இத்தனை காலமும் எங்கே இருந்தீர்கள்? தவரூபன் - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, November 12, 2018

இத்தனை காலமும் எங்கே இருந்தீர்கள்? தவரூபன்

கண் முன் சரணடைந்து பஸ்ஸில் ஏற்றப்பட்டவர்கள் சிறையில் இல்லை என்ற போது, 

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட போது, 

கைகள் கட்டப்பட்டு நிர்வாணமாக்கி சுட்டுக் கொல்லப்பட்ட போது,

மக்கள் கண் முன் பார்த்திருக்க விடுவிக்கப்படாத காணிகளில் வீடுகள் இராணுவத்தால் இடித்தழிக்கப்படும் போது,

மரணித்தவர் புதை குழிகளை டாங்கிகளை கொண்டு சிதைத்த போது,

விசாரணகளே இன்றி பல வருடங்ள் சிறையில் கைதிகள் வைக்கப்பட்ட போது,

பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் விசாரணையின் பின் பல வருடங்களின் பின் தொடர் சித்திரவதைகள் உள்ளாக்கப்பட்டு நிரபராதிகள் என்று விடுவிக்கப்பட்ட போது,

13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக நிறை வேற்ற தயங்கிய போது, 

வடக்கு கிழக்கை பிரித்த போது,

முதலமைச்சர் நிதியத்தை தடுத்தபோது,

மொழியுரிமைகள் மீறப்பட்ட போது, வழிபாட்டுத் தலங்கள் தொல்பொருள் திணைக்களத்தால் கபளீகரம் செய்யப்பட்ட போது ,

திட்டமிட்ட குடியேற்றங்கள் செய்யப்பட்ட போது,

கன்னியா கிணறுகள் சிங்களமயமாக்கப்பட்ட போது,

இப்படி எண்ணுக்கணக்கற்ற விடயங்களில் ஆதாரங்கள் சாட்சிகள் எல்லாம் இருந்தும் இலங்கையின் யாப்பின் படி மீறப்பட்ட விடயங்களாக இருந்த போதும்,
 
ஜனநாயக மறுப்புக்காகவோ, மனித உரிமை மீறலுக்காகவோ
இந்த சுமந்திரனும் சம்பந்தனும் ஏன் ஜனநாயகம் மனித உரிமைகள் பற்றி கதறும் மற்றவர்களும் கோட்டுக்கு ஒரேயடியாக பாய்ந்து வழக்கு போடவில்லை? 

இப்ப மட்டும் கட்சி ரீதியாக தனிப்பட பல்வேறு வழக்கு போடுகின்றார்கள்?

மக்களின் அவலங்களில் வாக்கு கேட்டு வென்ற பிரதிநிதிகள் தனித்தனியாக ஒரே நாளில் வழக்கு போட்டு இருக்கலாம்.

அடித்து சொல்லலாம் உங்களுக்கு மக்கள் மீதும் மனித உரிமை மீதும் ஜனநாயகம் மீதும் உண்மையில் அக்கறை இல்லை. உங்கள் எசமானர்கள் மீது விசுவாசம் உங்கள் சுகபோகங்கள் அதிரடிப்படை பாதுகாப்புக்கள் பதவிகள் போனதன் ஆற்றாமை தான் இந்த வெளிப்பாடு.

பதிவர் - தவரூபன்

No comments:

Post a Comment

Post Bottom Ad