வடமாகாணசபையின் ஊழல் அம்பலம்! இவர்களை திருத்தப்போவது யார்? - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, August 23, 2018

வடமாகாணசபையின் ஊழல் அம்பலம்! இவர்களை திருத்தப்போவது யார்?

மாகாணசபை உறுப்பினர்களுக்கான பிரத்தியேக உதவியாளர்களை நியமிக்கும் விடயத்தில் முக்கியமான வடமாகாணசபை உறுப்பினர்கள் தமது மனைவிமாருக்கும் தமது நெருங்கிய உறவினர்களுக்கும் மறைமுக வேலைவாய்ப்பை ஏற்படுத்தி வினைத்திறனற்ற நிர்வாகத்தை நடத்திவந்தமை ஆதாரத்துடன் கண்டறியப்பட்டுள்ளது.



குறிப்பாக அவைத்தலைவர் சிவஞானம் முன்னாள் அமைச்சர் குருகுலராஜா, முன்னாள் அமைச்சர் டெனிஷ்வரன், மாகாணசபை உறுப்பினரகளான சுகிர்தன், லிங்கநாதன், பரஞ்சோதி  உட்பட பலர் தமது மனைவிமார்களையும் தமது உறவினர்களையும் உதவியாளர்களாக நியமித்துள்ளமை அதிர்ச்சியளித்துள்ளது.

இதில் வடமாகாணசபை உறுப்பினரான சுகிர்தன் தனது மனைவி தனது தந்தை தனது தம்பி என மூவருக்கும், இன்னொரு மாகாணசபை உறுப்பினர் பரஞ்சோதி என்பவர் தனது மனைவி  மற்றும் தனது சகோதரனுக்கும் என வேலைவாய்ப்புக்களை வழங்கி சாதனை படைத்துள்ளனர்.

போரில் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளாக ஆட்சியில் அமர்ந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களின் இத்தகைய செயற்பாடு கண்டித்தக்கது என வடமாகாண சமூகசெயற்பாட்டார்கள் தெரவிக்கின்றனர்.

இவ்விடயம் வடமாகாண முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசெல்லபட்டுள்ளதாக அவ்வட்டாரங்கள் மேலும் தெரவித்தன.

இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நியமனங்களுக்கான வெற்றிடத்திற்கு பொருத்தமானவர்களை நியமித்திருப்பின் வினைத்திறன் மிக்கதாக செயற்பட்டிருக்கமுடியும். ஆனால் அதனை விடுத்து தமது சுயநலன்களுக்காக தமது சொந்தங்களுக்கு வேலைவாய்ப்புகளை கொடுத்து வடமாகாணசபையில் குழப்பங்களை ஏற்படுத்திவந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதற்கு மேலதிகமாக நேர்மையாக செயற்பட்ட முதலமைச்சரின் மீது நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை சிறிலங்கா அரசாங்கத்திடம் சமர்பித்திருந்தனர். பின்னர் தமிழ் இளைஞர்கள் பேரெழுச்சியாக முதல்வர் விக்கினேஸ்வரனுக்கு ஆதரவாக திரண்டதை தொடர்ந்து அம்முயற்சியில் இருந்து பின்வாங்கி வடமாகாணசபையை தொடர்ந்தும் செயற்படவிடாமல் குழப்பங்களை ஏற்படுத்தி வந்திருந்தனர்.

1989 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட மாகாணசபை நிர்வாகம் வடக்கில் செயற்படாமல் இதுவரை காலமும் இருந்தது. எனினும் 2013 இல் நடத்தப்பட்ட தேர்தலின் ஊடாக முதற்தடவை தெரிவாகிய உறுப்பினர்களே, இத்தகைய ஊழலை செய்துள்ளமை எதிர்வரும் காலங்களில் இத்தகைய அரசியல்வாதிகள் எப்படி செயற்படுவார்கள் என்பதை கோடிகாட்டியுள்ளதாகவே நோக்கவேண்டும்.









1 comment:

  1. Chief Minister, Vigneswaran is equally,inefficient.He doesn't practise what he preaches .

    ReplyDelete

Post Bottom Ad