூக நலம் சார்ந்த குறிப்பிடத்தக்க மாற்றங்களை உருவாக்கி புதிய செயற்றிட்டங்களை வகுத்து குறித்த பாதீட்டை மக்கள் நலம் சார்ந்த பாதீடாக நாம் மாற்றினோம்.

• 911 ஒரு மிகைப்படுத்தப்பட்ட வருமானமாக காணப்பட்ட பாதீடு 562.6 மில்லியன் ரூபா நிச்சயிக்கப்பட்ட வருமானம் கிடைக்கும் பாதீடாக மாற்றப்பட்டது.
• 47.37 மில்லியன் ரூபாவாக காணப்பட்ட உறுப்பினர் நலநோன்புக்கான நிதி 1.15 மில்லியன் ரூபாவாக குறைக்கப்பட்டது
• ஒரு மில்லியன் ரூபாவா காணப்பட்ட வட்டார அபிவிருத்தி நிதி 2.7 மில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்பட்டது.
• திண்மக்கழிவகற்றல் பொறிமுறையை நடைமுறைப்படுத்த 30 மில்லியன் ரூபா புதிதாக ஒதுக்கீடு செய்யப்பட்டது.
• 100 மில்லியன் ரூபாவாக காணப்பட்ட ஊழியர் கடன் கொடுப்பனவு 50 மில்லியன் ரூபாவாக குறைக்கப்பட்டது.

பாதீட்டினை அலசி ஆராயாமல் விவாதிக்காமல் அதனை ஆதரிப்பதோ அல்லது எதிர்ப்பதோ ஏற்புடையது அல்ல. அதே நடைமுறையே இப் பாதீட்டில் நாம் பின்பற்றினோம். மக்கள் நலன் சாராத பாதீட்டை எதிர்த்த நாம் தொடர்ந்தும் அதனை எதிர்க்காமல் ஒரு மக்கள் நலன் சார்ந்த வினைத்திறனான பாதீடாக மாற்றியமைத்து ஆதரித்தது தமிழ்த் தேசிய மக்கள் முன்ணியின் சுய ஆளுமையின் வெளிப்பாடே ஆகும்.


வரதராஜன் பார்த்திபன்
தமிழ்த் தேசிய மக்கள் முன்ணனி
உறுப்பினர் யாழ். மாநகர சபை

No comments:

Post a Comment

Post Bottom Ad