மாவை சொன்னதால் மயிலிட்டியை விடுவிக்கிறேன் - மைத்திரி - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, August 24, 2018

மாவை சொன்னதால் மயிலிட்டியை விடுவிக்கிறேன் - மைத்திரி

மயிலிட்டிக்கு வருகை தந்த சிறிலங்கா சனாதிபதி மைத்திரி உரையாற்றும்போதே மாவை சேனாதிராசா குறிப்பிட்டபோதே, மயிலிட்டி மகா வித்தியாலயம் விடுவிக்கப்படவில்லை என்பதை அறிந்துகொண்டதாகவும் உடனடியாக அதனை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார்.

அவரது உரையின் முழுவடிவம் வருமாறு:

இன்று மயிலிட்டியில் யுத்தம் எங்களது பல பொருட்களை அழித்து விட்டது. யுத்தம் உயிர்களை மட்டுமல்ல, சமூகத்தின் நீதி, சமத்துவம் அனைத்தையும் அழித்து விட்டது.

ஆயுதங்களின் மூலம் போராடுபவர்கள் மனிதாபிமான ரீதியில் வெற்றிபெறுவதில்லை. யுத்தகாலத்தில் கஷ்டப்பட்டவர்கள்தான் இந்த மக்கள். நாடாளுமன்ற உறுப்பினர் மாவை, சேனாதிராசா அந்ககாலத்தில் தான் எதிர்கொண்ட பிரச்சனைகளை சொன்னார். நாம் அனைவரும் யுத்தத்தால் மோசமான அனுபவங்களை பெற்றிருக்கிறோம். எல்லா சமூக மக்களும் யுத்தத்தால் கஸ்டங்களை அனுபவித்தனர். என்னை கொல்ல வந்த சிவராசா என்ற இளைஞனிற்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியது. நான் அவருக்கு மன்னிப்பு வழங்கினேன்.

அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் இந்த நாட்டின் சிறந்த அரசியல்வாதி. அதேபோல நீலன் திருச்செல்வமும் திறமையான அரசியல்வாதி. லக்ஸ்மன் கதிர்காமர் நல்லதொரு வெளிநாட்டு அமைச்சர். யுத்தத்தின் மூலம் சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற லேறுபாடில்லாமல் அழிந்து போனார்கள்.

இந்த நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படாதவாறு எப்படி செயலாற்றுவதென்பதே எம்முன்னுள்ள சவால்.

மாவை சேனாதிராசா உரையாற்றியபோது, உங்களிற்காக பல பிரச்சகைளை முன்வைத்தார். மாவை எனது நல்ல நண்பர். 1989 இல் நாடாளுமன்றம் சென்ற நாங்கள், நாடாளுமன்ற விடுதியில் ஒன்றாக இருந்தோம். நீங்கள் எதிர்கொள்ளும் எல்லா பிரச்சனைகளையும் அவர் மேடையில் கூறியதால் நான் மகிழ்கிறேன். அவரை நினைத்து பெருமைப்படுகிறேன். அதுதான் ஒரு தலைவனின் முக்கிய பொறுப்பு. உங்கள் தலைவர்கள் உங்கள் பிரச்சனைகளை தெரிந்து, அதற்காக போராட வேண்டும். நாங்கள் எல்லோரும் அப்படித்தான் இருக்கிறோம்.

நாடு என்ற ரீதியில் எமக்கு ஏதாவது பிரச்சனையென்றால், எல்லோரும் ஒன்றாக போராட வேண்டும்.



எனது ஆட்சிக்காலப்பகுதியியே ஜனாதிபதி இல்லாத இடத்திலும், இருக்கிற இடத்திலும் அவருக்கு எதிராக எதையும் பேசும் சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்திருக்கிறேன். சமூக இணையத்தளத்தின் ஊடாக பலதையும் சொல்கிறார்கள். என்னையும் மோசமாக விமர்சிக்கிறார்கள். முன்னைய ஆட்சியில் அப்படி யாரும் செய்ய முடியாது. அப்படி யாரும் செய்திருந்தால், மாவை சேனாதிராசா சொன்னது போல ஆறடி குழிக்குள்தான் போய் நிற்பீர்கள்.

சில மாதங்களின் முன் நான் யாழ்ப்பாணம் வரும்போது சிவாஜிலிங்கம் பெரியதொரு போராட்டம் நடத்தினார். எனக்கு நிச்சயம் தெரியும்- சிவாஜி எனக்கு தீங்கு வர விடமாட்டார் என. அதனால் வாகனத்திலிருந்து இறங்கி என்ன பிரச்சனையென விசாரித்தேன். அதன்பின் பல நண்பர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு அப்படி செய்ய வேண்டாமென்றனர். ஆனால் எனக்கு தெரியும், சிவாஜிலிங்கமும் உங்களின் பிரச்சனைகளைத்தான் பேசுகிறார் என்பது.

2015 ஜனாதிபதி ரே்தலில் இந்த பகுதியில் இருந்து 80, 85, 90 வீதமான வாக்குகள் எனக்கு கிடைத்தன.  கடந்த 3 வருட காலத்தில் பல பிரச்சனைகளை தீர்த்து வைத்துள்ளோம். உங்கள் பகுதி பிரச்சனைகளையும் தீர்த்துள்ளோம்.

உங்களிற்கு தெரியும் நான் தெரிவுசெய்யப்படுவதற்கு முன் வடக்கிற்கு யாரும் வந்து போக முடியாது. வட கிழக்கு மக்களின் பிரச்சனைகளையும் தீர்த்து, சர்வதேச குற்ற்சாட்டுக்களிலிருந்து எங்களை விடுவித்து வருகிறோம். வரவுசெலவு திட்டத்தில் யுத்த பாதிப்பிற்குள்ளான வடக்கு கிழக்கிற்கு அதிக நிதி ஒதுக்கி வருகிறோம். பல அபிவிருத்திகளை செய்து வருகிறோம். ஆனால் அந்த அபிவிருத்தி வேகம் போதாது என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.

இந்த நாட்டில் என்னை போல எந்தவொரு ஜனாதிபதியும் வடக்கி கிழக்கிற்கு அதிகமுறை வந்ததில்லை. மூன்று மாத்திற்கு ஒரு முறையாவது வருகிறேன். வினோத சவாரியாக வருவதில்லை. உங்கள் பிரச்சனைகளை தெரிந்து, தீர்க்கவே வருகிறேன். மாவை சேனாதிராஜா உரையிலே உங்களுடைய விடுவிக்கப்படாத காணிகளை பற்றி சொன்னார். யுத்தத்தில் காரணமாக பாதுகாப்பு காரணமாக சுவீகரிக்கப்பட்ட காணிகள் 2009 இல் இருந்து இன்று வரை 88 வீதம் விடுவிக்கப்பட்டுள்ளது. மக்களிற்கு சொந்தமானவற்றில் 12 வீதம் மட்டுமே விடுவிக்கப்படவுள்ளது. அந்த காணிகள் மக்களிற்குரியவை. அவை மக்களிற்கே போய் சேர வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கிறோம்.


இது வடக்கிற்கு மாத்திரமல்ல, நாட்டின் சகல பாகங்களிற்கும் பொருந்தும். மக்களின் காணிகளில் ஒரு அங்குலமென்றாலும் அது அவர்களிற்கே போய் சேர வேண்டும். உலக சரித்திரத்தில் மோதல்கள் எல்லாம் காணி உள்ளவர்கள், இல்லாதவர்களிற்கிடையில்தான் ஏற்பட்டது. உலகத்தின் பாரிய புரட்சிகள் எல்லாம் காணிகளை கோி நடந்தவைதான். கார்ல் மார்க்ஸ், லெனில் மக்களுடைய காணி உரிமைகளை பற்றி விரிவாக சொல்லியுள்ளனர். எனவே இங்குள்ள மக்களின் காணிகள் அவர்களிற்கு கொடுக்கப்பட வேண்டும்.

நான் அங்கு வரும்போது மாவை, அங்கஜன், விஜயகலா போன்றவர்கள் இங்கே விடுவிக்கப்படாத பகுதிகளில் பாடசாலைகள் இருப்பதை தெரியப்படுத்தினார்கள். மயிலிட்டி மகாவித்தியாலயமும் விடுவிக்கப்படாமல் இருப்பதை சொன்னார்கள்.  சேனாதிராசாவின் உரையின் போதே இந்த பகுதி கட்டளை தளபதியை அழைத்து இங்குள்ள நிலரத்தை கேட்டேன். இராணுவத் தளபதியை அழைத்து பேசினேன். அந்த பாடசாலைகள் விடுவிக்கப்பட வேண்டியதை சொன்னேன். எதிர்வரும் 2 வாரங்களிற்குள் மயிலிட்டி மகாவித்தியாலயம் உள்ளிட்ட பாடசாலைகள் அனைத்தும் விடுவிக்கப்படும்.

மகாவலி பிரதேசங்களில் சில பிரச்சனைகள் இருப்பதாக சொன்னார்கள். அப்படி இருக்காதென நினைக்கிறேன். அப்படி ஏதாவது பிரச்சனையிருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன். எல்லா பிரச்சனைகளையும் பற்றி புரிந்துணர்வுடன்தான் செயற்பட்டு வருகிறோம்.

இப்போது 40 கோடி ரூபா செலவிட்டு மயில்ட்டி மின்பிடி துறைமுக செயற்பாட்டை ஆரம்பிக்கிறோம். இந்த துறைமுகத்தை சுற்றியுள்ள மக்களின் காணிகளை விடுவிக்க விரைவில் நடவடிக்கை எடுப்போம்.

நாங்கள் இரண்டு மாதத்தின் முன்னதாக வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியை ஆரம்பித்தோம். செலயணியின் அடுத்த கூட்டம் அடுத்த வாரம் நடக்கவுள்ளது. அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கட்சி பேதமின்றி இங்குள்ள அனைத்து கட்சிகளின் நாடாளுமன்றம் உறுப்பினர்களிற்கும் அழைப்பு விடுத்துள்ளோம்.

வடக்கிற்கு மாத்திரமுரியதல்லாமல், நாடு முழுவதற்குமான பிரச்சனைகளும் உள்ளன. மது, போதைவஸ்து போன்றவை முக்கியமானவை. இது தீவு. எனவே போதைப்பொருள் வியாபாரிகளிற்கு அதை செய்ய வசதியாக உள்ளது. ஆனால் பொலிஸ், முப்படையும் அதை தடுக்க முயற்சிக்கிறார்கள்.

பாடசாலை பிள்ளைகளை குறிவைத்து போதைவஸ்து வியாபாரிகள் செயற்படுகிறார்கள். எங்களது பிள்ளைகளை போதைப்பொருள் வியாபாரிகளிடமிருந்து பாதுகாக்க வேண்டுமென பெற்றோரிடம் கேட்கிறேன்.

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களிற்கு மரணதண்டனை வழங்க நான் மேற்கொள்ளும் முயற்சிகள் உங்களிற்கு தெரியும். போதைப்பொருள் வைத்திருந்தால் கருணை காட்டாமல் அதிக பட்ச தண்டனை வழங்குவோம். மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியலில் முதலாவதாக உள்ள ஐவர் பாகிஸ்தானியர்கள். முதலாவதாக உள்ளவர் ஒரு பெண்மணி. இந்த பாகிஸ்தான் பிரஜைகளை பொறுப்பேற்பதை பற்றி புதிய பாகிஸ்தான் அரசுடன் பேசுவோம்.

நாட்டில் விவசாயத்திற்காகவும், குடிநீருக்கும் பாரிய பிரச்சனையுள்ளது. இதை தீர்க்கவே மொரஹகந்த, களுகங்கை நீர்த்திட்டத்தை ஆரம்பித்தோம். இங்கிருந்து மூன்று நீர்வழிகள் நீரை நாட்டின் பல பகுதிகளிற்கு எடுத்து செல்கிறது. ஒரு வழி கிழக்கிற்கு செல்கிறது. அடுத்த வழி குருணாகல், புத்தளம் பகுதிக்கு செல்கிறது. அதேபோல ராஜரட்டை மூலம் வடக்கிற்கு ஒரு வழி செல்கிறது.

இந்த திட்டத்தை படிப்படியாக செய்து இரணைமடுவிற்கு நீரை கொண்டு வருவார்கள். இது 24 மணித்தியாலத்தில் நடக்குமென பொய் சொல்லவில்லை. இதை மூன்று கட்டமாக பிரித்துள்ளார்கள். முதற்கட்டத்திற்கு 5 வருடம் தேவை. அடுத்த கட்டத்திற்கு 10 வருடம் தேவை. பத்து வருடத்தின் முடிவில் இரணைமடு வரை நீர்வரும்.

என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad