கனகராஜன்குளம் சோதனை சாவடி - முட்டாள்தனமான கேள்வி - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, May 2, 2019

கனகராஜன்குளம் சோதனை சாவடி - முட்டாள்தனமான கேள்வி

கனகராஜன்குளம் சோதனை சாவடி ஒரு முட்டாள்தனமான கேள்வி
நடப்பது இதுதான்.
.....

ISIS அச்சுறுத்தலுக்காக பொலநறுவையிலும் சோதனை கெடுபிடியில்லை அனுரதபுரத்திலும் இல்லை
நேற்றிரவு மட்டக்களப்பிலிருந்து யாழ்செல்லும் கடைசிப் பேருந்து  இரவு 9.00 மணிக்குப் புறப்பட்டது. அதில் 15 பேர் அமர்ந்திருந்தனர். ஒரு பெண் ஏனையோர் ஆண்கள். 

மட்டக்களப்பு நகரிலிருந்து புறப்பட்ட பேருந்து  கனகராயன்குளம் வரும்வரை எந்த சோதனைக் கெடுபிடியுமில்லை.

புளியங்குளத்திற்கும் கனகராயன்குளத்திற்குமிடையில் சோதனைச் சாவடி ஒன்றில் அதிகாலை சுமார் 1.30 மணியளவில்  பேருந்து நிறுத்தப்பட்டது.
இராணுவச் சிப்பாய்  ஏறி அனைவரதும் அடையாள அட்டையை சோதித்தார். நித்திரையிலிருந்தவர்களை அதட்டி எழுப்பி அ.அட்டையை சோதித்தார்.
பின்னர் பேருந்து தொடர்ந்து பயணிக்க அனுமதிக்கப்பட்டது. 

மாங்குளம் பொலிஸ் நீலையத்திற்கு முன்னாலுள்ள சோதனைச் சாவடியில் அதிகாலை 2.00மணியளவில் பேருந்து மீண்டும் நிறுத்தப்பட்டது. அனைத்துப் பயணிகளும் தமது அனைத்துப் பொதிகளுடனும் இறங்கி நடந்து செல்லுமாறு கட்டளையிடப்பட்டனர். 
அனைவரரும் பொதிகளை காவிக்கொண்டு சென்றனர்.
சோதனைக்கெடுபிடிகளின் பின்னர் மீண்டும் பேருந்தில் ஏறியதும் அது யாழ் நோக்கி ஏ9 வீதி வழியே பயணத்தைத் தொடர்ந்தது. ஆனையிறவில் உள்ள இராணுவ சோதனைக் கெடுபிடிச் சாவடியில் மீண்டும் பேருந்து நிறுத்தப்பட்டது.
இராணுவச் சிப்பாய் பேருந்தில் ஏறி அனைவரதும் அடையாள அட்டைகளையும் சோதனையிட்டார்.  அதன் பின்னர் பேருந்து பயணத்தை ஆரம்பீத்தது. சுமார் 3.30 மணிக்கு யாழ் பேருந்து நிலையத்தை அடைந்தது அப் பேருந்து.
அப்பேருந்தின் பயணிகளில் நானும் ஒருவன்.
இது முன்னணியின் கஜேந்திரனின் பதிவு
.......
இப்படியான சோதனை சாவடிகள் பற்றி உங்கள் கருத்து என ஒரு ஊடகவியலாளர் கேட்டார்.
அதற்கு இதுவொரு முட்டாள்தனமான கேள்வி என்றார் சுமந்திரன்.
எங்கு சோதனை செய்யவேண்டும் செய்யதேவையில்லை என்பது பாதுகாப்பு படையினருக்கே தெரியும். எனவே முட்டாள்தனமாக கேள்வி கேட்கவேண்டாம் என்றார் அவர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad