சுமந்திரனோடு சேர்ந்து தலையாட்டிய செல்வமும் சித்தார்த்தனும் தப்பியோடமுடியாது! - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, September 4, 2018

சுமந்திரனோடு சேர்ந்து தலையாட்டிய செல்வமும் சித்தார்த்தனும் தப்பியோடமுடியாது!

தமிழ் தேசிய கூட்­ட­மைப்பில் பங்­கா­ளி­க­ளாக இருந்­து­கொண்டு அதில் சம்பந்­தனும், சுமந்­தி­ரனும் செய்­கின்ற துரோ­கங்­க­ளுக்கு துணை போகின்ற ரெலோ, புளொட் ஆகிய கட்­சி­களின் தலை­மைகள், தற்­போது தமக்கு இத்­த­கைய துரோ­கத்தில் தொடர்­பில்லை என கூறி வில­கு­வதை தமிழ் மக்கள் அனு­ம­திக்க மாட்­டார்கள் என்று தமிழ் தேசிய மக்கள் முன்­ன­னியின் தலைவர் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் தெரி­வித்­துள்ளார். 

கூட்­ட­மைப்பின் பேச்­சாளர் கூறி­யதை அது கூட்­ட­மைப்பின் கருத்து இல்லை, அவ­ரது தனிப்­பட்ட கருத்து என கூறு­வது உலக அர­சி­ய­லிலே இதுவே முதல் முறை எனவும் அவர் கூறி­யுள்ளார்.

இது தொடர்­பாக அவர் மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது,

தற்­போது சமஸ்டி தேவை­யில்லை என சுமந்­திரன் கூறிய கருத்து தொடர்­பாக கூட்­ட­மைப்பின் பங்­காளி கட்­சி­களின் தலை­வர்­க­ளிடம் வீர­கே­சரி பத்­தி­ரிகை கருத்து கேட்டு செய்தி வெளி­யிட்­டி­ருக்­கி­றது. அதில் புளொட் அமைப்பின் தலைவர் சித்­தார்த்தன் சுமந்­திரன் கூறிய கருத்து அவ­ரது தனிப்­பட்ட கருத்து என தெரி­வித்­துள்ளார். உண்­மையில் சித்­தார்த்தன் தற்­போது கூறு­வது தான் சித்­தார்த்­தனின் தனிப்­பட்ட கருத்­தாகும். எம்.ஏ.சுமந்­திரன் கூட்­ட­மைப்பின் பேச்­சாளர். அவர் கூறும் கருத்து கூட்­ட­மைப்பின் கருத்­தா­கவே அமையும்.



இதே சித்­தார்­தனே புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான குழுக்­களில் அதி­கார பகிர்வு குழுவின் தலை­வ­ராக இருக்­கின்றார். அதே நேரம் தமிழ் மக்கள் பேர­வை­யிலும் உறுப்­பி­ன­ரா­கவும் இருக்­கின்றார். இந்­நி­லையில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு ஒற்­றை­யாட்­சியை வலி­யு­றுத்­து­கின்ற புதிய அர­சி­ய­ல­மைப்பின் இடைக்­கால அறிக்­கைக்கு ஆத­ரவு கேட்டு அதற்­கான மக்­களின் ஆணை­யாக உள்­ளு­ராட்சி தேர்­தலில் போட்­டி­யிட்ட போது அதற்கு ஆத­ர­வாக வாக்­கு­களை கேட்டார்.

ஏனெனில் அப்­போது சுமந்­தி­ரனும் , சம்­மந்­தனும் சமஸ்டி தேவை­யில்லை என்­பதை வெளிப்­ப­டை­யாக கூற­வில்லை. எனவே மக்­க­ளுக்கு இந்த உண்­மைகள் தெரி­யாது என்ற நம்­பிக்­கையில் அப்­போது அவர்­க­ளோடு ஒற்­று­மை­யாக மக்­க­ளிடம் வாக்கு கேட்­டார்கள். ஆனால் இப்­போது உண்மை அம்­ப­ல­மா­கி­யுள்ள நிலையில் என்ன செய்­வ­தென்று தெரி­யாத தர்­ம­சங்­க­ட­மான நிலையில் இருக்­கி­றார்கள்.

சித்­தார்த்தன் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பில் யார் ? அதில் ஒரு சிறிய பங்­காளி கட்­சியின் தலைவர் மாத்­தி­ரமே. இந்­நி­லையில் தனது தரப்பு தான் வாக்கு கேட்ட மக்­க­ளிடம் செல்ல முடி­யாத நிலை ஏற்­பட்டு விட்­டதை உணர்ந்து அம் மக்­க­ளிடம் இருந்து தப்­பிக்க இப்­போது அது சுமந்­தி­ரனின் தனிப்­பட்ட கருத்து என்­கிறார்.

இதே போலவே ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்­க­ல­நா­தனும். பாரா­ளு­மன்ற குழுக்­களின் தலமை பத­வியை ஒற்­றை­யாட்­சிக்கு இணங்­கி­ய­மை­யா­லேயே பெற்­றுக்­கொண்­டுள்ளார். ஆகவே இவர்கள் அனை­வரும் இணைந்து எல்லாம் தெரிந்தே இம் மக்­களை ஏமாற்றி வரு­கின்­றார்கள்.

இவர்கள் தமிழ் தேசிய வாதத்தை தமிழ் அர­சி­யலில் இருந்து முற்று முழு­தா­கவே நீக்­கு­கின்ற செயற்­பாட்டை நேர்த்­தி­யாக செய்­கின்­றார்கள். இந்­நில்­லையில் தற்­போது இவ் உண்­மைகள் வெளி­வர தொடங்­கி­விட்ட நிலை­யிலும், இன்னும் பல உண்­மைகள் வெளி­வர இருக்­கின்ற நிலை­யிலும் இவற்­றுக்கு எல்லாம் காரணம் வெறு­மனே சுமந்­தி­ரனும் சம்­மந்­தனும் மாத்­தி­ரமே என அவர்கள் மீது மாத்­திரம் பழியை போட்­டு­விட்டு தாம் வில­கிட பார்க்­கின்­றார்கள்.

இவ்­வா­றான நிலையில் இவர்கள் இரு­வரும் இத்­த­கைய துரோக தனங்களை செய்வதற்கு துணைபோனவர்கள் கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் கட்சிகளின் தலைமைகளேயாவர். எனவே தற்போது இதற்கும் தமக்கு சம்மந்தமில்லை என கூறி அதிலிருந்து தாம் தப்பித்துக்கொள்ள பார்க்கும் புளொட் சித்தார்த்தன் மற்றும் ரெலோ செல்வம் அடைக்கலாநன் ஆகியோரை தமிழ் மக்கள் அனுமதிக்க கூடாது என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad