தேசியக் கொடி: குற்­றப்­பு­ல­னாய்வு விசா­ரணை! - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, August 8, 2018

தேசியக் கொடி: குற்­றப்­பு­ல­னாய்வு விசா­ரணை!

வடமாகாண கல்வி அமைச்சர் கலா­நிதி சர்­வேஸ்­வ­ர­னிடம் குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவு பொலிஸார் நேற்று கொழும்பில் வைத்து சுமார் 6 மணித்­தி­யா­லங்கள் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டனர்.
கடந்த வருடம் வவு­னியா, ஈரப்­பெ­ரிய­ புலம் பாட­சா­லையில் இடம்­பெற்ற நிகழ் வில் தேசியக் கொடி ஏற்­றாமை தொடர்­பி­லேயே இந்த விசா­ரணைகள் இடம்­பெற்­றுள்­ளன. இந்த விசா­ரணை தொடர்பில் பல தட­வைகள் அழைப்பு விடுக்­கப்­பட்­ட­போதும் முறை­யான பெயர், விப­ரங்கள் குறிப்­பி­டப்­ப­டாத நிலையில் நேற்று நடை­பெற்­றது. காலை 9.30 ஆரம்­ப­மான விசா­ர­ணைகள் பிற்­பகல் 3 மணிக்கே நிறைவு பெற்­றன.
இது குறித்து அவர் தெரி­விக்­கையில்,
தேசியக் கொடி ஏற்­றா­மைக்­கான காரணம் என்ன என்று கேள்வி எழுப்­பி­னார்கள். இதற்கு நான், மாகாண அமைச்­சரை மாகாண கொடி ஏற்­றவே அழைப்­பார்கள். ஆனால் அந்தப் பாட­சா­லையில் மாகாண கொடியைக் காண­வில்லை. தேசியக் கொடியை ஏற்­று­மாறு அழைப்பு விடுத்­த­போது அங்­கி­ருந்த பணிப்­பா­ளரை ஏற்­று­மாறே கூறினேன். இதற்கு அவர்கள் உங்கள் பெயரைக் கூறித்­தானே அழைத்­தார்கள் என்­றனர். அதற்கு நான் இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் தலைவர் தந்தை செல்வா இந்தக் கொடியை ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. மூவின மக்­க­ளுக்கும் ஏற்­றுக்­கொள்­ளத்­தக்க வகையில் சமத்­து­வ­மாக இந்தக் கொடி அமை­ய­வில்லை. இதனால் இக் கொடியை ஏற்­க­வில்லை.
இதற்­கா­கவே கொடி ஏற்­று­வ­தில்லை என்ற கொள்­கையை தமி­ழ­ரசுக் கட்சி வைத்­துள்­ளது. தமி­ழ­ரசு கட்­சியின் சின்­னத்தில் நான் தேர்­தலில் போட்­டி­யிட்டேன். எனவே அந்தக் கொள்­கையின் அடிப்­ப­டையில் நானும் அக் கட்­சியின் கொள்­கையை ஏற்று கையெ­ழுத்­திட்டு தேர்­தலில் போட்­டி­யிட்­ட­மை­யினால் இக்கொடியை ஏற்­ற­வில்லை. மேலும் யாப்பை ஏற்­றுக்­கொண்­டுள்­ளீர்கள் தானே எனக் கேட்­டார்கள். ஆம். யாப்பை ஏற்­றுக்­கொண்டு தான் கையெ­ழுத்­திட்டு மாகாண சபை உறுப்­பி­ன­ரானோம். இதனைத் தொடர்ந்தும் பல கேள்­வி கள் கேட்­கப்­பட்­டன. குறிப்­பாக யாப்பை ஏற்­றுக்­கொண்­டுதான் கையெ­ழுத்து இடு­கின் றோம். இதன் பின்னர் தான் அந்த யாப்பில் பல திருத்­தங்­களை படிப்­ப­டி­யாக செய்து வரு­கின்றோம். தற்­போதும் இதற்­கா­கத்தான் பாரா­ளு­மன்றம் அர­சியல் யாப்பு சபை­யாக மாற்றம் பெற்­றுள்­ளது. பல மாற்­றங்கள் வந்­து­கொண்டு இருக்கின்றன. சத்தியப்பிரமாணம் எடுத்த பின் னர் தான் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இவ்வாறு பல கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கு முறையாக பதில்கள் கூறினேன் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad