தமிழ் கிறீஸ்த்தவ மக்கள் மீதும் ஏனைய மக்கள் மீதும் வெளிநாட்டவர்கள் மீதும் தமிழ்த் தேசத்திலும் சிங்கள தேசத்திலும் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதல் மிலேச்சத்தனமானது காட்டுமிராண்டித்தனமானது எனக் கண்டித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அதேவேளை இச்சம்பவத்தை தொடர்ந்து இஸ்லாமிய பயங்கரவாதத்தை அழித்தல் என்ற போர்வையில் தமிழ் மக்களுக்கும் முஸ்லீம் மக்களுக்கும் இடையிலான உறவை சீரழிப்பதற்கு சிறீலங்கா அரசு மேற்கொள்ளும் சதி நடவடிக்கைகளுக்கு தமிழ் முஸ்லீம் மக்கள் பலியாகிவிடாது விழிப்பாக இருக்க வேண்டும்.
ஈஸ்ரர் தினமான கடந்த 21.04.2019 ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவ தேவாலயங்களிலும் ஹேட்டல்களிலும் தீவிரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட அப்பாவிப் பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இன்று பிற்பகல் 04 மணியளவில் கொக்குவிலில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைமை அலுவலகத்தில் நல்லூரி பிரதேச சபை உறுப்பினர் வாசுகி சுதாகரன் தலைமையில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் அனைவரும் மொழுகுவர்த்திகள் ஏந்தி கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அதனையடுத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகர உறுப்பினர் வ.பார்த்திபன், சித்திராதரன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன் ஆகியோர் அஞ்சலி உரை நிகழ்த்தினர்.
No comments:
Post a Comment