தொடரும் அக்கறையற்ற போக்கு! - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, August 8, 2018

தொடரும் அக்கறையற்ற போக்கு!

மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்­குற்றச் செயற்­பா­டுகள் தொடர்பில் பொறுப்புக்கூறு­வ­தற்­கான கடப்­பாட்டை ஏற்­றுள்ள அர­சாங்கம் அவற்றை உரிய முறையில் நிறை­வேற்­ற­வில்லை என்று பர­வ­லாகக் குறை கூறப்­ப­டு­கின்­றது. சாதா­ரண குறை கூறு­த­லாக இல்­லாமல், அழுத்­த­மான குற்­றச்­சாட்­டா­கவே அந்த அதி­ருப்தி முன்­வைக்­கப்­பட்­டி­ருப்­பதைக் காண முடி­கின்­றது.
பொறுப்புக்கூறும் விட­யத்தில் முக்­கி­ய­மாக பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தை நீக்க வேண்டும் என்ற கடப்­பாட்டை நிறை­வேற்­று­கின்ற பொறுப்பை அர­சாங்கம் கிடப்பில் போட்­டுள்­ளது என்­பது முக்­கி­ய­மா­னது. இந்தச் சட்­டத்தை இல்­லாமற் செய்­வ­தற்கு அர­சாங்­கத்­திற்கு விருப்­ப­மில்லை. எனவே, அது அந்தச் சட்­டத்தை ஒழிக்கப்போவ­தில்லை என்று அர­சியல் கைதி­களின் விடு­த­லைக்­காகப் போராடி வரு­ப­வர்கள் அடித்துக் கூறி­யி­ருக்­கின்­றார்கள். 
பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழ் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்ட பலர் விசா­ர­ணை­க­ளின்றி பல வரு­டங்­களாக சிறைச்­சா­லை­களில் அடைத்து வைக்­கப்­பட்­டி­ருந்­தார்கள். அவர்­களில் ஒரு தொகு­தி­யினர் படிப்­ப­டி­யாக விடு­தலை செய்­யப்­பட்­டி­ருந்தபோதிலும், விடு­த­லை­யின்­றியும், சட்ட ரீதி­யான துரித நட­வ­டிக்­கைகள் இல்­லா­மலும் இன்னும் ஒரு தொகு­தி­யினர் சிறைச்­சா­லை­களில் சொல்­லொணா துய­ரங்கள், கஷ்­டங்­க­ளுக்கு மத்­தியில் வாடு­கின்­றார்கள். அவர்­களின் விடு­த­லைக்­காக கைது செய்­யப்­பட்­ட­வர்­களின் உற­வி­னர்­களும், அவ­ர்­க­ளுக்கு ஆத­ர­வான அமைப்­புக்­களைச் சேர்ந்­த­வர்­களும் போராடி வரு­கின்­றனர். 
அர­சாங்கம் பொறுப்புக்கூறும் விட­யத்தில் அக்­க­றை­யற்ற போக்­கையே கடைப்­பி­டித்து வரு­கின்­றது என்­பதை வெளிப்­ப­டுத்­து­வ­தற்கு இந்தத் தொடர்ச்­சி­யான போராட்­டமும் முக்­கி­ய­மான நடை­முறைச் சாட்­சி­யங்­களில் ஒன்­றாகத் திகழ்­கின்­றது.
போர்க்­குற்­றச்­சாட்­டுக்கள் உள்­ளிட்ட உரிமை மீறல்­க­ளுக்கு பொறுப்புக்கூறு­வ­தாக சர்­வ­தேச அரங்­கா­கிய ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் அமெ­ரிக்­கா­வினால் முன்­வைக்­கப்­பட்ட 30-/1 தீர்­மா­னத்தை முழு­மை­யாக நிறை­வேற்­று­வ­தாக இலங்கை அரசு ஒப்­புதல் அளித்து, இணை அனு­ச­ரணை வழங்­கி­யி­ருந்­தது. அது மட்­டு­மல்­லாமல், அந்தத் தீர்­மா­னத்தை நிறை­வேற்­று­கின்ற கைங்­க­ரி­யத்தின் தொடர்ச்­சி­யாகக்  கொண்டு வரப்­பட்ட ஐ.நா.வின் 34-/1 தீர்­மா­னத்தின் பரிந்­து­ரை­க­ளையும் நிபந்­த­னை­க­ளையும் அரசு ஏற்­றுக்­கொண்­டி­ருந்­தது. அதற்கும் இணை அனு­ச­ரணை வழங்­கி­யி­ருந்­தது. இதன் மூலம் ஐ.நா.வின் தீர்­மா­னங்­களை நிறை­வேற்­று­வ­தற்­காக அர­சுக்கு மேலும் 2 வருட கால அவ­காசம் வழங்­கப்­பட்­டி­ருந்­தது.
சர்­வ­தேச மட்­டத்தில் ஒப்­புக்­கொள்­ளப்­பட்­ட­வாறு பொறுப்புக்கூறும் விட­யத்தில் நிலை­மா­று­கால நீதியை நிலை நாட்­டு­வ­தா­கவும், அதற்­கான 4 பொறி­மு­றை­களை உரு­வாக்கிச் செயற்­ப­டுத்­து­வ­தா­கவும் விரி­வான முறையில் அந்த இணக்­கப்­பாட்டை அரசு ஏற்­றுக்­கொண்­டி­ருந்­தது. 
ஆனால் நடை­மு­றையில் அந்தத் தீர்­மா­னங்­களை நிறை­வேற்­று­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் திருப்தியளிக்கும் வகையில் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை என்று ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ளரும், அவரைத் தொடர்ந்து மனித உரிமை தொடர்­பான பல்­வேறு பிரி­வு­க­ளுக்­கான விசேட ஐ.நா. அறிக்கையா­ளர்­களும் இலங்­கைக்­கான தமது விஜ­யங்­களின் பின்னர் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தனர். 
அர­சாங்­கத்தின் ஒத்­து­ழைப்­புடன் மேற்­கொள்­ளப்­பட்ட இந்த விஜ­யங்­களின்போது ஐ.நா. மனித உரிமை சார்ந்த விசேட அறிக்­கை­யா­ளர்கள் நாட்டின் பல இடங்­க­ளுக்கும் சென்று பல்­வேறு தரப்­பி­ன­ரையும் சந்­தித்து, உண்­மை­யான அடி­மட்ட நிலை­மைகள் என்ன என்­பதை அறிந்­தி­ருந்­தார்கள். அந்த விஜ­யங்கள் ஆய்வு ரீதி­யான விஜ­யங்கள் என்­பதை அந்த விஜ­யங்­களின் பின்னர் வெளி­யி­டப்­பட்ட அறிக்­கைகள் உணர்த்­தி­யி­ருக்­கின்­றன. 
அர­சாங்கம் ஐ.நா. தீர்­மா­னங்­களை நிறை­வேற்­று­வ­தாக உறு­தி­ய­ளித்­தி­ருந்த போதிலும், அவற்றை நிறை­வேற்­று­வதில் போதிய அக்­க­றையோ கரி­ச­னையோ காட்­ட­வில்லை என்­பதை இந்த அறிக்­கைகள் நிரூபித்­தி­ருக்­கின்­றன. சுருக்­க­மாகக் கூறு­வ­தானால் யுத்­தத்தின் பின்னர் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்கு உறு­தி­யான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும் என்ற நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்த ஆட்சி மாற்றம் ஏமாற்­றத்­தையே பரி­சாக அளித்­தி­ருக்­கின்­றது என்ற பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­களின் உணர்­வு­களை இந்த அறிக்­கைகள் உறு­திப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றன. 
சர்­வ­தேச அரங்கில் கூறு­வதை களத்தில் - உள்­நாட்டில் நிறை­வேற்­று­வ­தற்­கு­ரிய சூழலை ஏற்­ப­டுத்­தவோ அல்­லது அவற்றை முக்­கி­ய­மாகக் கருதி, அர­சியல் வெளிக்கு அப்பால் நின்று செயற்­ப­டுத்­தவோ அர­சாங்கம் ஒரு­போதும் முயன்­ற­தில்லை. ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் சர்­வ­தேச விசா­ரணை என்ற அம்­சத்தை (முழு­மை­யான சர்­வ­தேச விசா­ர­ணை­யா­கவோ அல்­லது சர்­வ­தே­சத்தின் பங்­க­ளிப்­புடன்கூடிய விசா­ர­ணை­யா­கவோ நடத்தி பொறுப்புக்கூறு­வ­தற்கு) ஏற்­றுக்­கொண்­டி­ருந்­தா­லும்­கூட, நாட்டில் அந்த நிலைப்­பாட்­டுக்கு முர­ணான வகை­யி­லேயே அர­சாங்கம் கருத்­துக்­களை வெளி­யிட்டு வரு­கின்­றது. அத்­த­கைய கருத்­துக்­க­ளுக்கு செயல் வடிவம் கொடுப்­ப­தி­லேயே ஆர்வம் காட்டி வரு­கின்­றது. இது ஒரு வகையில் சர்­வ­தே­சத்தை – குறிப்­பாக ஐ.நா. உரிமைப் பேர­வைக்கு, போக்குக்காட்­டு­கின்ற ஒரு செயற்­பா­டா­கவே அமைந்­துள்­ளது. அத்­துடன் சர்­வ­தே­சத்தை ஏமாற்­று­கின்ற ஒரு நட­வ­டிக்­கை­யா­கவும் காணப்­ப­டு­கின்­றது என்றால் அது மிகை­யா­காது.
பயங்­க­ர­வாதம் ஒழிக்­கப்­பட்­டதன் பின்னர் பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் ஏன்?
மனித உரிமை மீறல்­க­ளுக்கும் போர்க்­குற்றச் செயற்­பா­டு­க­ளுக்கும் பொறுப்புக் கூறு­வது,  பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நியா­ய­மான முறையில் நீதி வழங்கி, நிவா­ரண நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து உள்­நாட்டில் ஆயுத முரண்­பாடு ஒன்று மீண்டும் ஏற்­ப­டாத வகையில் நிலை­மை­களை உறு­திப்­ப­டுத்­து­வது என்­பதே சர்­வ­தே­சத்­திற்கு அரசு வழங்­கிய வாக்­கு­று­தி­களின் அடிப்­படை அம்­சங்­க­ளாகும். 
யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வந்­ததன் மூலம் நாட்டில் பயங்­க­ர­வாதம் ஒழிக்­கப்­பட்­டு­வி­ட்­டது என்­பது அர­சாங்­கத்தின் உறு­தி­யான நிலைப்­பாடு. யுத்­த­மோ­தல்கள் முடி­வ­டைந்­ததன் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் பயங்­க­ர­வாதச் செயற்­பா­டுகள் எதுவும் இடம்­பெ­ற­வில்லை என்று அர­சாங்­கமே அறி­வித்­தி­ருக்­கின்­றது. நாட்டில் பயங்­க­ர­வாத நிலை­மைகள் தொடர்பில் அர­சாங்கம் முழு­மை­யான அளவில் திருப்தி கொண்­டி­ருப்­ப­தையே இந்த அறி­விப்பு சுட்­டிக்­காட்­டு­வ­தாக அமைந்­தி­ருக்­கின்­றது.
ஆனால் பயங்­க­ர­வாதம் ஒழிக்­கப்­பட்­டு­விட்ட ஓரி­டத்தில் பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் ஏன் நடை­மு­றையில் இருக்க வேண்டும் என்­பது தெரி­ய­வில்லை. பயங்­க­ர­வாதம் இல்­லை­யென்றால், பயங்­க­ர­வா­தத்தை இல்­லாமல் ஒழிப்­ப­தற்­காகக் கொண்டு வரப்­பட்ட பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தை நீக்­கி­வி­டு­வதே நியா­ய­மான செயற்­பா­டாகும். 
பயங்­க­ர­வாதம் இல்­லாத இடத்தில் பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தை இன்னும் வைத்­தி­ருப்­ப­தையும், அதனை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தையும் எந்த வகையில் நியா­யப்­ப­டுத்த முடியும் என்று தெரி­ய­வில்லை.   
பயங்க­ர­வாதத் தடைச்­சட்­டமும், அதற்கு உறு­து­ணை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட அவ­ச­ர­காலச்சட்­டமும், பாது­காப்புப் படை­யி­ன­ருக்கும் பொலி­ஸா­ருக்கும் வழங்­கிய அள­வற்ற அதி­கா­ரங்­களே, மனித உரிமை மீறல்­க­ளுக்கும், சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்ட மீறல்­க­ளுக்கும் அடிப்­படை கார­ணங்­க­ளாக அமைந்­தன. பயங்­க­ர­வா­தத்தை ஒழித்­து­விட வேண்டும் ஒழிக்க வேண்டும் என்ற எண்­ணப்­பாட்­டை­விட எப்­ப­டியும் பயங்­க­ர­வா­தத்தை ஒழித்­து­விட வேண்டும் என்­ப­தி­லேயே முன்­னைய அரச தலைவர் மஹிந்த ராஜ­பக் ்ஷவும், அவ­ரு­டைய சகோ­த­ர­ரா­கிய பாது­காப்பு அமைச்சின் செய­லா­ள­ராக இருந்த கோத்­த­பாய ராஜ­பக் ்ஷவும் முனைப்புக்கொண்டு செயற்­பட்­டி­ருந்­தார்கள். அரச தரப்பு அர­சி­யல்­வா­தி­களும், பௌத்த சிங்­களத் தேசிய வாதி­களும், பௌத்த மத தீவிர போக்­கு­டைய பௌத்த மதத்தலை­வர்­களும் இவர்­க­ளிலும் பார்க்க தீவி­ர­மாக இருந்து ஒத்­து­ழைத்துச் செயற்­பட்­டி­ருந்­தார்கள். 
நீண்­ட­கா­ல­மாக அடக்­கு­மு­றைக்கும், அடிப்­படை உரிமை மறுப்­புக்கும் உள்­ளா­கி­யி­ருந்த தமிழ் மக்­களின் நியா­ய­மான அர­சியல் உரி­மைக்­கான ஆயுதப் போராட்­டமே பயங்­க­ர­வா­த­மாக சித்­த­ரிக்­கப்­பட்டு, அடித்து நொறுக்கி இல்­லாமல் செய்­யப்­பட்­டது என்­பது இந்தப் பின்­ன­ணியில் கவ­னத்திற்கொள்ள வேண்­டி­யது முக்­கியம். பயங்­க­ர­வாதம் என்ற போர்­வையில் தமிழ் மக்­களின் இறை­மை­யையும், இந்த நாட்டின் குடி­மக்கள் என்ற ரீதி­யி­லான அடிப்­படை அர­சியல் உரி­மை­க­ளையும் இல்­லாமற் செய்­வ­தையே அரச தரப்­பினர் நோக்­க­மாகக்கொண்­டி­ருந்­தனர். 
அந்த நோக்கம் இன்னும் தொடர்­கின்­றது என்­ப­தையே நல்­லாட்சி அர­சாங்கம் என்று அழைக்­கப்­ப­டு­கின்ற ஜன­நா­ய­கத்தைப் பாது­காப்­ப­தற்­காக ஆட்சி மாற்­றத்தின் மூலம் அதி­கா­ரத்தைக் கைப்­பற்றி ஆட்சி செலுத்­து­கின்ற இன்­றைய அரச தரப்­பி­ன­ரது செயற்­பா­டு­களும் பிர­தி­ப­லிக்­கின்­றன. 
பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் இல்­லாமற் செய்­யப்­பட வேண்டும் என்­பது ஐ.நா. மனித உரிமைப் பேரவைத் தீர்­மா­னத்தின் முக்­கிய அம்­சங்­களில் ஒன்­றாகும். அந்த சட்டம் மனி­தா­பி­மா­னத்­துக்கு முர­ணான அதி­கா­ரங்­களைக் கொண்­டி­ருக்­கின்­றது. அடிப்­படை மனித உரி­மை­களை மீறு­கின்ற அதி­கா­ரங்­களைப் படை­யி­ன­ருக்கு வழங்­கி­யி­ருக்­கின்­றது. இத­னா­லேயே, பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தை இல்­லாமல் ஒழிக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைப் பேரவை இலங்­கைக்கு எதி­ரான தீர்­மா­னத்தில் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்­றது. 
பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் தன்­மைகள் 
பயங்­க­ர­வா­தத்தை ஒழிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தற்கு அள­வற்ற அதி­கா­ரங்­களை பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் வழங்­கு­கின்­றது. பயங்­க­ர­வா­தத்­திடமிருந்தும் பயங்­க­ர­வாதச் செயற்­பா­டு­களிலிருந்தும் நாட்டைப் பாது­காப்­ப­தற்­கா­கவே பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் கொண்டு வரப்­பட்­ட­தாகக் கூறப்­பட்­டது. ஆனால், தமி­ழர்கள் பெரும்­பான்­மை­யா­கவும் வர­லாற்று ரீதி­யாகப் பாரம்­ப­ரி­ய­மா­கவும் வாழ்­கின்ற பிர­தே­சங்­க­ளா­கிய வடக்­கிலும் கிழக்­கி­லுமே அது முழு அளவில் பயன்­ப­டுத்­தப்­பட்­டது. தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக – குறிப்­பாக தமிழ் இளைஞர், யுவ­தி­க­ளுக்கு எதி­ராக மட்டும் என்ற போக்கில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டது. 
ஐக்­கிய தேசிய கட்­சியின் முக்­கிய தலை­வர்­களில் ஒரு­வரும் நாட்டின் முத­லா­வது நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தி­யாகக் கோலோச்­சி­ய­வ­ரு­மா­கிய ஜே.ஆர். ஜய­வர்­த­னவின் ஆட்­சிக்­கா­லத்தில் 1979ஆம் ஆண்டு தற்­கா­லிக சட்­ட­மாக 'பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் (தற்­கா­லிக ஏற்­பா­டுகள்) என்ற பெயரில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டது. அது பின்னர் 1982ஆம் ஆண்டு நிரந்­தர சட்­ட­மாக்­கப்­பட்டு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டது.
தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல் விடுக்­கின்றார். அல்­லது தேசிய பாது­காப்­புக்கு எதி­ராகச் செயற்­ப­டு­கின்றார் என்று வெறு­மனே சந்­தே­கித்­தாலே ஒரு­வரை படை­யினர் கைது செய்ய முடியும். அதற்­கான அதி­கா­ரத்தை பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் வழங்­கி­யுள்­ளது. சந்­தே­கத்­திற்கு உரி­ய­வர்கள் நட­மா­டு­வ­தாகக் கரு­தப்­ப­டு­கின்ற இடங்கள், அவர்கள் இருக்­கின்ற இடங்கள் என்­ப­னவற்றைச் சுற்றிவளைத்து சோத­னை­யி­டவும், அவர்­களைக் கைது செய்­யவும், விசா­ர­ணை­க­ளுக்­காக அவர்­களைத் தடுத்து வைக்­கவும் இந்தச் சட்டம் படை­யி­ன­ருக்கு அதி­காரம் அளித்­தி­ருக்­கின்­றது.
பயங்­க­ர­வாதம் என்றும் பயங்­க­ர­வா­திகள் என்றும் பர­வ­லா­கவும் பெரி­து­ப­டுத்­தியும் நாட்டில் பேசப்­ப­டு­கின்­றது. பயங்­க­ர­வா­தத்தை ஒழிப்­ப­தற்­கான இரா­ணுவ நட­வ­டிக்­கையை உள்­ள­டக்­கிய யுத்தம் முடி­வுக்குக் கொண்டுவரப்­பட்டு 9 வரு­டங்கள் கழிந்­து விட்­டன. ஆனால்,  பயங்­க­ர­வாதம் பற்­றிய அச்சம் நீக்­கப்­ப­ட­வில்லை. பயங்­க­ர­வா­திகள் பற்­றிய அச்­சு­றுத்­தலும் நீக்­கப்­ப­ட­வில்லை. அர­சியல் ரீதி­யாக இந்த அச்­சமும், அச்­சு­றுத்­தலும் திட்­ட­மிட்ட வகை­யி­லான செயற்­பா­டு­களின் மூலம் ஆட்­சி­யா­ளர்­க­ளி­னாலும் சிங்­கள பௌத்த தேசி­ய­வா­தி­க­ளி­னாலும் இன்னும் உயி­ரோட்­ட­மாகக் கடைப்­பி­டிக்­கப்­ப­டு­கின்­றது. 
பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்தி, பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ரா­கவும், பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு எதி­ரா­கவும் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்ட போதிலும், அந்தச் சட்­டத்தில் பயங்­க­ர­வா­திகள் என்றால் யார், பயங்­க­ர­வாதம் என்றால் என்ன என்­ப­தற்கு வரை­வி­லக்­கணம் கொடுக்­கப்­ப­ட­வில்லை. வெறு­மனே தேசிய பாது­காப்­புக்கும் நாட்டின் ஒரு­மைப்­பாட்­டிற்கும் எதி­ரான செயற்­பா­டு­களில் ஈடு­ப­டு­கின்­றார்கள் என்ற சந்­தே­கத்­திற்கு உரி­ய­வர்­க­ளையும், அத்­த­கைய எதிர் நட­வ­டிக்­கைகள் என விப­ரிக்­கப்­பட்ட நட­வ­டிக்­கை­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்­க­ளையும் கைது செய்து விசா­ரணை செய்து தண்­டிப்­ப­தற்கே பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் பயன்­ப­டுத்­தப்­பட்டு வந்­துள்­ளது. பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. 
அது மட்­டு­மல்­லாமல், பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­ப­டு­ப­வர்­களை விசா­ர­ணை­க­ளுக்­காக, நீதி­மன்­றத்தின் உத்­த­ர­வின்றி தடுத்து வைத்­தி­ருப்­ப­தற்கும் அதி­காரம் வழங்­கப்­பட்­டுள்­ளது. தொடர்ச்­சி­யாக 18 மாதங்கள் - ஒன்­றரை வரு­டத்­திற்கு பயங்­க­ர­வா­தத்­துடன் தொடர்­பு­டை­யவர் என்ற சந்­தே­கத்தில் கைது செய்­யப்­பட்­ட­வரைத் தடுத்து வைப்­ப­தற்கும் அதி­காரம் வழங்­கப்­பட்­டுள்­ளது. 
வேடிக்­கை­யான நிலை­மைகள்
நாட்டில் மக்­க­ளு­டைய பாது­காப்­பையும் அர­சாங்­கத்தின் பாது­காப்­பையும் பேணிப்­பா­து­காப்­ப­தற்­கென பல்­வேறு சட்­டங்கள் இருக்­கின்­றன. அதற்­கான சட்­டங்கள் அதி­கார பல­முள்­ள­வை­யா­கவும், நீதித்­து­றையின் நட­வ­டிக்­கை­க­ளுடன் இணைந்­த­வை­யா­கவும் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. இந்தச் சட்­டங்கள் குற்றம் புரி­ப­வர்­க­ளுக்கு எதி­ராகக் குற்­றச்­செ­யல்­களின் தன்­மைக்கு ஏற்ற வகையில் விசா­ரணை செய்­வ­தற்கும், விசா­ர­ணை­களின் முடிவில் நீதி­மன்­றத்தின் ஊடாக சட்­ட­ரீ­தி­யாக உரிய தண்­ட­னை­களை வழங்­கு­வ­தற்­கான ஏற்­பா­டு­களும் இருக்­கின்­றன. அந்த ஏற்­பா­டு­களில் குற்றச் செயல் ஒன்றில் சம்­பந்­தப்­பட்­டி­ருக்­கின்றார் அல்­லது குற்றம் ஒன்றைப் புரிந்­துள்ளார் என்ற சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­ப­டு­பவர் நீதி­மன்­றத்தில் நிறுத்­தப்­பட வேண்டும் என்று அந்த சட்­டங்கள் வலி­யு­றுத்­து­கின்­றன. அந்த விதியை மீறு­ப­வர்கள் நீதி­மன்­றத்­தினால் கேள்­விக்கும் விசா­ரணைக்கும் உள்­ளாக்­கப்­ப­டு­வார்கள். 
ஆனால் பயங்­க­ர­வாதத் தடைச்­ச­ட்டத்தின் கீழ் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­ப­டு­கின்ற ஒருவர் உண்­மையில் பயங்­க­ர­வா­தத்­துடன் அல்­லது பயங்­க­ர­வா­தி­க­ளுடன் தொடர்பு கொண்­டி­ருக்­கின்றார் என்­பதை உறு­திப்­ப­டுத்தும்வரையில் நீதி­மன்­றத்தின் அனு­மதி இல்­லா­மலே தடுத்து வைப்­ப­தற்கு அதி­கா­ர­ம­ளிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. 
ஆரம்ப நிலை­யா­கிய ஒன்­றரை வரு­டங்கள் தடுத்து வைத்­தி­ருக்க முடியும் என்­ப­தற்கும் அப்பால், அவரைத் தொடர்ந்தும் விசா­ர­ணைக்­காகத் தடுத்து வைத்­தி­ருக்க வேண்­டு­மானால், அதற்­கான அனு­ம­தியை வழங்­கு­வ­தற்­கு­ரிய அதி­காரம் பாது­காப்பு அமைச்சின் செய­லா­ள­ருக்கு பாது­காப்பு அமைச்­சரின் சார்பில் வழங்­கப்­பட்­டுள்­ளது.
குற்றச் செயல்கள் எது­வா­னாலும் அதனை விசா­ரித்து நீதி வழங்கும் பொறுப்பு நீதிப்பொறி­மு­றைக்கே உள்­ளது. பக்­க­ச்சார்­பின்றி நியா­ய­மான முறையில் விசா­ரணை நடத்தி நீதி வழங்­கப்­பட வேண்டும் என்­ப­தற்­கா­கவே நீதிப்­பொ­றி­மு­றையின் கீழ் நீதி­மன்­றங்­களும் ஏனைய கட்­ட­மைப்­புக்­களும் உரு­வாக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. 
சாட்­சி­களின் பாது­காப்பு உறு­திப்­ப­டுத்­தப்­ப­டு­வது, முறைப்­பாட்­டா­ளர்­க­ளுக்கு அச்­சு­றுத்­தலும்,  ஆபத்தும் ஏற்­ப­டாமல் பாது­காப்­பது உள்­ளிட்­டவை மட்­டு­மல்­லாமல், குற்றம் புரிந்தார் என்ற சந்­தே­கத்­திற்கு உரி­ய­வரின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­து­வதும் நீதிப்பொறி­மு­றையின் தலை­யாய பொறுப்­பாகும். இந்த நட­வ­டிக்­கைகள் பக்­கச்சார்­பின்றி, அர­சியல் கலப்­பின்றி, அர­சியல் நலன்கள் சார்ந்த செயற்­பா­டு­க­ளின்றி நடு­நி­லையில் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும். 
பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழ் சந்­தேக நபர் ஒரு­வரைத் தொடர்ந்து தடுத்து வைப்­ப­தற்­கான உத்­த­ரவை வழங்­கு­வ­தற்கு அதி­கார­ம­ளிக்­கப்­பட்­டுள்ள பாது­காப்பு அமைச்சின் செய­லா­ளரைப் பதவி வழி­யாக நீதிவான் அல்­லது நீதி­பதி ஒரு­வரைப் போன்று நடு­நி­லை­யா­னவர் என்று கருத முடி­யாது. ஏனெனில் அந்தப் பத­வியே அர­சியல் மய­மா­னது. ஆளும் கட்­சி­யி­னு­டைய செல்­வாக்கின் அடிப்­ப­டையில் அந்தப் பத­விக்கு உரி­யவர் நிய­மிக்­கப்­ப­டு­கின்றார். 
நீதி­மன்­றத்தின் பொறுப்பிலுள்ள ஒரு கைங்­க­ரி­யத்தை அர­சியல் சார்ந்த பதவி வகிக்­கின்ற அதி­காரி ஒரு­வ­ரிடம் ஒப்­ப­டைப்­பதை பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் அடிப்­ப­டை­யாகக் கொண்­டி­ருக்­கின்­றது. அந்த வகையில் அந்­தச்­சட்­டத்தின் கீழ் உண்­மை­யான குற்­ற­வா­ளிகள் மட்­டுமே கையா­ளப்­ப­டு­கின்­றார்கள் என்று கொள்ள முடி­யாது. 
பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் சந்­தே­கத்­திற்­கு­ரி­ய­வர்கள் மீதே அதி­க­மாகப் பாய்ந்துள்ளது. அந்தப் பாய்ச்சல் அரசியல் ரீதியானது. அதனால் அந்தச் சட்டத்தினால் பாதிக்கப்பட்டு சிறைச்சாலைகளில் வாடுபவர்கள் அரசியல் ரீதியாகவே சம்பந்தப்படுகின்றார்கள். எனவே, அரசிய லுடன் சம்பந்தப்பட்ட சந்தேகநபர்கள் அரசியல் கைதிகளாகவே நடத்தப்பட வேண்டும். அவர்களை சாதாரண குற்ற வாளிகளைப் போல அல்லது சமூகச்சீர்கேட்டு குற்றவாளிகளைப்போல நடத்துவது ஏற் புடையதல்ல. அந்த நடவடிக்கையை நியா யமானது என்று ஏற்றுக்கொள்ளவும் முடியாது. 
இந்த நிலைமைகளின் பின்னணியி லேயே பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இல்லாமற் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் பென் எமர்ஸன், ஐ.நா.விடம் கையளித்துள்ள அண் மைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.  
சிறைச்­சா­லை­க­ளி­லுள்ள அர­சியல் கைதி­களின் நிலை­மை­களை கிர­ம­மான விஜ­யங்­களின் மூலம் தேசிய மனித உரி­மைகள் ஆணைக்­குழு பார்­வை­யிட்டு, அவர்­களின் உரி­மைகள் பேணப்­ப­டு­வ­தற்­கான அதி­கா­ரங்கள் உட­ன­டி­யாக வழங்­கப்­பட வேண்டும் என்று அவ­ரு­டைய அறிக்­கையின் ஊடாக ஐ.நா. வலி­யு­றுத்­தி­யுள்­ளது. 
தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள அர­சியல் கை தி­களை விடு­தலை செய்ய வேண்டும் என்­பதை வலி­யு­றுத்­தி­யுள்ள அவர், நீதி­மன்ற விசா­ர­ணை­க­ளின்றி தடுத்து வைக்­கப்­பட்­டி­ருப்­ப­வர்­க­ளையும் தண்­டனைக் கைதி­க­ளையும், அவ­ர­வர்­க­ளு­டைய சொந்த இடங்­க­ளுக்கு அண்­மை­யி­லுள்ள சிறைச்­சா­லை­க­ளுக்கு மாற்­று­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும் என்றும் ஐ.நா. சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் உட­ன­டி­யாக நீக்­கப்­பட்டு, அதற்குப் பதி­லாக தேசிய பாது­காப்­புக்­கு­ரிய புதிய சட்டம் சர்­வ­தேச நிய­மங்­க­ளுக்கும் ஐ.நா. மன்ற நிய­தி­க­ளுக்கும் அமை­வாக உரு­வாக்­கப்­பட வேண்­டு­மென அர­சாங்­கத்­திற்குப் பரிந்­து­ரைத்­துள்ள ஐ.நா.மனித உரி­மைகள் செய­லகம் தாம­த­மின்றி 30/-1 பிரே­ர­ணையை முழு­மை­யாக நிறை­வேற்­று­வ­தற்கு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும் என்று வலி­யு­றுத்­தி­யுள்­ளது.  
நாட்டின் இன்­றைய ஸ்திர­மற்ற அர­சியல் சூழலில் அர­சாங்கம் ஐ.நா.வின் வேண்­டு­ கோள்­க­ளையும், பரிந்­து­ரை­க­ளையும், அதே­ போன்று உரிமை மீறல்­க­ளுக்கு உடன­டி­ யாகப் பொறுப்புக்கூற வேண்டும் என்ற பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வேண்டுகோள் களையும் கருத்திற் கொள்ளுமா என்பது தெரியவில்லை. கவனத்திற்கொண்டு செயற் படுமா என்பதும் தெரியவில்லை.  

No comments:

Post a Comment

Post Bottom Ad