24 மணி நேரத்தில் 3 பல்டி அடித்த வடிவேல் சுரேஷ் - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, October 29, 2018

24 மணி நேரத்தில் 3 பல்டி அடித்த வடிவேல் சுரேஷ்

ஜனாதிபதி மைத்திரிபாலவின் முன்னிலையில் இன்று புதிய அமைச்சரவை பதவியேற்றது. இதன் வடிவேல் சுரேஷ், வசந்த சேனநாயக்கா ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

வடிவேல் சுரேஷ் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மூன்று முறை பல்டியடித்து எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

நேற்று காலையில் மஹிந்த ராஜபக்சவை சந்தித்து அவருக்கு தனது ஆதரவை வழங்கினார். பின்னர், மாலையில் செய்திளார்களை சந்தித்து, அதை மறுத்தார். சம்பிரதாயமாக வாழ்த்த மட்டுமே அங்கு சென்றதாக கூறினார். இன்று காலையில் அலரி மாளிகைக்கு சென்று ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்தார்.

அதேபோல, வசந்த சேனநாயக்கவும் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து ஆதரவு தெரிவித்திருந்தார்.

மலையகத்தின் ஏனைய எம்.பிக்களாக வே.இராதாகிருஷ்ணன், அரவிந்தகுமார் ஆகியோர் நேற்று மஹிந்த ராஜபக்சவை சந்தித்து ஆதரவு தெரிவித்திருந்தனர். ஆனால் இன்று மீண்டும் அலரி மாளிகைக்கு திரும்பி, ரணிலிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad