தேர்தல் முறை­மை­யா­னது எந்த தரப்­புக்கும் அநீ­தியை ஏற்­ப­டுத்­தக்­கூ­டாது - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, August 7, 2018

தேர்தல் முறை­மை­யா­னது எந்த தரப்­புக்கும் அநீ­தியை ஏற்­ப­டுத்­தக்­கூ­டாது

மாகா­ண­சபைத் தேர்தல் விவ­கா­ர­மா­னது தொடர்ச்­சி­யாக தாம­த­ம­டைந்து செல்லும் நிலை­மையே காணப்­ப­டு­கின்­றது. தேர்­தலை விரை­வாக நடத்­த­வேண்­டு­மென அர­சியல் கட்­சி­களும் சிவில் அமைப்­புக்­களும் தேர்தல் ஆணைக்­கு­ழுவும் வலி­யு­றுத்தி வரு­கின்­ற­போ­திலும் தேர்தல் தொடர்ந்து தாம­த­ம­டையும் சமிக்­ஞை­யையே வெளிக்­காட்­டி­ வ­ரு­கி­றது. புதிய தேர்தல் முறை­மையில் அடுத்­து­வரும் மாகா­ண­சபைத் தேர்­தலை நடத்­த­வேண்­டி­யி­ருப்­பதே தற்­போ­தைய தேர்­தல்­களை நடத்­து­வதில் காணப்­படும் தாம­தத்­துக்கு பிர­தான காரணம் என்று கூறப்­பட்டு வரு­கின்­றது. எவ்­வா­றெ­னினும் இந்த விட­யத்தை காரணம் காட்டி தொடர்ந்து தேர்­தலை தாம­தப்­ப­டுத்­தக்­கூ­டாது.
13ஆவது திருத்த சட்­டத்தில் அமைந்த மாகா­ண­ச­பை­களின் கீழ் பல்­வேறு நிர்­வாக செயற்­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றன. அவை தொடர்பில் ஆராய்ந்து சாதக பாதக நிலைமை குறித்து விவா­தித்து தீர்­மானம் எடுப்­ப­தற்கு மக்கள் பிர­தி­நி­தி­களை உள்­ள­டக்­கிய மாகா­ண­ச­பைகள் இயங்க வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். மாறாக மக்கள் பிர­தி­நி­திகள் இல்­லாமல் மாகா­ண­ச­பைகள் செயற்­படும் நிலைமை நீடிப்­பது ஆரோக்­கி­ய­மாக அமை­யாது. இந்­நி­லையில் மாகாண சபைத் தேர்­தலை எந்த முறை­மையில் நடத்­து­வது என்­பது தொடர்­பாக தீர்­மானம் எடுக்கும் நோக்கில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் கடந்த புதன்­கி­ழமை இரவு நடை­பெற்ற கட்சி தலை­வர்­க­ளுக்கிடை­யி­லான விசேட கூட்­டமும் இணக்­க­ப்பாடு இன்றி நிறை­வ­டைந்­தது.
இந்த கூட்­டத்தில் கலந்து கொண்ட சிறு­பான்மை கட்சி பிர­தி­நி­திகள் மாகாண சபைத் தேர்­தலை பழைய முறைமை­யி­லேயே நடத்த வேண்டும் என மிகவும் வலு­வான முறையில் வலி­யு­றுத்­திய நிலையில் தீர்­மானம் எது­வு­மின்­றியே இந்த கலந்­து­ரை­யாடல் நிறை­வ­டைந்­தது. அது­மட்­டு­மன்றி இந்த கூட்­டத்தில் கலந்து கொள்­ளாது கூட்டு எதி­ர­ணியும் மக்கள் விடு­தலை முன்­ன­ணியும் புறக்­க­ணித்­தி­ருந்­தன. அத்­துடன் பிர­தமர் தலை­மை­யி­லான கட்சி தலைவர் கூட்­டத்­துக்கு கடி­த­மொன்றை அனுப்­பி­யி­ருந்த கூட்டு எதி­ரணி அர­சாங்கம் உட­ன­டி­யாக மாகாண சபைத் தேர்­தலை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்­தி­ருந்­தது.
இது இவ்­வா­றி­ருக்க தேர்தல் இவ்­வாறு தாம­தப்­பட்­டுக்­கொண்டு செல்­வது குறித்து கருத்து வெளியிட்­டுள்ள சுதந்­திரக் கட்­சியின் சுயா­தீன அணியின் முக்­கி­யஸ்தர் டிலான் பெரேரா எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல் நடை­பெறுமா என்­பது கேள்­விக்­கு­றி­யா­க­வுள்­ளது என்றும் குறிப்­பிட்­டுள்ளார்.
அதா­வது சுதந்­திரக் கட்­சியை பொறுத்­த­வ­ரையில் விருப்­பு­வாக்கு முறை­மையை அகற்றி புதிய தேர்தல் முறை­மையை கொண்­டு­வ­ர­வேண்டும் என்று ஆரம்­பத்தில் இருந்தே கூறி­வ­ரு­கின்­றது. எமது முயற்­சி­யி­னால்தான் உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்தல் முறை புதிய முறை­மைக்கு வந்­தது. அந்­த­வ­கை­யி­லேயே மாகா­ண­சபைத் தேர்தல் முறை­மை­யையும் மாற்­று­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டது. அதன்­படி புதிய முறை­மைக்கு ஏற்ப எல்லை நிர்­ணயம் செய்­யப்­பட்டு அது தொடர்­பான அறிக்கை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ள­து­. அது தொடர்பில் பிர­தமர் ரணில் விக்­கிர­ம­சிங்க உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டி­ய­வ­ராக காணப்­ப­டு­கின்றார். ஆனால் இது­வரை உறு­தி­யான நட­வ­டிக்கை எதுவும் எடுக்­கப்­ப­ட­வில்லை. மாறாக சர்ச்சை நிலை­மையை நீடித்­து­வ­ரு­கின்­றனர் என்றும் சுதந்­தி­ரக்­கட்­சியின் மாற்று அணியின் முக்­கி­யஸ்தர் குறிப்­பிட்­டுள்ளார்.
அதன்­படி பார்க்­கும்­போது மாகாண சபை த்தேர்­தலை தாம­தப்­ப­டுத்­து­வதே அர­சாங்­கத்தின் நோக்­க­மாக இருக்­கின்­றமை தெளி­வா­கின்­றது. ஆனால் இவ்­வாறு தேர்­தலை தாம­தப்­ப­டுத்­தாமல் விரைவில் புதிய முறை­மையில் தேர்­தலை நடத்த அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் என்று சுதந்­தி­ரக்­கட்­சியின் சுயா­தீன அணியின் முக்­கி­யஸ்தர் டிலான் பெரேரா சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.
இதே­வேளை புதிய முறை­மை­யி­லேயே தேர்தல் நடத்­தப்­ப­ட­வேண்டும் என்­ப­தனை வலி­யு­றுத்­தி­யுள்ள மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜித்த ஹேரத் எந்த முறையில் தேர்­தலை நடத்த வேண்டும் என்­பது குறித்து முதலில் அர­சாங்கம் ஒரு நிலைப்­பாட்­டை எட்ட வேண்டும் என்றும் குறிப்­பிட்­டுள்ளார்.
பழைய முறை­யிலா அல்­லது புதிய முறை­யிலா தேர்­தலை நடத்­து­வது என்­பது குறித்து அர­சாங்­கமே இன்னும் தீர்­மானம் எடுக்க முடி­யாத நிலைமை காணப்­ப­டு­கின்­றது. பிர­தான கட்­சி­களே முரண்­பா­டு­க­ளுடன் மோதிக்­கொண்­டுள்ள நிலையில் தேர்தல் நடத்­தப்­ப­டுமா என்ற சந்­தே­கமே எமக்கு உள்­ளது. கடந்த கட்சி தலைவர் கூட்­டத்­திலும் நாம் எமது தரப்பு கார­ணி­களை முன்­வைத்தும் எந்­த­வி­த­மான நிலைப்­பாடும் எட்­டப்­ப­ட­வில்லை. கட்சி தலைவர் கூட்­டங்­களை கூட்டி வாத விவாதம் செய்­வதில் எந்த பயனும் இல்லை. விவாதம் செய்து தேர்­தலை நடத்த முடி­யாது எனவும் விஜித்த ஹேரத் எம்.பி. குறிப்­பிட்­டுள்ளார்.
 அத்­துடன் தேர்­தலை நடத்­தாது பிற்­போட அர­சாங்கம் பல்­வேறு முயற்­சி­களை எடுத்து வரு­கின்­றது. இரண்டு கட்­சி­களும் இரு­வேறு நிலைப்­பா­டு­களில் இருந்­து­கொண்டு மக்­களின் வாக்­கு­ரி­மையை பறித்து வரு­கின்­றன. எம்மைப் பொறுத்தவரையில் தேர்­தலை நடத்த வேண்டும், உரிய நேரத்தில் தேர்­தல்கள் எந்த முறை­யி­லா­வது நடத்­தப்­பட வேண்டும், மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­களை பெற்­றுக்­கொ­டுக்க மாகா­ண­ச­பைகள் நிறு­வப்­பட வேண்டும் என்றும் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.
இது இவ்­வாறு இருக்க தேர்தல் கண்­கா­ணிப்பு அமைப்­பான பெப்ரல் புதிய தேர்தல் முறை­மையின் ஊடாக சிறிய கட்­சி­க­ளுக்கு ஒரு­போதும் ஆச­னங்கள் குறை­வ­டை­யாது. அந்த கட்­சிகள் பெறும் வாக்­கு­க­ளுக்கு ஏற்ப ஆசனம் கிடைக்கும் என்று தெரி­வித்­துள்­ளது. .
புதிய முறை­மையில் தேர்தல் இடம்­பெ­ற­வேண்டும். அதன் மூலமே வன்­மு­றை­களை குறைக்­கலாம். செல­வி­னங்­களை குறைக்­கலாம். வேட்­பா­ளர்­க­ளுக்­கி­டையில் போட்­டித்­தன்மை ஏற்­ப­டாது எனவும் பெப்ரல் அமைப்பு வலி­யு­றுத்­தி­யுள்­ளது.
தேர்தல் முறைமை தொடர்­பாக அண்­மைக்­கா­ல­மாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் பல்­வேறு கட்சித் தலை­வர்கள் கூட்டங்கள் நடை­பெற்­றுள்­ளன. இந்த கூட்­டங்­க­ளின்­போது எந்த முறை­மையின் கீழ் தேர்­தலை நடத்­து­வது என்­பது தொடர்பில் இணக்­கப்­பாடு எட்­டப்­ப­ட­வில்லை. மக்கள் விடு­தலை முன்­ன­ணியும் சுதந்­திரக் கட்­சியும் புதிய முறை­மையின் கீழ் தேர்­தலை நடத்த வேண்டும் என கோரி­வ­ரு­கின்ற நிலையில் சிறு­பான்மை கட்­சி­கள் பழைய முறை­மையின் கீழ் தேர்­தலை நடத்த வேண்டும் என வலி­யு­றுத்­தி­ வ­ரு­கின்றன. இத­னி­டையில் புதிய முறை­மையின் கீழ் சிறு­பான்மை கட்­சி­க­ளுக்கு அநீதி ஏற்­ப­டாது என்­பதை கூறிக்­கொண்­டி­ருக்­காமல் ஏன் புதிய முறைமை பாத­கமாக அமைந்­துள்­ளது என்­ப­தற்­கான கார­ணத்தை ஆரா­ய­வேண்டும். அதனை தவிர்த்து சிறு­பான்மை கட்­சி­க­ளுக்கு புதிய தேர்தல் முறைமை பாத­க­மாக அமை­யாது என்று தொடர்ந்து கூறு­வது ஆரோக்­கி­ய­மாக அமை­யாது. சிறு­பான்மை கட்­சி­களின் தலை­வர்கள் புதிய தேர்தல் முறைமை குறித்து ஆராய்ந்­து­விட்டே அத­னூ­டாக தமக்­கான பாதகம் குறித்து கருத்து வெளி­யிட்டு வரு­கின்­றனர். எனவே அர­சாங்கம் புதிய தேர்தல் முறை­மைக்கு செல்­லு­மாக இருந்தால் அது அனைத்துத் தரப்­பி­ன­ரதும் இணக்­கப்­பாட்­டுடன் உரு­வாக்­கப்­ப­ட­வேண்டும். அதே­போன்று அந்த விட­யத்தை காரணம் காட்டி தேர்­தலை தாம­தப்­ப­டுத்­திக்­கொண்­டி­ருக்­கக்­கூ­டாது. உள்­ளூ­ராட்­சி ­மன்­றங்­களைப் போன்று மாகாணசபைகளும் மக்களுடன் நேரடியாக ஈடுபடும் அமைப்புக்களாகும். எனவே அவற்றுக்கான தேர்தல்கள் உரிய முறையில் நடத்தப்பட்டால் மட்டுமே அதனூடாக மக்கள் தமக்குத் தேவையான பிரதிநிதிகளை தெரிவுசெய்யக்கூடிய வாய்ப்பு கிட்டும்.
எனவே இந்த விடயத்தை அரசாங்கம் கவனத்தில் கொண்டு தேர்தலை எந்த முறையில் நடத்துவது என்பது குறித்து விரைவாக ஒரு தீர்மானத்தை எடுக்கவேண்டும். இங்கு தேர்தல் முறைமையானது எந்தவொரு தரப்புக்கும் அநீதியை இழைக்கக்கூடாது என்பதையும் தேர்தல் நடைபெறுவதை இழுத்தடிக்கக்கூடாது என்பதையும் அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும். ஜனநாயகத்தின் முக்கிய அம்சமான தேர்தலானது உரிய நேரத்தில் எவருக்கும் அநீதி ஏற்படாத வகையில் நடத்தப்படவேண்டியது மிகவும் அவசியமானது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad