பழிகளற்ற எம் சந்ததியின் எதிர்காலம் !!! - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, April 28, 2019

பழிகளற்ற எம் சந்ததியின் எதிர்காலம் !!!

ஒரு திறமைசாலி கவனிப்பாரற்று கவலையிலும், வறுமையிலும், அவமானத்திலும் வாழும் போது அவனின் எண்ணம் "தனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் தான் யார் என்பதை காட்டுவேன்"
என்பதாய் இருக்கும். 

அது எதிர்பார்ப்புகளற்றும் பின்விளைவுகளை பற்றி யோசிக்காததாகவும் இருக்கும். சிறிதாக ஒருவர் தட்டிக்கொடுத்தால் போதும்....சொல்ல வருவது ஒன்றே!

நாம் எதை செய்தாலும் அது எமது எதிர்கால சந்ததியை பாதித்து விட கூடாது என்ற எண்ணத்தில் இருக்க வேண்டும்....

சகல துறைகளிலும் அபாரவளர்ச்சி அடைந்த விடுதலைப்புலிகள் இயக்கம் ஆயுத ரீதியாக 2009ல் மௌனித்து போனது...

விடுதலைப்புலிகள் மௌனத்தில் வெற்றிவிழா கொண்டாடியவர்களும், குளிர்காய்ந்தவர்களும்... துரோகிகளுக்கும்.... தந்திரமாக 
விடுதலைபுலிகளின் வீரத்தையும், போராட்ட உத்திகளையும், புலனாய்வு திறமைகளையும் 

தற்போதுள்ள அசாதாரண நிலையில் தமக்கு சாதகமாக பயன்படுத்த துடிக்கிறார்கள்...
அது தமிழரை கொண்டு தமிழரை அழிக்கும் உத்தி...

"விடுதலைபுலிகள் இருந்தால் இதை இலகுவாக கையாண்டு இருப்பார்கள்"

"பல்துறை திறமை உள்ள புலிகள் இருக்க வெளிநாட்டு படைகள் எதற்கு?
முஸ்லீம் தீவிரவாதத்தை கட்டுப்படுத்த"

"அரச உதவி கேட்டால் நாங்கள் எமது திறமைகளை காட்ட தயார்"
  என்ற தொனிப்பொருள்களில் சிலதட்டிகொடுப்புக்கள் இடம்பெறுகின்றன....முஸ்லிம்கள்.... தமிழ் இன அழிப்பில் அரசுக்கு உதவியதன் வலிகளை நாளாந்தம் அனுபவித்து கொண்டிருக்கும் நிலையில்.

அதே போன்றதொரு செயலை தமிழர் தரப்பும் செய்து எமது எதிர்கால சந்ததியை அப்பழிகளுக்கு ஆளாகமால் பாதுகாப்பது ஒவ்வொரு தமிழனின் கடமை...

முஸ்லிம்களுக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கையிலும் தமிழர்கள் ஈடுபடாமல் இருப்பதே நமது எதிர்காலத்திற்கு நாம் செய்யும் நன்மைகளில் ஒன்றாக இருக்கும்...அப்படி செய்தால் அவர்களுக்கும் எமக்கும் வித்தியாசம் அற்று போய்விடும்...

அவர்கள் தாம் விட்ட பிழைகளை உணர்கிறார்கள்... தற்போது பயந்து ஒடுங்கி வாழும் சூழ்நிலையில் இருக்கிறார்கள்.... மதவாதத்தை தூண்டுபவர்களை அவர்களும் வெறுக்கிறார்கள்... மதவாதம் மூலமான தீவிரவாதத்தை அரசுக்கு அறிவித்தும் அரசு அசமந்தமாக இருந்ததாக அரசை கண்டிக்கிறார்கள்...

இதுவரை நாம் சொன்னதையே தொடர்ந்து சொல்வோம்...
அவர்கள் முஸ்லீம் சகோதரர்கள்...
மதத்தால் வேறுபட்ட தமிழர்கள்....
தமிழர் என்ற அடையாளத்துடன் வடக்குகிழக்கில் வாழ சகல உரிமையும் உடையவர்கள்....

கடந்தகால கசப்புணர்வுகளை மனிதல் கொண்டு அவர்களை பிரித்து... இழித்து.. அழிக்க .. தமிழர்களாய் துணைநிற்பதை தவிர்ப்போம்...

2009க்கு பின் அரச காவல்துறை, அரச படை 
என்பவற்றில் இணைந்து பணியாற்றும் தமிழர்கள் மற்றும் அரச மற்றும் அரசியல்வாதிகளின் கைக்கூலிகள், இதை புரிந்து செயற்படுமாறு உணர்த்த வேண்டும். 

இது முள்ளிவாய்க்காலை மறந்து விட்டதாக அர்த்தமில்லை... அதன் வலிகளை உணர்ந்தவர்கள் இன்னுமொரு இனஅழிப்பை விரும்பமாட்டார்கள்...

பதிவர் - வித்தி

No comments:

Post a Comment

Post Bottom Ad