வடமாகாணத்தில் இதுவரை தொல்பொருள் முக்கியத்துவம் மிக்க இடங்களாக 215 விடயங்கள் வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதாக இராஜாங்க அமைச்சர் மொஹன் லால் கிரேறு தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மாத்திரம் 176 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றுள் 88 இடங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. மன்னார் மாவட்டத்தில் 64 இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 33 இடங்கள் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. வவுனியா மாவட்டத்தில் 50 இடங்களும் யாழ் மாவட்டத்தில் 79 இடங்களும் கிளிநொச்சியில் 18 இடங்களும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளன.
வர்த்தமானியில் வெளியிடப்படாத இடங்களை விரைவில் வர்த்தமானியில் வெளியிடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் ராஜாங்க அமைச்சர் மொஹன் லால் கிரேறு மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment