காஞ்சிரமோட்டை: மைத்திரி சொல்லவேண்டுமாம்!! - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, September 4, 2018

காஞ்சிரமோட்டை: மைத்திரி சொல்லவேண்டுமாம்!!

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட காஞ்சிரமோட்டையில் மக்கள் மீள் குடியேறpய மக்கள் வன இலாகாவினரினால் பல:வெறு சிரமங்களை எதிர்கொண்டு வரும் நிலையில் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தினையும் இன்று தூக்கி எறிந்துள்ளனர்.

வவுனியா வடக்கில் பழம்பெரும் கிராமமான காஞ்சிரமோட்டை கிராமம் அதிகளவான மக்கள் வாழ்ந்த பிரதேசமாக காணப்பட்டது.
இந் நிலையில் யுத்தம் காரணமாக அங்கிருந்த இடமபெயர்ந்த மக்கள் இந்தியாவிற்கும் நாட்டின் பல பாகங்களிலும் வாழ்ந்த வந்தனர்.

எனினும் யுத்தம் நிறைவுக்கு வந்ததை அடுத்து இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய மக்களும் உள்நாட்டில் இடம்பெயர்ந்து வாழ்ந்தவர்களும் தாம் பூர்வீகமாக வாழ்ந்த காஞ்சிரமோட்டை கிராமத்தில் குடியேறுவதற்கு ஏற்பாடுகளை செய்து தருமாறு கோரியதற்கு இணங்க பிரதேச செயலாளரும் அவர்களை மீள் குடியேற்றுவதற்கு தமது தரப்பு ஏற்பாடுகளை செய்தpருந்ததுடன் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் வீடுகளை வழங்குவதற்கும் அடிக்கல்லும் நாட்டப்பட்டிருந்தது.

சுமார் 45 நாட்களை கடந்தும் மக்கள் தமது காணிகளில் துப்பரவுப்பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில் வன வளத்திணைக்களத்தினர் குறித்த காணி வன வளத்திணைக்களத்திற்கு உரியது என தெரிவித்ததுடன் மேற்கொண்டு காணிகளில் எவ்வித அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளக்கூடாது எனவும் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய 18 குடும்பங்களுடன் உள்ளுரில் இடம்பெயர்ந்து மீள்க்குடியேறிய குடும்பங்களுமாக 35 குடும்பங்கள் இக்கிராமத்தில் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்து வந்திருந்தனர்.

இந் நிலையில் நேற்று திங்கட்கிழமை வவுனுpயா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்தில் வன இலாகாவினருக்கம் இணைத்தலைவர்களுக்கும் இடையில் கடும் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றதுடன் மனச்சாட்சியுடன் வன இலாகாவினரை நடக்குமாறும் மக்களின் பிரச்சனைகளை உணர்ந்து செயற்படுமாறும் கொரப்பட்டிருந்தது.

இதன்போது வவுனுpயா வடக்கு பிரதேச செயலாளருடன் வனஇலாகா அதிகாரி முரண்பட:டுக்கொண்ட நிலையில் வனவளத்திணைக்களத்தின் தலைமை அதிகாரிக்கு அனுமதிக்காக கடிதம் அனுப்புமாறும் தெரிவித்தார்.
இந் நிலையில் வட மாகாண முதலமைச்சரும் இணைத்தலைவருமான சி.வி. விக்னேஸ்வரன் வன இலாகா அதிகாரிகளிடம் குறித்த கிராமத்தில் மக்கள் மீளக்குடியேறியுள்ளமையினால் அவர்கள் தாம் வாழ்வதற்கான அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்கொள்ள அனுமதிக்குமாறும் கடிதத்தினை பிரதேச செயலளார் அனுப்பி பதில் வரும்வரை காத்திருக்க முடியாது எனவும் தெரிவித்ததுடன் இதனை அபிவிருத்திகுழுவில் தீர்மானமாகவும் கொண்டு வந்திருந்தார்.

இதற்கு அபிவிருத்திகுழு கூட்டத்தில் சம்மதம் தெரிவித்த வன இலாகாவினர் இன்று பிரதேச செயலாளருடன் காஞ்சிரமோட்டை கிராமத்திற்கு சென்று எவ்வித காணி துப்பரவுப்பணிகளோ வீடுகளை அமைக்கும் பணிகளையோ செய்யக்கூடாது என தெரிவித்துள்ளதுடன் ஜனாதிபதியின் உத்திரவு வரும் வரை காத்திருக்குமாறும் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக வீடுகளை அமைப்பதற்கு ஏற்பாடுகளை செய்திருந்த மீளக்குடியேறிய மக்கள் பெரும் இன்னல்கiளுக்க முகம் கொடுத்துள்ளதுடன் மழை காலம் வருவதற்கு முன்னர் தாம் விடுகளை அமைத்து பாதுகாப்பாக வாழலாம் என எண்ணி இருக்கும்போது இவ்வாறான நிலை ஏற்பட:டள்ளதாகவும் தமது ஆதங்கத்தினை தெரிவித்தனர்.

இந் நிலையில் அபிவிருத்திகுழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களும் குறித்த கூட்டமும் பயனற்றதா என்ற கேள்வியையும் மீள்குடியேறிய மக்கள் எழுப்பியுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad