ஆனந்தசங்கரி கேட்ட ஐந்து இலட்சம்! கல்முனை உறுப்பினர்கள்!! - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, June 26, 2019

ஆனந்தசங்கரி கேட்ட ஐந்து இலட்சம்! கல்முனை உறுப்பினர்கள்!!

5 இலட்சம் பணம் கேட்டார்கள்; கொடுக்காததால் நீக்கினார்கள்: ஆனந்தசங்கரி மீது அடுக்கடுக்காக குற்றம்சுமத்தும் நீக்கப்பட்ட உறுப்பினர்கள்!

"தமிழர் விடுதலைக்கூட்டணியின் கொள்கை பரப்பு செயலாளர் சங்கையா எங்களை தொடர்பு கொண்டு 5 இலட்சம் ரூபா கேட்டார். நாம் இல்லையென்றோம். அதனால்தான் எங்களை கட்சியை விட்டு நீக்கியுள்ளனர்" என பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தியுள்ளனர், தமிழர் விடுதலை கூட்டணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள கல்முனை பிரதி மேயர் காத்தமுத்து கணேஸ் மற்றும் சுமித்ரா ஜெகதீசன் ஆகியோர்.

இன்று அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து இந்த பரபரப்பு குற்றச்சாட்டுக்களை சுமத்தினர்.

இது தொடர்பில் காத்தமுத்து கணேஸ் தெரிவிக்கும்பொது,

கல்முனையில் 41 வருடங்களின் பின்னர் நான்தான் பிரதி மேயராக தெரிவாகினேன். இது எனக்கல்ல, தமிழ் மக்களின் வெற்றி.

கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலிற்கு முன்பு எனது சொந்தப்பணத்தில் கட்சி செயலாளரை இங்கு வரவழைத்து, சொந்த பணத்தில் மேடையமைத்து, அவரை பேச வைத்தேன்.

எனக்கும் கட்சிக்குமிடையில் எந்த பிரச்சனையுமில்லை. இப்பொழுது சிலரது கதையை கேட்டு எங்களை கட்சியை விட்டு நீக்கியிருக்கிறார். கல்முனை பிரச்சனை வந்ததன் பின்னர், நாங்கள் முஸ்லிம்களுடன் நெருக்கமாக இருக்கிறோம் என சொல்லியுள்ளனர்.

கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சங்கையா, என்னிடமும், பதவி நீக்கப்பட்ட மற்ற உறுப்பினரிடமும் தலா 5 இலட்சம் ரூபா பணம் கேட்டார். அப்படி தர என்னிடம் பணம் இல்லை என்றேன். மீண்டும் தொலைபேசியில் கேட்டார். இல்லையென்றேன்.

கடந்தமாதம் மட்டக்களப்பில் தங்கியிருந்த ஆனந்தசங்கரி, எங்களை அங்கு வரச்சொன்னார். எங்களை மாகாணசபை தேர்தலில் போட்டியிட கேட்டார். நாம் மறுத்தோம். பின்னர் துக்கமான செய்தியொன்றை சொல்லப் போவதாக கூறி, உள்ளூராட்சி உறுப்புரிமையிலிருந்து தானாக விலகும் கடிதத்தில் கையொப்பமிட கேட்டார். நான் மறுத்தேன். கைப்பையை எங்களை நோக்கி எறிந்தார். நாம் எழுந்து வந்து விட்டோம்.

இப்பொழுது எங்களை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிக்கை விட்டுள்ளார். அவர் ஒரு பெரிய தலைவர். இதுவரை நினைத்திருந்தேன், அவர் தமிழர்களிற்காக உழைக்கிறார் என. ஆனால், அவர் துரோகம் செய்கிறார் என்பது இப்பொழுதுதான் தெரிந்தது" என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad