நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் விக்கியை கலையுங்கள் - அஸ்மின் - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, September 28, 2018

நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் விக்கியை கலையுங்கள் - அஸ்மின்


வடமாகாணசபை அமைச்சர்கள் தொடர்பில் தொடர்ந்தும் நீதிமன்ற விசாரணைகளுக்காக பார்த்துக்கொண்டிருக்காமல் முதல்வர் மீது எமக்கு நம்பிக்கையில்லை என்ற தீர்மானத்தை கொண்டுவந்து புதிய முதலமைச்சரை நியமிப்பதன் மூலம் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கமுடியும் என இன்றைய அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தார் வடமாகாண நியமன மாகாணசபை உறுப்பினர் அஸ்மின்.

மேல்நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தடையுத்தரவை தொடர்ந்து முதலமைச்சரால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. தற்போது வழக்கு உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஏற்கப்பட்டு விசாரணை நடைபெறுவதற்கு எதிர்வரும்  ஒக்ரோபர் மாதம் 19 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனினும் இதற்கு காலம் தாமதிக்காது முடிவு காணவேண்டும் என அஸ்மின் கேட்டுக்கொண்டார்.

இதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த வடமாகாணசபை உறுப்பினர் சயந்தன் தான் ஒரு மடையன் என தெரிவித்தார். குட்டக்குட்ட குனிபவனும் மடையன் குனிய குனிய குட்டுபவனும் மடையன் எனவே நானும் இப்போது மடையன் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad