மைத்திரியை கொல்லும் றோ - இரகசியம் என்ன? - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, October 17, 2018

மைத்திரியை கொல்லும் றோ - இரகசியம் என்ன?

ஜனவரி 2015இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது தோல்வியடைந்த மகிந்த ராஜபக்ச தனது தோல்வி ஒரு சதி என்றும் அதற்கு பின்னால் இந்திய வெளியக புலனாய்வு அமைப்பான றோ இருப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். தற்போது ஜனாபதி மைத்திரிபால சிறிசேனவும் தன்னை கொல்லுவதற்கு றோ சதி செய்வதாக பரபரப்பு குற்றசாட்டு ஒன்றை முன்வத்திருக்கிறார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இதில் எது உண்மை?

அன்று மகிந்த ராஜபக்ச கூறியது :
But did you take up your concerns with India that you felt RAW was working against you? What was the response?
I did. I said the man (RAW station chief) who is here in Colombo, should be moved out. They agreed, but only at the very last-minute before the election, and by then it was too late. https://www.thehindu.com/…/rajapaksa-raw…/article6987460.ece
இன்று மைத்ரிபாலசிறிசேன கூறுவது :
Mr. Sirisena, who was speaking at the weekly Cabinet meeting, told Ministers that the Indian intelligence agency was “trying to kill” him, but that “Prime Minister Narendra Modi may not be aware of the plan,” The Hindu has learnt from sources present at the discussion.https://www.thehindu.com/…/sri-lankan-p…/article25241800.ece
இதனை ஒருபக்கம் வைத்துவிட்டு சம்பந்தனின் பக்கம் வருவோம். திருகோணமலை தமிழ் வாக்காளர்கள் ஒரு வேளை மறந்திருக்கலாம்.
தமிழ் மக்களுக்கு ஞபாகசக்தி இருந்தால் பின்னர் எவ்வாறு சம்பந்தன் போன்றவர்கள் தலைவர்களாக இருக்க முடியும்?
2015 பொதுத் தேர்தல் பிரச்சாரங்களின் இறுதி நாள். இடம் முத்துகுமாரசாமி கோவில் வளாகம். சம்பந்தன் கூறுகின்றார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு நெல்சன் மண்டேலா போன்றவர். மார்ட்டின் லூதர்கிங் போன்றவர். 2016க்குள் ஒரு நல்ல தீர்வு உண்டு. இப்போது 2018. இப்போது அந்த நெல்சன் மார்ட்டின் லூதர் மைத்திரிபாலவோ, தன்னை றோ கொலைசெய்ய சதிசெய்வதாக குற்றம் சாட்டியிருக்கின்றார்.? இதிலுள்ள வேடிக்கை என்னவென்றால் முன்னர் மகிந்த றோ மீது குற்றம்சாட்டுகின்ற போதும் மோடிக்கு அது பற்றி தெரியாது என்றார் தற்போது மைத்ரிபாலவும் மோடிக்கு இது பற்றி தெரியாது என்கிறார்? 

அது சரி – சம்பந்தனின், மார்ட்டின் லூதர் கிங் போன்ற நெல்சன் மண்டேலா போன்ற மைத்திரியை ஏன் றோ கொலைசெய்ய சதி செய்ய வேண்டும்? இதற்கு சம்பந்தனின் பதில் என்ன?No comments:

Post a Comment

Post Bottom Ad