புலிகளையும் இராணுவத்தையும் விடுவிப்பதே போர்க்குற்றசாட்டிலிருந்து தப்ப வழியாகும் - சம்பிக்க - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, September 18, 2018

புலிகளையும் இராணுவத்தையும் விடுவிப்பதே போர்க்குற்றசாட்டிலிருந்து தப்ப வழியாகும் - சம்பிக்க

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் புதி­ய­ யோ­சனை முன்­வைக்­கின்றார் அமைச்சர் சம்­பிக்க

நீண்­ட­கா­ல­மாக சிறையில் தடுத்து வைக்­கப்­பட் ­டுள்ள விடு­த­லைப்­புலி முன்னாள் உறுப்­பி­னர்­களை பொது மன்­னிப்பின் பெயரில் விடு­தலை செய்­ய­ வேண்டும். தனிப்­பட்ட மற்றும் பொதுக் குற்­றங்­களில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள இரா­ணு­வத்­தினர் மற்றும் புலி உறுப்­பி­னர்கள் விட­யத்தில் உடன­டி­யாக சட்ட நட­வ­டிக்­கை­களை எடுத்து நீண்­ட­கால  பிரச்­சி­னை­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி  வைக்க வேண்டும் என்று ஜனா­தி­பதி, பிர­தமர் மற்றும் எதிர்க்­கட்­சி­த­லைவர் ஆகி­யோ­ரிடம் கேட்­டுக்­கொள்­வ­தாக அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார். 


12 ஆயிரம் புலி உறுப்­பி­னர்­களை விடு­தலை செய்­து­விட்டு 60 பேரை தடுத்து வைப்­பதில் எந்த நியா­யமும் இல்லை எனவும் அவர் குறிப்­பிட்டார்.

ஜாதிக ஹெல உறு­மைய கட்­சியின் அலு­வ­ல­கத்தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அமைச்சர் இதனைக் குறிப்­பிட்டார்.

  அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்

இந்த நாட்டில் மிகக் கொடூ­ர­மான யுத்தம் ஒன்று இடம்­பெற்று முடி­வ­டைந்­துள்­ளது. யுத்­தத்தை வெற்றி கொள்ள வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் நாம் இருந்து அதனை வெற்றி கொண்­டுள்ளோம். எனினும் ஆயுத யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டதே தவிர அதன் பின்­ன­ரான அர­சியல் முரண்­பா­டுகள் எவையும் தீர்க்­கப்­ப­ட­வில்லை.

 யுத்தம் முடி­வுக்கு வந்த பின்னர் சர்­வ­தேச ரீதி­யிலும் உள்­ளக ரீதி­யிலும் பல குற்­றச்­சாட்­டுக்கள் எழுந்­தன. அத்­துடன் இறுதி யுத்­தத்தில் இடம்­பெற்ற சில குற்­றங்­களில் பாது­காப்பு படை­களின் சிலர் சிறையில் உள்­ளனர். சிலர் மீது வழக்­குகள் தொட­ரப்­பட்டும் அவை விசா­ரணை மட்­டத்­திலும் உள்­ளன. மறு­புறம் விடு­த­லைப்­பு­லி­களின் பலர் கைது செய்­யப்­பட்டு அதில் 12 ஆயிரம் பேர் முன்­னைய ஆட்­சியில் முழு­மைப்­ப­டுத்­தப்­ப­டாத புனர்­வாழ்வு வழங்­கப்­பட்டு சமூக மயப்­ப­டுத்­தப்­பட்­டனர்.

இவர்­களின் விடு­தலை எந்­த­வித அங்­கீ­கா­ரமும் இல்­லாது வழங்­கப்­பட்­ட­தாகும். மேலும் 60 பேர் அளவில் இன்றும் சிறையில் உள்­ளனர். வெவ்­வேறு கார­ணங்­களை முன்­வைத்து இவர்கள் மீது வழக்­குகள் தொட­ரப்­பட்­டுள்­ளன. சிலர் மீது வழக்­குகள் தொட­ரப்­ப­ட­வேண்­டி­யுள்­ளது. எவ்­வாறு இருப்­பினும் அடுத்த ஆண்டு மே மாதத்­துடன் யுத்தம் முடி­வுக்கு வந்து பத்து ஆண்­டுகள் பூர்த்­தி­யா­கின்­றன. இந்த பத்து ஆண்­டு­களில் நாம் யுத்­தத்தை வெற்­றி­கொண்டு எந்த இடத்தில் உள்ளோம் என்­பதை சிந்­தித்­துப்­பார்க்க வேண்டும். யுத்­தத்தின் பின்னர் பல அர­சியல் பிரச்­சி­னைகள் எழுந்­துள்­ளன, தீர்க்க முடி­யு­மான பல பிரச்­சி­னை­களை கூட தீர்க்க முடி­யாத நிலைமை உள்­ளது.

இந்­நி­லையில் தான் சர்­வ­தே­சமும் சரி­யான முறையில் நேர்த்­தி­யாக, நியா­ய­மாக சட்ட நகர்­வு­களை கையாள வேண்டும். சர்­வ­தேசம் பொறுப்­புக்­கூறல் இடம்­பெற வேண்டும் என்று கூறு­கின்­றது. இங்­குள்ள தமிழ் தலை­மைகள் சிலர் இரா­ணு­வத்தை மட்­டுமே தண்­டிக்க வேண்டும், விடு­த­லைப்­பு­லி­களை அல்ல என கூறிக்­கொண்­டுள்­ளனர். மேலும் சிலர் இரா­ணு­வத்தை தண்­டிக்க இட­ம­ளிக்க முடி­யாது என கூறிக்­கொண்­டுள்­ளனர். இதில் சட்டம், நீதிப் பொறி­முறை சரி­யாக செயற்­பட வேண்டும் என்றால் இரா­ணுவ குற்­றங்­களில் அவர்­களை தண்­டிப்­பதை போலவே புனர்­வாழ்வு வழங்கி சமூ­க­மை­யப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள 12 ஆயிரம் விடு­த­லைப்­புலி உறுப்­பி­னர்­க­ளையும் மீண்டும் கைது செய்ய வேண்டும்.

ஏனெனில் விடு­த­லைப்­பு­லிகள் என்ற இயக்கம் இலங்­கையில் இன்றும் தடை செய்­யப்­பட்ட இயக்­க­மாகும். சர்­வ­தே­சத்­திலும் தடை செய்­யப்­பட்ட இயக்­க­மாக உள்­ளது. அவ்­வாறு இருக்­கையில் அவர்­களின் அங்­கத்­த­வர்கள் மீது நட­வ­டிக்கை எடுக்க வேண்­டி­யதும் நீதி பொறி­மு­றைக்குள் வரும் என்­பதை மறந்­து­வி­டக்­கூ­டாது. ஆகவே மிகச்­ச­ரி­யாக இந்த விட­யத்தில் நீதியை நிலை­நாட்ட நினைத்தால் தமிழர் தரப்­பிலும் சிக்­கல்கள் எழும்.

எவ்­வாறு இருப்­பினும் இதனை முடி­வுக்கு கொண்­டு­வர வேண்டும், பத்து ஆண்­டுகள் கடந்தும் இந்த பிரச்­சி­னை­களை வைத்­து­கொண்டு அர­சியல் செய்­யவோ, அல்­லது இன­வா­தத்தை தூண்­டிக்­கொண்டு செயற்­ப­டவோ இனி­மேலும் இட­ம­ளிக்­கக்­கூ­டாது என நாம் நினைக்­கின்றோம். நடந்து முடிந்த கதை­களை இனியும் ஆரம்­பித்­து­வைக்­கக்­கூ­டாது. இந்த நாட்டில் விடு­த­லைப்­பு­லிகள் மட்­டுமே கல­வ­ரங்­களை ஏற்­ப­டுத்­த­வில்லை. அதற்கு முன்னர் ஜே.வி.பி. யும் இந்த நாட்டில் கல­வ­ரங்­களை ஏற்­ப­டுத்­தி­யது.

மிகவும் மோச­மான சம்­ப­வங்கள் இந்த கால­கட்­டத்தில் இடம்­பெற்­றன. அதேபோல் ஜே.வி.பியின் கிளர்ச்சி கால­கட்­டத்தில் வேறு பல இட­து­சாரி அமைப்­பு­களும் உரு­வாகி பல கொலைகள், கடத்­தல்­களை செய்­தன . எனினும் கால ஓட்­டத்தில் அவர்­க­ளுக்கு பொது மன்­னிப்பு வழங்கி அவர்­களை ஜன­நா­யக நீரோட்­டத்தில் மக்­களே இணைத்­தனர். இந்த சந்­தர்ப்­பத்தை அவர்­களும் சரி­யாக பயன்­ப­டுத்தி வரு­கின்­றனர். இன்று அர­சியல் ரீதியில் அவர்­க­ளுக்­கான அங்­கீ­காரம் வழங்­கப்­பட்­டுள்­ளது. மக்­களே அந்த அங்­கீ­கா­ரத்தை வழங்­கி­யுள்­ளனர். எமக்கு நல்­லி­ணக்கம் கற்­பிக்கும் நாடு­க­ளான தென்­னா­பி­ரிக்கா, கொலம்­பியா மற்றும் ஏனைய பல நாடு­களை எடுத்­துக்­கொண்­டாலும் கூட அவர்­களின் நல்­லி­ணக்க பொறி­மு­றையில் பிர­தா­ன­மா­னது பொது மன்­னிப்­பாகும். இதன் மூல­மாக அவர்­களால் சமு­தாயம் ஒன்றை கட்­டி­யெ­ழுப்ப முடிந்­துள்­ளது.

ஆகவே இலங்கை விட­யத்­திலும் இத­னையே கையாள வேண்டும். இப்­போது அனைத்­தையும் முடி­வுக்கு கொண்­டு­வர வேண்டும். ஆகவே 12 ஆயிரம் விடு­த­லைப்­பு­லி­களை சமூக மயப்­ப­டுத்­தி­விட்டு வெறு­மனே 60 பேரை சிறையில் அடைத்து வைத்­தி­ருப்­பதில் எந்த பயனும் இல்லை. அதேபோல் இரா­ணு­வத்­தையும் குறை­கூ­றிக்­கொண்டு செயற்­பட வேண்­டிய அவ­சி­யமும் இல்லை. இதற்­கா­கவே நாம் ஜனா­தி­பதி - பிர­தமர் - எதிர்க்­கட்சி தலைவர் ஆகிய மூவ­ருக்கும் சில கார­ணி­களை முன்­வைக்­க­வுள்ளோம்.

எமது கார­ணி­களை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும், கைவிட முடி­யாது. அதா­வது இறுதி யுத்­தத்தில் குற்றம் சுமத்­தப்­பட்டு சில இரா­ணு­வத்­தினர் சிறையில் உள்­ளனர், விடு­த­லைப்­பு­லி­களின் சிலரும் உள்­ளனர். இவர்­களின் குற்­றங்கள் குறித்து ஆராய வேண்டும். பொது­வான குற்­றங்கள் எவை தனிப்­பட்ட குற்­றங்கள் எவை என பகுத்து மன்­னிப்பு வழங்கக் கூடிய குற்­றங்­களில் இரண்டு தரப்­பி­ன­ரையும் விடு­தலை செய்ய வேண்டும். தனிப்­பட்ட குற்­றங்கள் இருப்பின் அவற்­றுக்­கான சட்ட நட­வ­டிக்­கை­களை உட­ன­டி­யாக முன்­னெ­டுக்க வேண்டும்.

விடு­த­லைப்­பு­லி­களின் சார்பில் நேர­டி­யாக போராட்­டத்தில் ஈடு­பட்­ட­வர்கள் போன்று போராட்­டத்­துக்கு உத­வி­ய­வர்கள், மறை­முக குற்­ற­வா­ளிகள் என சிலர் உள்­ளனர். அவர்­களை எல்லாம் தண்­டித்து எந்­தப்­ப­யனும் இல்லை. நூறுக்கும் குறை­வான விடு­த­லைப்­புலி குற்­ற­வா­ளிகள் மட்­டுமே உள்­ளனர். 12 ஆயிரம் பேரை விடு­தலை செய்­து­விட்டு வெறு­மனே நூறுக்கும் குறைந்த உறுப்­பி­னர்­களை சிறைப்­பி­டித்து எந்த பயனும் இல்லை. ஆகவே பொது மன்­னிப்பின் பெயரில் அவர்­களை விடு­தலை செய்ய வேண்டும். அதற்கு அரசாங்கம் அக்கறை செலுத்த வேண்டும்.

முக்கியமாக இவ்வாறு விடுதலை செய்யப்பட்ட பின்னர் எந்தத் தரப்பினரும் இந்த விடயங்கள் குறித்து பேசக்கூடாது. இதனை வைத்து அரசியல் செய்யவோ, இனவாதத்தை கக்கவோ இடமளிக்கக்கூடாது. இவர்களை விடுதலை செய்வதில் அனைத்து தரப்பினதும் இணக்கப்பாட்டில் பாராளுமன்றத்தில் சட்டம் ஒன்று கொண்டுவந்து அதற்கமைய இவர்களை விடுவிக்க முடியும். அல்லது ஜனாதிபதியின் தலையீட்டில் பொது மன்னிப்பு வழங்க முடியும். இதுவே நல்லிணக்கத்தை நாம் உருவாக்கிக்கொள்ளவும் சர்வதேச கெடுபிடிகளில் இருந்து எம்மை விடுவித்துக்கொண்டு ஒரு நாடாக பயணிக்கவும் நீண்டகால அரசியல் பிரச்சினைகளை வெற்றிகொள்ளவும் மிகச்சிறந்த வழிமுறையாகும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad