71 ஆண்டுகளில் சிங்கள தேச ஆக்கிரமிப்பு - கஜேந்திரகுமார் - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, February 4, 2019

71 ஆண்டுகளில் சிங்கள தேச ஆக்கிரமிப்பு - கஜேந்திரகுமார்

பிரித்தானியர்களிடமிருந்து சுதந்திரம் பெற்றதை சிங்கள இனத்தவர்கள் கொண்டாடும் வேளையில், சிங்கள காலனித்துவ ஆட்சி தமிழ் தேசம் மீது செலுத்தப்பட்ட நினைவு நாளை தமிழர்கள் அனுஷ்டிப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு கிளிநொச்சி கந்தசாமி ஆலயத்திற்கு முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், " சிங்கள தேசத்தால் தமிழ் தேசம் ஆக்கிரமிக்கப்பட்டு இன்றுடன் 71ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.

சிங்கள காலனித்துவ ஆட்சி தமிழ் தேசம் மீது செலுத்தப்பட்ட 71ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.

தமிழ் மக்களுக்கு தேசிய அங்கீகாரம் கிடைக்காத வரையில், தமிழ் மக்களின் சுயநிர்ணயம் அங்கீகரிக்காத வகையில் தமிழர்கள் தொடர்ந்தும் அடிமைகளாகவே வாழ்வோம்" என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad