செய்திகள் தமிழ்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

செய்திகள் ஆங்கிலம் ஏனையவை

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்

மாவீரர் நாள் - 2011 தமிழ் ஆர்வலர்களின் கருத்துக்கள் - காணொளி
தொலைகாட்சி - தெரிவு செய்யப்பட்ட காணொளிகள்
ஜெயா தொலைகாட்சி - சீமான் - விசேட காணொளிகள்
சுற்றத்து முற்றம் - விசேட காணொளிகள்
நாடுகடந்த தமிழீழ அரசு- விசேட காணொளிகள்
நானொரு உதைபந்தாட்ட வீரன்
நாட்களுக்கு பிறகு விடுதலையாகியிருக்கிற எங்கள் மைதானத்தில் மிச்சமிருக்கும் இளைஞர்கள் பந்தை மாறி மாறி துரத்துகிறார்கள்.
முரண் (சிறுகதை)
தேவிகா அத்தப்பேருந்தில் ஏறிய போது ஓருசில இருக்கைகளை தவிர அத்தனையும் வெறிச்சோடிக் கிடந்தன. எந்த இருக்கையை தெரிவு செய்யலாம் என்று நோட்டம்விட்டவள் இளம்பெண்ணொருத்தி அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகில் அமர்ந்தாள்.
உணர்வுகளை இறக்கி வைத்த நேரம் - 14 (அறிமுகம் இல்லைஎன்றாலும் ஆறுதல் கிடைத்தது)
வயது அடிப்படை இல்லாதது அனுபவம். கருவில் முகிழ்க்கும் அந்த நொடியில் ஆரம்பமாகி ஆரோகணமாக இன்பம் மெல்ல மெல்ல அதிகரித்தாலும், அவரோகணமாக குறைந்துகொண்டே சென்றாலும் வாழ்நாளுக்கு தேவையான அடிப்படை அனுபவம் அந்த குழந்தைக்கு கிடைத்து விடுகின்றது. பிறந்து அழும்போது எழும் உயிர்த்தேடல் கடைசிவரைக்கும் தொடர்கிறது. விழம்போதும் எழும்போதும் அவர்களின் உள்ளம் வாழ்வின் சூத்திரத்தை அறிகிறது.
உண்மை அறியும் பொய்கள்
சமாதானம் தருவிக்கப்பட்டதாய் சொல்லப்படுகிற எனது நிலத்தில் வீதிகளை விழுங்கிக்கொண்டு வளர்ந்திருக்கிற விளம்பர மரங்களின் நிழலில் நாய்களுடன் சேர்ந்து வீடுகள் பறிக்கப்பட்ட உடல்களும் படுத்துக் கிடக்கின்றன.
உயிரே உயிரே - 08 (காணாமல்போன காதல்)
வாமனும் சுமதியும் எதிரெதிர் கதிரைகளில்தான் அமர்ந்திருந்தாலும் எதுவுமே கதைக்கவில்லை.   ‘அம்மா முட்டைபொரிக்கிறா. எல்லாருக்கும் சேத்து சாப்பாட்டை எடுத்துக்கொண்டு வாறன்’ என்றபடி அமுதா குசினிக்குள் நுழைந்தாள். வாமனுக்கோ சுமதியை நிமிர்ந்து பார்க்கவே அச்சமாக இருந்தது. தலையைக் குனிந்தபடியே இருந்தான்.  
போர்க்களத்துக் குதிரைகள்
குண்டுபட்டு விழுந்த வீரர்களின் போர்க்களக் குதிரைகள் சுமப்பதற்கு யாருமற்று அங்குமிங்கும் அமைதியாய் அலைகின்றன. எல்லோருக்காகவும் ஓடித்திரிந்த அவற்றின் கால்கள்
பொய்யின் புதல்வன் சிங்களவன் - அருட்தந்தை சூ.ம.ஜெயசீலன்
பால்குடித்த குழந்தையின் வாயில் இரத்தத்தை புகட்டியவன் பின்னாலேயே சென்றோம், எம் மகனின் மகளின் அங்கங்களை குதறியவனுடன் கோபத்தை வெளிக்காட்டாதபடிக்கு போனோம். சங்கறுத்தவனுடன் சமபந்தி காணவா முடியும். இருந்தாலும் என்ன செய்வது எங்கள் நிலமை அப்படி நஞ்சு கொடுத்தவனுடன் நடக்கவேண்டிய துப்பாக்கியம்.
