மாதம் இரண்டு இலட்சம் - கூட்டமைப்பின் சாணக்கிய திட்டம்!! - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, April 1, 2019

மாதம் இரண்டு இலட்சம் - கூட்டமைப்பின் சாணக்கிய திட்டம்!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாடாளுமன்ற அலுவலத்தினால் வழங்கப்படும் சம்பளம், எரிபொருள் கொடுப்பனவு மற்றும் இதர படிகளுக்கு மேலதிக கொடுப்பனவாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் மாதந்தோறும் இரண்டு இலட்சம் ரூபா வழங்கப்பட்டுவருகின்றமை அம்பலமாகியுள்ளது.

கம்பரரெலியா திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான ஊக்குவிப்புக் கொடுப்பனவாக இக் கொடுப்பனவு இலங்கை அரசின் ஆளுங்கட்சி உறுப்பினர்களான ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுவருகின்றது. அக் கொடுப்பனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டுவருகின்றமை அம்பலமாகியுள்ளது.

குறித்த கொடுப்பனவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து கடந்த வருடம் வெளியேறியிருந்த ஈபிஆர்எல்எவ் நாடாளுமன்ற உறுப்பினரான சிவசக்தி ஆனந்தனுக்கு வழங்கப்படுவதில்லை என்ற தகவலும் தெரியவந்துள்ளது. இதேவேளை குறித்த இக் கொடுப்பனவு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்படுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கம்பரெலிய திட்டத்திற்கென திட்டத்தை நடைமுறைப்படுத்த பிறிதாக நிதி ஒதுக்கப்பட்டு வழங்கப்படுகின்றபோதிலும் திட்டத்தை செயற்படுத்துவதற்கான ஊக்குவிப்புக் கொடுப்பனவு என்னும் பெயரில் குறித்த கொடுப்பனவினை ஆளுங்கட்சி உறுப்பினர்களும அவர்களுடன் இணந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும் மாதந்தோறும் பெற்றுவருகின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 உறுப்பினர்களுக்கும் கடந்த மாதக் கொடுப்பனவு அவர்களது வங்கிக் கணக்குக்கு வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் இந்த மாதக் கொடுப்பனவும் விரைவில் வழங்கப்படவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

தேர்தலை நோக்காகக் கொண்டு ஆளும் கட்சியினால் முன்னெடுக்கப்படும் கம்பரெலிய திட்டத்தில் கடந்த ஒக்ரோபரில் மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து ரணில் அரசாங்கத்தைக் காப்பாற்றியதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்வாங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad