மங்கள சமரவீரவுக்குத் தமிழர்கள் சிலரும் சில தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களும் சமூகவலைத் தளங்களில் பதிவிடும் புகழாரங்களைப் பார்க்கும்போது, எழுபது ஆண்டுகளுக்கும் மேலான தமிழர்களின் அரசியல் போராட்டம் எதற்காக நடந்தது என்றே எண்ணத் தோன்றுகிறது!!!
இலங்கைத்தீவில் இடதுசாரி, மாக்சியம், கம்யூனிஸ்ட். என்று கூறிக் கொண்டு தம்மை முற்போக்காளராகக் காண்பித்த பல தலைவர்கள் பின்னாலில் சிங்கள இனவாதத்தைக் கிளப்பியிருந்தார்கள் என்பது வரலாறு-
முற்போக்கு முற்போக்கு என்று கூவிக் கொண்டு சிங்கள பௌத்த தேசியவாத்துக்கு உழைத்த சிங்களத் தலைவர்களையே வரலாற்றில் கண்டிருக்கிறோம்.
இதற்குப் பின்னருமா இந்த முற்போக்குச் சிந்தனை கொண்ட சிங்களத் தலைவர்களை நம்புகிறார்கள் இந்தத் தமிழர்கள்? அதுவும் இத்தனை உயிரழிவுகளுக்குப் பின்னரும்---
No comments:
Post a Comment