கனடாவில் நடைபெற்ற சர்வதேச மனித உரிமைகள் மாநாடு! (படங்கள் இணைப்பு)
21ஆம் நூற்றாண்டில் மனித உரிமை பாதுகாப்பும் அது எதிர்கொள்ளும் அறைகூவல்களும் - இலங்கை குறித்து ஒரு ஆய்வு என்ற தலைப்பிலான சர்வதேச மனித உரிமைகள் மாநாடு கடந்த சனிக்கிழமை பெப்பிரவரி 18ஆம் நாள் காலை 10 மணிக்கு ரொறன்ரோ கனடாவில் ஆரம்பமாகி நடைபெற்றது. உலகெங்கும் இருந்து வருகைதந்துள்ள மனித உரிமை வல்லுனர்கள் பேராளர்கள் கலந்து கருத்துரை வழங்கிய இம்மாநாட்டில் தமிழ் பிரதிநிதிகளும் பல்வேறு நாடுகளில் இருந்து வருகை தந்து கலந்து கொண்டனர்.
பல்லிவாலும் பயங்கரவாதிகளும்
அசைபட்ட கதவிடுக்கில் அகப்பட்டு அறுந்து விழுந்து துடிதுடித்துக் கொண்டிருந்த பல்லி வாலைப் பார்த்து அழுதுகொண்டிருந்த என் பதினாறு வயது மகனை பயங்கரவாதியென சொல்லிக் கொண்டு கூட்டிப் போயின.
உயிரே உயிரே - 07 (காதலன் வந்தான்)
என்னதான் மண்டையைப்போட்டு உடைத்தாலும் சுமதிக்கு அமுதாவைத்தவிர வேறுவழி எதுவுமே தெரியவில்லை. அவள் என்னை சகித்துக்கொள்வதைப்போல நானும் அவளை சகித்துக்கொள்ள வேண்டியதுதான். அமுதா இயல்பாகவே பொறுமைசாலி என்பதால் பொறுத்துப்போவாள்.  
வானமே எல்லை (கவிதை)
அயற்சியும் பயமும் கொண்ட அடுகிடைத் தூக்கம் நீக்கி முயற்சியாய்ப் பாதம் வைத்தால் முழுமதி தரையில் தோன்றும்! உயர்ச்சியென் றிமயம் காட்டும் உன்றனின் காலம் வெல்லப் பெயர்ச்சியாக் கிரகம் மாறும்! புறப்படு மனிதா இன்றே!
உணர்வுகளை இறக்கி வைத்த நேரம் - 12 (அழுவதற்கு நாதியற்ற இனமானோம்)
உலகை உருக்குலைத்த இரண்டாம் உலகப்போரில் தன்னை ஹிட்லரின் கூட்டாளி ஆக்கிக்கொண்ட ஜப்பான், ஆசியாவில் பிரிட்டிஷ் ஆதிக்கம் இருந்ததால் அதனை சிதைத்து அச்சிதையில் தன்னை நிலைநாட்ட துடித்தது. பிரிட்டிஷாரை இந்திய மண்ணிலிருந்து வேரோடு பிடிங்கி எறிய நினைத்த சுபாஸ் சந்திரபோஸ் போன்ற தலைவர்களின் மறைமுக ஆதரவும், பர்மா களத்தில் கரம் கொடுத்த மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்த எண்ணற்ற மக்களின் துணையுடன், தான் நினைத்ததை யப்பானுக்கு பெற்றுத் தந்தது. யப்பான் நினைத்ததுபோலவே பர்மா, சயாம், மலேசியா, சிங்கப்பபூர் என ஒவ்வொரு நாடுகளாக அது கைப்பற்றியது.
திரும்ப வரும் முகங்கள்
திரும்பவும் திரும்பவும் விழிகளை காயப்படுத்திக்கொண்டு நினைவுகளுக்குள் வந்து விழுகின்றன. மனிதர்களின் முகங்கள். காலம் காட்சிப்படுத்தும் அம் மனிதர்கள் பற்றிய விசித்திர துயரோவியங்களை நீங்கள் அவதானித்திருக்கிறீர்களா?
உயிரே உயிரே - 06 (தோழி அமுதா)
மீண்டும் சுமதியின் கண்கள் கலங்கின. உதட்டை பற்களால் கடித்து தன்னை சமாளித்துக்கொண்டிருந்தாள். "வாமனத்தேடி வந்தியா?" என்று மெதுவாகக் கேட்டாள் அமுதா. தலையை மட்டும் ஆட்டிய சுமதியைப்பார்க்க பாவமாய் இருந்தது அமுதாவுக்கு. "அமுதாம்மா சாப்பிட்டுக்கொண்டே கதையுங்களன். பிறகு கூட்டிக்கொண்டுபோக வந்திருவாங்க." என்ற தாயாரின் ஆலோசனையை ஏற்று அமுதா எழுந்து சென்றாள். இரண்டு தட்டுகளில் உப்புமா கொண்டு வந்தாள். பின்னோடு தேநீரும் வந்தது.
நெருப்பெடுத்துக் கொடுத்த கைகள்
குடிசைகளை கொழுத்துவதற்கு நெருப்பெடுத்துக் கொடுத்த கைகள் சாம்பல்களை தட்டிவிட்டு கட்டடங்களுக்கான அடிக்கல் நாட்ட வருகின்றன.
உயிரே உயிரே - 05 (தாயின் பரிவு)
கவிமதி என்ற அந்தப்பெண் மோட்டார் சைக்கிளை என்னமாய் ஓட்டுகிறாள்? இருட்டு நேரம் என்பதுகூட அவளது நினைவில் இல்லையா? இந்த வேகத்தில்போய் ஏதாவது நடந்துவிட்டால்? தன்னுடைய சைக்கிளின் வெளிச்சத்தில் மட்டுமே பாதையைப்பார்த்து இந்தவேகத்தில் பறக்கிறாள் என்றால் பகலில் எப்படி ஓட்டுவாள்? இவளுக்கொன்றும் அதிக வயதிருக்காது. எப்படியும் ஒரு இருபதுதான். துணிச்சல்காரப்பெண்ணாக இருப்பாள்போலும். இல்லாவிட்டால் இந்த இரவில் புறப்பட்டிருப்பாளா என்றெல்லாம் சுமதியின் எண்ணம் கவிமதியைச் சுற்றியே வட்டமடித்துக்கொண்டிருந்தது.  
எங்களுடைய அடுத்த சந்ததி இன்னும் வேகமாகப் போராடும்! - விகடன் சஞ்சிகைக்கு தமிழ்க்கவி
ஈழத்தின் இன்றைய நிலைமை என்ன? அங்கே இருந்து தமிழகத்தில் தன்னுடைய சொந்தங்களைப் பார்க்க வந்த தமிழ்க் கவி என்பவரை சந்தித்தோம்.   மீண்டும் அவர் ஈழத்தின் வன்னிப் பகுதிக்குச் செல்ல வேண்டிய வாழ்க்கை நெருக்கடி இருந்தாலும், அதிக உணர்வுடன் பேசியது ஆச்சர்யம் கொடுத்தது! கவிஞர், எழுத்தாளர், தமிழ்த் தேசியத் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்.  
உணர்வுகளை இறக்கி வைத்த நேரம் - 11 ( பாதுகாப்பதாய் கூறி சங்கறுத்த காடையன்)
வளர்ந்து தளைக்க வேண்டிய வாழையின் பிற்கன்றை வெட்டி எறிந்ததுபோல தன் பிள்ளைகளின் பிள்ளைகளை காடையர்கள் குண்டுகளால் குதறியது கண்டு கதறிய அவர், நாங்கள் கண்டது துன்பம் மட்டும் தான் பாதர். ஆனாலும் இது சொந்த நாட்டுக்கான கஷ்டம் என்றார். எத்தனை உறவுகள் துடித்தது தெரியுமா… கையில்லை… காலில்லை…. எங்க உறவுக்கார பையன் ஒருவனுக்கு தலையில்லை…  உயர் பாதுகாப்பு வலையம் என்று சொன்னாங்க. அங்க போனா உங்களுக்கு பாதுகாப்பு நிச்சயம் என்று அறிவிச்சாங்க. அத நம்பி போகையில.. நாங்க நம்பித்தான் போனோம் பாதர். அங்க போனா அந்த இடம் பார்த்து குண்டு போட்டாங்க.  
சத்தங்களுக்குள் ஒளித்துவைக்கப்பட்டிருக்கும் மகன்
வெளிச்சங்கள் அணைக்கப்பட்ட வீடுகளுக்குள் பயம் விழித்துக்கொண்டிருந்த ஓரிரவில் வெள்ளை எருமைகளில் இருட்டில் வந்திறங்கிய சப்பாத்துக்கள் அணிந்த இரத்த தாகம் மிக்க மிருகங்கள் துப்பாக்கிகளை நெற்றியில் பிடித்தபடி எனது மகனையும் ஒரு நாள் இழுத்துக்கொண்டு போயின.
உயிரே உயிரே - 04 (நண்பியைத்தேடி)
அமுதாவின் நினைவு அப்போதுதான் வந்தது சுமதிக்கு. ‘அமுதாவ தெரியுமா? நேஸ். இங்கதான் எங்கயோ ஒரு கொஸ்பிட்ரல்ல வேலை செய்யிறா? முதல் யாழ்ப்பாணத்தில வேலை செய்தவ.’ ‘அப்ப எங்கட அமுதாக்காவத்தான் கேக்கிறிங்க போல. உயரம், வெள்ளை, இதில ரெண்டு தெத்திப் பல். வடிவாய் சிரிப்பா. அவவையா கேக்கிறிங்க?’ என்று அந்த போராளிப்பையன் நடித்துக்காட்டிக்கொண்டு கேட்டவிதம் அத்தனை துயரத்துக்குள்ளும் அவளுக்கு சிரிப்பை ஏற்படுத்தியது.
உணர்வுகளை இறக்கி வைத்த நேரம் - 10 (இழப்புக்கள் வழி நம்பிக்கை பெறுவோம்)
ஆயுள் நிறைந்தவைகள் அனுபவவங்கள். முழுமையற்ற பூமியில் குடத்தில் தண்ணீர் அள்ளி, ஒவ்வொரு மிளகாய்ச் செடியின் அடிப்பகுதியிலும் ஊற்றிய அனுபவம், போதுமான வாய்ப்புக்களின்றி தடுமாறுகையில் கைகொடுக்கிறது. கல்லில் இடறிய காலில் இரத்தம் வந்தபோது எச்சிலால் மருந்திட்டோம். முன்னேறுவதற்கு எல்லாமே வாய்ப்பாகும் என்பதற்கு இன்று இதுவே முகவரியாகின்றது. பேச்சுக்குரலை ஒலிபரப்பாத அலைபேசியால் அல்லலுற்ற வேளையில், அதன் இயக்கத்தை நிறுத்திவிட்டு மீண்டும் இயக்குங்கள் என்றார்கள். இயலாது என்று ஒன்றுமில்லை. மீண்டும் முதலிலிருந்து தொடங்குகையில் வெற்றி உறுதி என்பதற்கு அதுவே அரிச்சுவடியாகின்றது.
போதுமென்ற மனம்
பேரரசன் ஒருவன் இருந்தான். அவன் நாடு எல்லா வளமும் நிறைந்த மிகப்பெரிய நாடு. அவனிடம் கப்பம் கட்டும் சிற்றரசர் பலர். அவனது செல்வச் செழிப்புக்கும் அளவே இல்லை. இப்படி இருந்தும் அவன் மனத்தில் எப்பொழுதும் கவலை நிறைந்திருந்தது. மகிழ்ச்சி இல்லை. சரியான உறக்கமும் இல்லை.
உணர்வுகளை இறக்கி வைத்த நேரம் - 09 (வரலாற்றை மறக்காத இனத்திற்கு வெற்றி நிச்சயமே!)
நான் சென்றிருந்த ஊரில் தினமும் மாலையில் அங்கிருந்த ஆலயத்தில் திருப்பலி நிறைவேற்றினேன். திருப்பலியில் மறையுரை நிகழ்த்திய பிறகு அம் மறையுரையில் இருந்து ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கான சரியான விடையை அல்லது சரியான உணர்வுகளை வெளிப்படுத்துவோருக்கு திருவிழா நாளில் பரிசு வழங்கப்படும் என்ற அறிவிப்பும் கொடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, ஜூலை 19ஆம் திகதி, இன்றைய கால சமூக வாழ்க்கைச் சூழலில் கறை படிவது எமது வாழ்க்கைக்கு உகந்ததா? என்று வினா தொடுத்தோம்.  
ததேகூ தமிழருக்கு துரோகம் செய்கிறது - கஜேந்திர குமார் பொன்னம்பலம்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சொல்வதற்கும் செயற்படுவதற்கும் உள்ள வேறுபாட்டை விளக்குகின்றார் தமிழ்த்தேசிய மக்கள் முன்னனியைச் சார்ந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.   http://www.adaderana.lk/tamil/opinion_alindaya.php?nid=2677
நீராதேவி
நீராதேவி யாருக்கும் சொந்தமில்லாதவள். நிறமில்லாமலிருக்கும் அவளிடம் எந்த வாசனைகளுமில்லை. சுவைகளும் இல்லை.
நம்பும் படியே நடக்கும்!
அமெரிக்கப் பத்திரிக்கையாளரும், பேராசிரியருமான நார்மன் கசின்ஸ் (Norman Cousins) கலிபோர்னியா பல்கலைகழகத்தில் மனித உணர்வுகள் உடலில் ஏற்படுத்தும் பாதிப்புகளைப் பற்றி ஆராய்ச்சிகளும் நடத்தியவர். அவர் ஒரு பேட்டியில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் நடந்த ஒரு கால் பந்துப் போட்டியின் போது நேரில் கண்ட தன் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். பெருந்திரளாக அந்த விளையாட்டைக் காண வந்திருந்த ரசிகர்களில் சிலர் திடீரென்று நோய்வாய்ப்பட்டனர். அவர்கள் அனைவரும் அங்கிருந்த குளிர்பான எந்திரம் ஒன்றிலிருந்து குளிர்பானம் குடித்திருப்பது தெரிய வந்தது. அது தான் காரணமாக இருக்கும் என்று மருத்துவர்கள் நினைத்ததால் உடனடியாக ஒலிப் பெருக்கியில் அறிவித்தனர். யாரும் அந்த குளிர்பான எந்திரத்தில் இருந்து குளிர்பானம் குடிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டனர். அதைக் குடித்தவர்களுக்கு ஏற்பட்டிருந்த உடல்நலக்குறைவின் அறிகுறிகளையும் விவரித்தனர். உடனே அதில் குளிர்பானம் வாங்கிக் குடித்திருந்து அது வரை நோய்வாய்ப்படாதவர்களும் அந்த நோய் அறிகுறிகளை உணர ஆரம்பித்தனர்.  
உணர்வுகளை இறக்கி வைத்த நேரம் - 8 (அனலில் இட்ட புழுக்களாய் துடித்தோம்)
குழந்தைகளின் உலகம் உன்னதமானது. கத்தி ஆர்ப்பரித்தாலும் கண்ணீரின்றி அழுவார்கள். அன்போடு அழைக்கும் பகைவர்களையும் நம்பிச் செல்வார்கள். கொஞ்சமாய் இருந்தாலும் நெஞ்சம் நிறைந்து மகிழ்வார்கள். சின்னச் சின்ன கீறல்களையும் தடுமாற்றங்களையும் மறந்து உற்சாகம் தருவார்கள். மழலை மொழியில் இறைவனின் குரலொலி இசைப்பார்கள். குழந்தைகள் இருந்தால் இரைச்சல் இன்னிசையாகின்றது. சிந்தும் உணவுகள் ரங்கோலியாகின்றது. அவர்களது சேட்டைகள் கூட நகைச்சுவை நாடகமாகின்றது.  
மனசுக்குள் வளரும் ஆலமரம்
ஒற்றைக்கால் கொண்ட பச்சைக் கம்பளக் கட்டிலாய் விசாலித்திருக்கிற ஆலமரம் பெருமைகள் நிறைந்துவழிய தன் சாதனைச் சொற்களை என் செவிகளுக்குள் திணித்தது.
கூட்டமைப்பு மீதான தமிழ் சமூக அமைப்பின் மனு: த.தே.கூ சொன்னவைகளின் { செய்பவைகளின் அல்ல} மறுவாசிப்பே!
அண்மையில் தமிழ் சிவில் அமைப்புகளால் தமிழ் தேசியக்கூட்டமைப்பினருக்கு ஒரு மனு கையளிக்கப்பட்டிருந்தது. முள்ளிவாய்க்காலின் பின்பு அடுத்தடுத்து தமிழர்கள் மேல் திணிக்கப்பட்ட 4 தேர்தல்களில் தமது நிலைப்பட்டை,தமது ஜனநாயகப்பிரதிநிதிகளான த.தே.கூட்டமைப்பை{ அவர்களின் விஞ்ஞாபனத்தை} மீண்டும் மீண்டும் தேர்வு செய்து, தெளிவான ஒரு செய்தியை உலகிற்கு எடுத்துக்கூறிய தமிழ் மக்கள், அதே அரசியல் விருப்பை மீளவும், தாங்கள் யாரை தெரிவு செய்தார்களோ அவர்களுக்கே ஞாபகப்படுத்தவேண்டிய நிலைக்கு இரண்டரை வருடங்களில் வந்துள்ளமை மிகவும் துரதிர்ஷ்டவசமானது..  
உயிரே உயிரே - 03 (நாவல்) - ஓவியர் வீடு
பேருந்து நிலையத்தில் இறங்கியபோது சுமதிக்கு களைப்பாய் இருந்தது. தலை வலித்தது. தேநீர் பருகினால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. எப்படிக்குடிப்பது? வாழ்நாளில் ஒருதடவைகூட கடையில் தேநீர் குடித்தறியாதவள் ஆயிற்றே. என்றாலும் கடைக்குச்சென்று தண்ணீர்ப்போத்திலொன்றை வாங்கிக்கொண்டாள்.  
உணர்வுகளை இறக்கி வைத்த நேரம் - 7 (தோல்வி அல்ல தொய்வு)
மீண்டும் என் அலைவரிசைக்கே என் மனம் வந்தது. விரைவாக விசாரணை செய்துவிட்டு இன்றைக்கு விட்டு விடுவான் நாளைக்கு விட்டு விடுவான் என்று நாட்களை எண்ணிக்கொண்டே இருந்தேன். ஆனால் நான் போன முதல் மாதத்தில் ஒரு விசாரணை செய்த பிறகு மீண்டும் 2010 மார்கழி மாதம் தான் இரண்டாவது விசாரணை செய்தார்கள். அதன் பிறகும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஏன் எங்களை வைத்திருக்கிறான் என்ன செய்யத் திட்டமிட்டிருக்கிறான் என்று நினைத்தாலும் அந்த நேரத்தில் ஒன்றும் தோன்றவில்லை. மூளை மரத்துபோனதுபோலதான் இருந்தது.  
தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் தாம் வலியுறுத்திய விடயங்கள் குறித்து மன்னார் ஆயர் செவ்வி. - பிபிசி
தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் தாம் வலியுறுத்திய விடயங்கள் குறித்து மன்னார் ஆயர் செவ்வி. http://www.bbc.co.uk/tamil/multimedia/2011/12/111214_rayapputotna.shtml
தாயகம் தேசியம் சுயநிர்ணய உரிமை அடிப்படைகள்! அவற்றை விலக்கிய தீர்வுகள் அர்த்தமானவையல்ல!! - தமிழ்ச்சமூக ...
வட மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் நடத்துமாயின் அதில் த. தே. கூ நேரடியாகப் பங்கெடுக்கக் கூடாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தமிழ் சிவில் சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது.
உயிரே உயிரே - 02 (நாவல்) - கிளிநொச்சி வரவேற்றது
வாமன் மருத்துவமனையில் இருந்து புறப்படும்போது சுமதியிடம் சொல்லிக்கொள்ளாமல்தான் புறப்பட்டான். அவளிடம் சொன்னால் அவள் கேட்கும் ஆயிரம் கேள்விகளுக்கும் விளக்கம் சொல்லிக்கொண்டிருக்க அவனால் முடியாது. அதனால்தான் அவளின் விடுமுறை நாளாகப்பார்த்து புறப்பட்டுவிட்டான். அந்தப் பயணத்தைப்பற்றி அவனேகூடத் திட்டமிட்டிருக்கவில்லை. திடீரெனத்தான் அவனுக்கான அழைப்பே வந்திருந்தது. சொன்ன திகதியில் அவன் புறப்பட்டுவிட்டான். எப்படியும் சுமதி தன்னை தேடுவாள் என்பதால் அமுதாவிடம் கடிதமொன்றைக் கொடுத்துவிட்டுத்தான் புறப்பட்டான்.
உணர்வுகளை இறக்கி வைத்த நேரம் - 6 (பொட்டல் வெளியில் பொட்டிழந்தோர்)
மக்கள் நிறைய வந்துகொண்டே இருந்ததால் மலசலகூடப் பிரச்சனை அடுத்த பிரச்சனை ஆயிடுச்சு. அவ்வளவு பேரும் எங்கதான் போறது. நாங்கள் ஓர் இடத்தில கொஞ்சப்பேர் தங்கியிருந்தோம். பதினைந்து குடும்பங்கள் வரை இருக்கும் என நினைக்கிறேன். எங்களுக்காக ஒரு ரென்ற் அமைத்து அதில் சின்ன பிள்ளைகளை தூங்க வைத்தோம். நாங்கள் வெளியில்தான் படுத்துக்கொண்டோம்.  
மனிதம் மரணிக்காது (சிறுகதை)
உடலால் இயலாதவர்களைகண்டால் தாரணியால் உடைந்துபோகாமல் இருக்கமுடிந்ததே இல்லை. எந்த மூலைமுடுக்கில் ஒரு இயலாதவர் தெரிந்தாலும் அவர்களுக்காக அவளுக்குள் சுரக்கும் இரக்கஉணர்வை அவளால் தாங்கமுடியாதவாறு கண்கள் பொலபொலத்துவிடுவது வழமையாகிவிட்டது.  
எனது பிள்ளையின் காணி
போகவும் வரவும் நான் பார்த்துக்கொண்டு போகிற எனது பிள்ளையின் காணியை இவர்கள் உழுது வைத்திருக்கிறார்கள்.
தமிழகத்தில் எழுச்சியுடன் மாவீரர்நாள் நிகழ்வுகள் (படங்கள் மற்றும் காணொளி இணைப்பு)
தமிழகத்தில் எழுச்சியுடன் மாவீரர்நாள் நிகழ்வுகள் தமிழகத்தில் தேசியத் தலைவரின் பிறந்தநாள் நிகழ்வுகளும் மாவீரர்நாள் நிகழ்வுகளும் எழுச்சியுடன் இடம்பெற்றுள்ளன. தமிழ்நாடு காஞ்சிபுரத்தில் மக்கள் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வுகளில் பழ.நெடுமாறன், வை.கோ, மகேந்திரன், தியாகு, கொளத்தூர் மணி போன்றோர் உட்பட பல தலைவர்களும் செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டனர். நவம்பர் 26ஆம் நாள் தேசியத் தலைவரின் 57ஆம் பிறந்தநாளை முன்னிட்டு 57 கிலோகிராம் எடையுள்ள கேக் வடிவமைக்கப்பட்டு விமரிசையாக அப்பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. நவம்பர் 27ஆம் நாளில் மாவீரர்நாளன்று காலை எட்டு மணியளவில் தமிழீழத் தேசியக் கொடியேற்றலுடன் நிகழ்வு தொடங்கப்பட்டது. தமிழீழத் தேசியக் கொடியை திரு.கொளத்தூர் மணி அவர்கள் ஏற்றிவைத்தாரல். அதைத் தொடர்ந்து தியாகி செங்கொடி நினைவு இல்லம் திறந்து வைக்கப்பட்டது. அதன்பின்னர் கலைநிகழ்ச்சிகள், சிறப்பு விருந்தினரின் பேச்சுக்கள் என்பன இடம்பெற்றன. தாயக நேரப்படி அனைத்து நிகழ்வுகளும் கைக்கொள்ளப்பட்டன. புலிகளின் குரல் வானொலியில் வெளியான தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் வெளியிட்ட மாவீரர்நாள் அறிக்கை ஒலிக்கவிடப்பட்டு, மாவீரர் அஞ்சலி, தீபமேற்றல் என அனைத்தும் ஒழுங்குமுறையில் நிகழ்ந்தேறின. இந்நிகழ்வில் பெருமளவான தமிழக மக்கள் கலந்துகொண்டதுடன் தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து தமிழ்நாட்டில் வாழும் ஈழத்தமிழர்கள் பலரும் கலந்துகொண்டனர். உணர்வுமயமான மாவீரர்நாள் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்று முடிந்தன. இந்நிகழ்வில் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்பட்டு நாள்முழுவதும் நிகழ்வுகள் இடம்பெற்றதும், புலிகளின் குரல் வானொலியில் வெளியான தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்நாள் அறிக்கையின் ஒலிவடிவம் ஒலிக்கவிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் தேசியத் தலைவரின் பிறந்தநாள் நிகழ்வுகளும் மாவீரர்நாள் நிகழ்வுகளும் எழுச்சியுடன் இடம்பெற்றுள்ளன. தமிழ்நாடு காஞ்சிபுரத்தில் மக்கள் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வுகளில் பழ.நெடுமாறன், வை.கோ, மகேந்திரன், தியாகு, கொளத்தூர் மணி போன்றோர் உட்பட பல தலைவர்களும் செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டனர். முன்னர் காஞ்சிபுரத்தின் மங்கல் பாடி எனும் கிராமமே தற்போது செங்கொடியூர் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு அங்கு வீரமங்கை செங்கொடியின் திருவுருவச் சிலையும் திறந்து வைக்கப்பட்டது.
"கனவுகள் நிறைந்த நிலங்கள்”
கல்லறையுண்ணிகள் புரட்டிப் போட்டிருக்கின்ற வீரர்களது வித்துடல் நிலங்களில் ஆடுகள் புல் மேய்ந்து கொண்டிருக்கின்றன. அந் நிலங்களை நாம் கட்டித்தழுவ முடியாதபடி கழுகுகள் கண் பதித்திருக்கின்றன.
அவுஸ்திரேலியா மெல்பேர்ண் நகரின் மாவீரர் நாள் நிகழ்வுகள் (படங்கள் இணைப்பு)
தாயக மீட்புப்போரில் தம்முயிரை ஈந்து உயிர்க்கொடை புரிந்த உத்தமர்களை நினைவுகூரும் மாவீர்நாள் நிகழ்வு ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை(27ம்) உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
"விதைமண்ணிலிருந்து பேசும் ஆன்மாக்கள்”
கிளறியெறியப்பட்டு கொட்டப்பட்டிருக்கிற விதைகுழி மண்ணுக்குள்ளிருந்து கனவு சுமக்கும் ஆன்மாக்கள் தம்மை நேசிக்கிற உங்களுக்காக எழுதுகின்ற கவிதை இது.
வரலாற்றைப் படைத்தவன்
உலகில் தற்போது புழக்கத்திலிருக்கும் தொன்மையான மொழிகளுள் ஒன்றான தமிழ்மொழியைத் தாய்மொழியாகப் பேசும் தமிழினத்திற்கென்று மிக நீண்ட வரலாறு உள்ளது. தமக்கான இறைமையைப் பேணி தம்மைத் தாமே ஆண்டும் நிர்வகித்தும் தனித்துவமான பண்பாட்டைப் பேணியும் வந்த தமிழினம் ஆதிமுதல் வாழ்ந்துவந்த நிலப்பகுதிகளில் இலங்கைத்தீவும் ஒன்று.  
சாவற்ற சந்நிதியின் பாடல்! ஈழத்தில் இருந்து...!- பொன்.காந்தன் (படங்கள் இணைப்பு)
கார்த்திகை எங்கள் இனத்துக்கும் மனத்துக்கும் எழுதுகிற கதையை சொல்லத்தவித்து துவழும் உள்ளங்களில் இருந்து ஓங்குகிற உருவம் இது. புல்லரிக்கிற ஒரு கவிதையை பொழிவதற்கு புதுவை இல்லையென்றும் புனிதர்களை பல்லக்கில் ஏற்றிவைத்து பாடுதற்கு ஒரு பாவலனும் இல்லையென்றான ஏக்கவெளியில் நின்றுகொண்டு கல்லறைத்துண்டுகளை கவியாக்கி காலக்கடமையை அந்தக் காவல்தெய்வங்களின் நித்திய கடனை நிறைவேற்ற நெஞ்சம் பதறிடுமாம்.
”உறங்குமிடங்களிலிருந்து அகதிகளாக்கப்பட்ட உயிர்முகங்கள்”
ஒளிர்கிற சுடர்களுக்கு மேலாகவும் பூக்களின் இடைவெளிகளாலும் எங்களை நோக்கி அவர்கள் மிதந்து வருகிறார்கள்.
உணர்வுகளை இறக்கி வைத்த நேரம் - 5 (பிணவாடையில் கரைந்துபோன காற்று)
அனுபவங்களே மனிதர்களின் பெற்றோராக, உற்றாராக, மற்றோராக, நல் ஆசானாக மாறிப்போவதை துயரங்களே உறுதி செய்கின்றன. காணுகின்ற காட்சிகள் அனைத்தும் ஒலியோடு பேசும் பட்சிகள் பலவும் சருகுகளின் சலசலப்புக்கும் சங்கடங்களின் முணுமுணுப்புக்களுக்கும் கூட அனுபவமாகி விடுகின்றது. போக்கிடமற்ற பொழுதுகளில் சோகத்தில் சோர்வுற்று, துயரங்களில் தோய்தெடுத்த முகமாக என்முன்னே வந்தமர்ந்தார் முப்பந்தைந்து வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர்.  
மாவீரர்நாள் குழப்பவாதிகள் குறித்து தமிழீழ விடுதலைப்புலிகள் அறிக்கை! தமிழ்நாட்டு உணர்வாளர்களை ...
புலம்பெயர் நாடுகளில் இன்று தமிழ்த்தேசியத்துக்கான போராட்டப்பரப்பிலே விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்பாக நிலவிவரும் ஐயங்களை - குறிப்பாக மாவீரர் நாள் நிகழ்வு தொடர்பாக நிலவிவரும் குழப்பநிலையைத் தெளிவுபடுத்தும் நோக்குடன் இவ்வறிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியிடப்படுகின்றது.
உணர்வுகளை இறக்கி வைத்த நேரம்-4 (யாருக்கும் யாரும் துணையில்லை)
இன்னொரு இடத்தில் நாங்கள் கண்ணார பார்த்த கொடுமை. ஒரு தாய் அழுத தமது குழந்தையை மடியில் கிடத்தியிருந்தாள். மண்ணில் சிதறடிக்கப்படாது இன்னும் சுரந்து கொண்டிருக்கும் தம் பாலை உணவாகப் புகட்டிக்கொண்டிருக்கின்றாள். குழந்தையும் மகிழ்ச்சியோடு சுவைத்திருக்கின்றது. இதனிடையே எங்கிருந்தோ வந்த ஷெல் அந்த தாயின் கழுத்தில் பட்டிருக்கிறது.
உணர்வுகளை இறக்கி வைத்த நேரம்-3 ( தலைவரை ஏமாற்றினோம் தலையறுபட்டோம்)
குடும்பங்கள் வரலாற்றை போதிக்கும் போதி மரங்கள். தம் முன்னோர் விட்ட சென்ற, விடுதலை  வேட்கையையும்  வீரம் செறிந்த வார்த்தைகளையும் பொக்கிசமாக காத்துவரும் பெட்டகங்கள். வலிகளை தாங்கி கொண்டு காலாகாலத்திற்கும் அழிந்திடாமல் பேசும் கல்வெட்டுக்கள்.   அதனால்தான், “ நீங்கள் எவ்வாறு விடுதலை இயக்கத்தால் கவரப்பட்டீர்கள்? இந்த இலட்சியத்தை நோக்கி உங்களை உந்தி தள்ளிய காரணிகள் எவை? என்று தன்மான தமிழன் பிரபாகரனிடம் பிரண்ட்லைன் பத்திரிகை நிருபர் கேட்டதற்கு, “அது நீண்ட கதை. என் சிறுவயதில், 1958ல் நடைபெற்ற இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களைப்பற்றி எனது பெற்றோர் பேசிக்கொள்வது வழக்கம்…. நமக்கென ஒரு நாடு வேண்டும். நாமும் திருப்பி தாக்க வேண்டும் என்ற உணர்ச்சி வரும்” (30.12.1985) என்று தன் இதயம் வரலாற்றை நிரந்தர துடிப்பாக்கியதை நினைவு கூர்ந்தார்.  
10000 மணி நேரக் கோட்பாடு
உலகில் பல நூறு கோடி மக்கள் வாழ்ந்தனர், வாழ்கின்றனர். இவர்கள் எல்லோருமே வெற்றிப்பாதையில் நடைபோடுகிறார்களா, வாழ்வின் உச்சாணிக்கொம்பில் நிற்கிறார்களா? இல்லை. பெரும்பாலானவர்களின் வாழ்க்கை மிகச்சாதாரணமாகத் தொடங்கி மிக உயர்ந்த இடத்தைத் தொட்டு விடுகிறது. அதற்குக் காரணம் என்ன?
ஓவியர் பயஸ் - வண்ணங்களில் கரைந்து கலைந்த கலைஞன்
வன்னியில் நடைபெற்று முடிந்த இன அழிப்புப் போரில் தமிழ் மக்களின் சொத்துக்கள், கால்நடைகள், உயிர்கள் எல்லாமும் பறிக்கப்பட்டுவிட்டன என்பது உண்மை தான்.