சர்வதேச மேற்பார்வை நீடிக்க மற்றுமொரு தீர்மானம் நிறைவேற்றப்படவேண்டும்! - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, August 8, 2018

சர்வதேச மேற்பார்வை நீடிக்க மற்றுமொரு தீர்மானம் நிறைவேற்றப்படவேண்டும்!

சிரேஷ்ட ஊடகவியலாளர் இரா. துரைரத்தினம் எழுதிய ‘செய்தியின் மறுபக்கம்’ நூல் வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை கொழும்பு தமிழ் சங்கத்தில் இடம்பெற்றது. இதில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆற்றிய உரை

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேரவை என்­பது அத­னு­டைய பங்­க­ளிப்பு என்ன? அதன் பிர­தி­பலன் என்ன என்­பது தொடர்பில் தமிழ் மக்­க­ளுக்கு தெளிவு­ப­டுத்த வேண்டும். 1990ஆம் ஆண்­டு­களில் ஐக்­கிய நாடுகள் மனித உரிமைக் குழு­வொன்று மாத்­தி­ரமே இருந்­தது. 2004ஆம் ஆண்­டுக்குப் பின்னரே இது பேரவையாக உரு­வாக்­கப்­பட்­டது. அதற்கு முன்னர் இப்­படி ஒரு பொறி­மு­றை­கூட இருக்­க­வில்லை. போர் முடி­வுற்ற பின்னரே ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையில் எங்­க­ளு­டைய பல விட­யங்கள் பற்றி பேசப்­பட்­டது. உல­க­ளா­விய ரீதியில் மனித உரி­மை­களைப் பாது­காக்கும் பொருட்டு குழு­வொன்­றாக உரு­வாக்­கப்­பட்டு பின்னர் பேர­வை­யாக மாற்­றப்­பட்­டது. இதில் வாக்­க­ளிக்க தகுதி பெற்ற 47 உறுப்பு நாடுகள் சேர்ந்து பேர­வையின் தீர்­மா­னங்­களை செயற்­ப­டுத்­து­கின்­றன. இந்த நாடுகள் தங்­க­ளு­டைய நாட்டின் நலனை கருத்­திற்­கொண்டே செயற்­ப­டு­கின்­றன.
மனித உரிமை மீறல் எனும்­போது ஒவ்­வொரு நாட்டின் அர­சாங்­கமும் குற்­ற­வா­ளி­யாக நிற்­கின்­றன. அத்­த­கைய நாடு­களே மனித உரிமை தொடர்­பி­லான தீர்­மா­னங்­களை மேற்­கொள்­கின்­றன. அவ்­வாறு ஆரா­யப்­படும் விட­யங்கள் தொடர்பில் ஏனைய நாடுகள் தங்­க­ளுக்கும் இத்­த­கைய குற்­றச்­சாட்டு வந்­து­வி­டுமோ என்ற அச்­சத்­தோடு தமது காய்­ந­கர்த்­தல்­களை முன்­னெ­டுக்கும்.
மனித உரிமை உயர்ஸ்­தா­னி­­க­ராலயம் என்ற அமைப்பு மனித உரிமை பாது­காப்­புக்­கென்றே அமைக்­கப்­பட்­டுள்­ளது. இவர்­க­ளு­டைய அறிக்­கைகள் சற்று வித்­தி­யா­ச­மா­னவையாகும். எனவே உறுப்பு நாடுகள் தங்­க­ளு­டைய நலன்­க­ளையும் இவ்­வ­மைப்பின் அறிக்­கை­க­ளையும் சமப்­ப­டுத்­தியே தமது செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்கும். இப்­ப­டி­யொரு பொறி­மு­றை­யைத்தான் நாம் உப­யோ­கிக்க கையி­லெ­டுத்தோம்.
தங்­க­ளு­டைய நாடுகளிலேயே மனித உரி­மை­களை மீறு­கின்ற அர­சாங்­கங்களைக் கொண்ட ஓர் அமைப்­பில்தான் இப்­ப­டி­யொரு பொறி­முறை வேண்டும் என்றோம். பாது­காப்பு சபையைப் பற்றி பல்­வேறு விமர்­ச­னங்கள் எழு­கின்­றன. ஆமாம் அங்­கி­ருந்து எமக்கு எவ்­வித நிவா­ர­ணமும் வர­ப்போ­வ­தில்லை. இங்கு பல நாடு­களின் கரி­ச­னை­களை உள்­ளடக்­கிய அறிக்­கைகள் வெளிவ­ரும்­போது சர்­வ­தே­சத்தில் தமது நாட்­டுக்கு களங்கம் வந்­து­வி­டுமோ என்ற அச்­சத்­தி­னா­லேயே நாடுகள் தமது போக்­கு­களை சற்று மாற்­றி­ய­மை­க்­கின்­றன. அவ்­வாறே நாமும் உப­யோ­கித்­தி­ருக்­கின்றோம்.
2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கை தொடர்­பான 34.1 என்ற தீர்­மா­னத்தின் காலம் முடி­வ­டையப் போகி­றது. நிறை­வ­டையும் போது அடுத்த கட்டம் என்ன என்ற கேள்வி எழக்­கூடும். அந்தச் சமயம் இன்னும் ஒரு கால அவ­காசம் வேண்­டு­மென கேட்­பீர்­களா என்ற கேள்வி வரும். அதற்கு இப்­போதே உண்மை நிலைப்­பாட்டை எடுத்துக் கூறு­வது சிறப்­பா­னது.
2015ஆம் ஆண்டு ஒக்­டோபர் முதலாம் திகதி நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மானம் முக்­கி­ய­மா­னது. அதற்கு முன்­ப­தாக 2012 ஆம் ஆண்டு ஒரு தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டது. 2013இல் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டது. அது பிர­க­டன தீர்­மானம்.
2014ஆம் ஆண்டு சர்­வ­தேச விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும், அதை சர்­வ­தேச மனித உரிமை உயர்ஸ்­தா­னிகர் அலு­வ­லகம் நடத்­த வேண்டும் என தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டது. அதனை இலங்கை அர­சாங்கம் எதிர்த்­த­போ­திலும் வாக்­க­ளிப்­பினால் அது நிறை­வேற்­றப்­பட்­டது. ஆனால் அவ்­வாறே விசா­ரணை நடந்­தது. ஆனால் உள்­நாட்டு பங்­க­ளிப்பு இல்­லாத முற்றுமுழு­தான சர்­வ­தேச விசா­ர­ணை­யாகும்.
2014ஆம் ஆண்டு தீர்­மானம் நிறை­வே­றி­ய­போது பி.பி.சி. தமிழ்ச்­சேவையினர் சம்­பந்தன் ஐயா­விடம் ஒரு கேள்­வியைக் கேட்­டனர். அதில் சர்­வ­தேச விசா­ரணை இல்லை, அப்­ப­டி­யாயின் ஏன் இதனை ஆத­ரிக்­கிறீர்கள் என்­று கேட்டனர். அப்போது ஐயா விசா­ர­ணையை நடத்­தி­யது உள்­நாட்­ட­வரா என்று கேட்டார். அத்­துடன் பேட்டி முடிந்­தது.
அந்த விசாரைணை அறிக்கை 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளிவர தயா­ராக இருந்த நிலையில் புதிய அர­சாங்கம் அதனை வெளியிட தாம­திக்­கு­மாறு கேட்டது. பின்னர் 2015 செப்­டெம்பர் 16ஆம் திகதி ஜெனி­வாவில் அல் ஹுசை னால் அறிக்கை வெளியி­டப்­பட்­டது.
அப்­போது ஊட­க­வி­ய­லாளர் ஒருவர் இதில் இனப்­ப­டு­கொலை தொடர்பில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளதா எனக் கேட்­ட­போது அது தொடர்பில் சான்­றுகள் இன்னும் கிடைக்­க­வில்லை என்ற பதில் வந்­தது.
சர்­வ­தேச குற்­றங்­களில் மிக மோச­மா­னதே இனப்­ப­டு­கொ­லைதான். ஆனால் இனப்­ப­டு­கொலை என்ற வார்த்தைப் பிர­யோகம் பிழை­யா­னது. துன்­பு­றுத்தல் என்­பது ஏற்றுக் கொள்­ளக்­கூ­டி­யது. நிரூ­பிக்க கடி­ன­மா­ன­வற்றை அதில் சேர்க்­க­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.
2015 செப்­டெம்பர் 16ஆம் திகதி அறிக்கை வெளிவந்த பின்னர் 30.1 என்ற முக்­கி­ய­மான தீர்­மானம் ஜெனிவாவில் நிறை­வேற்­றப்­பட்­டது. 2014ஆம் ஆண்டு இலங்கை குறித்த தீர்மானத்துக்கு நாடுகள் வாக்­களித்ததுடன் இலங்கை அதற்கு எதி­ராக செயற்­பட்டு நிறை­வேற்­றப்­பட்டது. அதன் பின்னர் சர்­வ ­தேச விசா­ரணை இடம்­பெற்­றது.
ஆனால் 2015ஆம் ஆண்டு ஒக்­டோபர் முதலாம் திகதி நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மானம் இலங்கை அரசின் இணை அனு­ச­ர­ணை­யோடு இடம்­பெற்­றமை குறிப்­பி­டத்­தக்­கது. ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் எடுக்­கப்­பட்ட தீர்­மானம் ஒரு நாட்­டையும் கட்­டுப்­ப­டுத்­து­வது கிடை­யாது. ஆனால் அந்­நாட்டின் இணை அனு­ச­ர­ணை­யின்றி நிறை­வேற்ற முடி­யாது. 30.1 எனும் தீர்­மானம் இலங்கையின் இணை அனு­ச­ர­ணை­யோடு நிறை­வேற்றப்பட்ட தீர்­மானம்.
இலங்கை ஒன்­றரை வருட காலத்­திற்குப் பிறகு 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் 34.1 என்ற இரண்­டா­வது தீர்­மா­னத்­திற்கு இணை அனு­ச­ரணை வழங்­கி­யுள்­ளது. இது உல­கத்­திற்கு கொடுத்த வாக்­கு­று­தியாகும்.
30.1 தீர்­மா­னத்தில் 18 மாத காலத்­திற்கு இதனை மனித உரிமை உயர்ஸ்­தா­னிகர் அலு­வ­லகம் மேற்­பார்வை செய்ய வேண்டும். 9 மாத காலத்­திற்குப் பின் வாய் மூல அறிக்­கையும் 18 மாத காலத்­திற்குப் பின் எழுத்து மூல அறிக்­கையும் கொடுக்க வேண்டும் என்று சொல்­லப்­பட்­டி­ருந்­தது.
அதன்பின் சர்­வ­தே­சத்தின் பார்வை இருக்­காது என்ற காரணத்­தி­னால்தான் இன்­னு­மொரு தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட வேண்டும் என்றோம். அதற்கு கால அவ­காசம் கொடுத்ததால் அடுத்த இரண்டு வரு­டத்­திற்கு சர்­வ­தே­சத்தின் பார்வை நீடிக்க வேண்டும். எனவே 2017 மார்ச்சில் நீடிக்­கப்­பட்­டது சர்­வ­தே­சத்தின் மேற்­பார்­வையே தவிர சர்­வ­தே­சத்தின் கால அவ­காசம் அல்ல.
இது தொடர்பில் எந்தவொரு ஊட­கமும் மக்­க­ளுக்கு தெரி­விக்­க­வில்லை. என்னைக் கேட்டால் இன்னும் ஒரு தீர்­மானம் நிறை­வேற்­றப்பட வேண்டும். சர்­வ­தே­சத்தின் கால அவ­காசம் நீடிக்க வேண்டும். பிர­தான விட­யங்கள் நிறை­வேறும் வரை சர்­வ­தே­சத்தின் மேற்­பார்­வையும் நீடிக்க வேண்டும்.
சர்­வ­தே­சத்­தினால் அழுத்தம் மட்­டுமே கொடுக்க முடியும். கட்­டுப்­ப­டுத்த முடி­யாது. எனவே அர­சாங்கம் நாட்டின் பேருக்குப் பங்கம் இல்­லாத வகையில் செயற்­பட கால அவ­கா­சத்தை நீடித்துக் கொண்டே செல்லும். இந்­நி­லையில் பலரும் குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைக்­கின்­ற­னரே தவிர மாற்று வழி­மு­றை­களை ஒரு­வரும் முன்­வைப்­ப­தில்லை. இருக்­கின்­றதை ஆளு­மை­யுடன் பிர­யோ­கிக்கத் தெரி­யாமல் எதற்­காக தடு­மாற வேண்டும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad