முல்­லைத்­தீவு கடற்­றொ­ழி­லா­ளர்­க­ளுடன் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. சந்­திப்பு - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, August 8, 2018

முல்­லைத்­தீவு கடற்­றொ­ழி­லா­ளர்­க­ளுடன் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. சந்­திப்பு

முல்­லைத்­தீவில் கடற்­றொ­ழி­லா­ளர்­களின் போராட்டம் நடை­பெறும் இடத்­துக்குச் சென்ற வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன், அவர்­களின் பிரச்­சி­னைகள் குறித்து கேட்­ட­றிந்து கொண்டார்.
முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் தடை­செய் ­யப்­பட்ட தொழில் முறைகளை நிறுத்தக் ­கோரி கடற்­றொ­ழி­லா­ளர்கள் ஆறாவது நாளாக நேற்று செவ்­வாய்க்­கி­ழமை போரா ட்­டத்தை மேற் ­கொண்­டனர்.
இந்­நி­லையில் முத­ல­மைச்­ச­ருடன் மாகாண மீன்­பி­டித்­துறை மற்றும் விவ­சாய அமைச்சர் க.சிவ­நேசன், மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளான து.ரவி­கரன், ஆ.புவ­னேஸ்­வரன் ஆகியோர் போராட்டம் நடை­பெறும் இட த்­துக்குச் சென்று கடற்­றொ­ழி­லா­ளர்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டலை மேற்­கொண்­டனர்.
கடற்­றொ­ழி­லா­ளர்­களு­ட­னான கலந்­து­ரை­யா­ட­லை­ய­டுத்து ஊட­கங்­க­ளுக்கு கருத்துத் தெரி­வித்த முத­ல­மைச்சர்,
முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் சட்­ட­வி­ரோத தொழில் முறை குறித்து என்ன நட­வ­டிக்கை எடுக்­கலாம் என அறிந்து கொள்­வ­தற்­காக மாவ ட்ட கடற்­றொ­ழி­லாளர் சங்­கங்­களின் உறுப்­பி­னர்­களை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளேன். ஒரு மணி­நேரம் அவர்­களின் பிரச்­சி­னை­களை கேட்­ட­றிந்­து­கொண்டேன். இந்தக் கலந்­து­ரை­யா­டலில் வெளிமாவட் ­டங்­க­ளி­லி­ருந்து வரு­ப­வர்­களால் அம் மீன­வர்கள் பிரச்­சி­னை­களை எதிர்­கொள்­வ­தாக தெரிந்­து­கொண்டேன்.
முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் சட்­டத்­திற்கு புறம்­பான முறையில் மீன்­பிடி தொழில்­களில் ஈடு­ப­டு­கின்­றார்கள் என்றும் இதனால் மீன்­வ­ளங்கள் மிக விரை­வாக குறைந்து செல்­கின்­றன என்றும் மீனவர் கள் தரப்­பினால் தெரி­விக்­கப்­பட்­டது. ஒரு சிலர் குறைந்த கண் இருக்­கின்ற வலை­களை பாவிக்கும் போது சிறிய மீன்கள் அதில் பிடி­ப­டு­கின்­றன. அவற்றை அவர்கள் வீணாக்­கு­கின்­றார்கள் என்றும் தெரி­வித்­துள்­ளார்கள். இந்த மீன­வர்­களின் பிரச்­சினை தொடர்பில் மீன்­பி­டித்­துறை அமைச்­ச­ருடன் பேச­வேண்­டிய தேவை எங்­க­ளுக்கு இருக்­கின்­றது. அத்­துடன் வட­மா­காண மீன்­பிடி திணைக்­க­ளத்தின் உத்­தி­யோ­க­பூர்­வ­மான அலு­வ­லகம் இங்கு இல்­லா­தது பெரும் சிர­மத்தை தந்­துள்­ள­தா­கவும் மீன­வர்கள் குறிப்­பிட்­டுள்­ளார்கள். அது சம்­பந்­த­மாக நட­வ­டிக்கை எடுத்­துக்­கொண்­டி­ருக்­கின்றோம்.
இவ்­வாறு மீன­வர்கள் பல பிரச்­சி­னை­களை கூறி­யுள்­ளார்கள். இது தொடர்பில் மத்­திய அர­சாங்­கத்­துடன் பேசி ஒரு முடி­வுக்கு வர இருக்­கின்றோம். எதிர்வரும் 12 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் இங்கு வருகை தரவுள்ளார். அதற்கு முன்னர் மக்கள் சார்பில் எங்களின் கருத்துக்களை அவர்களுக்கு தெரியப்படுத்தவுள்ளோம். ஏனைய விடயங்களை அவர்களுடன் பேசி யதன் பின்னர் தான் தீர்க்கமான முடிவுக்கு வரமுடியும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad