மக்களை ஏமாற்ற வியூகம் போட்ட மைத்திரியும் சுமந்திரனும்!! - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, August 31, 2019

மக்களை ஏமாற்ற வியூகம் போட்ட மைத்திரியும் சுமந்திரனும்!!

மாகாணசபை தேர்தலை நடத்தமுடியுமா என நீதிமன்றத்தை கேட்டதன் மூலம் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தான் தடையில்லை எனக்காட்டியுள்ளதாக மைத்திரி தெரிவித்துள்ளார்.நீதிமன்றத்தின் முடிவு ஏற்கனவே தெரியும் என்றும் ஆனாலும் பொதுமக்களுக்கு அது தெரியவேண்டும் என்பதற்காகவே நீதிமன்றத்தை நாடினேன் எனவும் கூட்டமைப்பு உடனான சந்திப்பை முடித்துக்கொண்டு வெளியில் நடந்துவரும்போது மைத்திரி சுமந்திரனிடம் தெரிவித்ததாக காலைக்கதிர் பத்திரிகைக்கு அவரே தெரிவித்துள்ளார்.

இதுபற்றி மைத்திரியிடம் விசாரித்தபோது சுமந்திரன் இதே நோக்கத்திற்காகவே தானும் மாகாணசபைத்தேர்தலை நடத்தவேண்டும் என தனிநபர் பிரேரணையை கொண்டுவந்ததாக தெரிவித்ததாக தமிழ்நாதத்திற்கு மைத்திரி தெரிவித்தார்.

மாகாணசபையை நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்த்தேசிய கூட்டமைப்பால் முன்வைக்கமுடியாமல் இருந்தது. ஆனால் அதுவே ஒரு குற்றசாட்டாக வரலாற்றில் பதியப்பட்டுவிடும் என்பதால் அதனை சரிசெய்யும் விதத்தில்தான்  தானும் இப்படி செயற்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார் எனவும் மைத்திரி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad