புலிகள் குறித்து பேசி அர­சியல் செய்­வ­தை­விட புலித்­த­டையை நீக்­கலாமே? - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, October 8, 2018

புலிகள் குறித்து பேசி அர­சியல் செய்­வ­தை­விட புலித்­த­டையை நீக்­கலாமே?

விடு­தலைப் புலிகள் மீண்டும் வர­வேண்டும் என பகி­ரங்க மேடையில் பேசி­யதால் இன்று விஜ­ய­கலா எம்.பி. சிக்­கலில் இருக்­கிறார். ஆனால் நீதி­மன்றம் சென்று புலி­களின் மீதான தடையை நீக்க சொல்லி எவரும் வழக்கு தொட­ரலாம். வாதங்­களை முன்வைக்­கலாம். அதற்கு அனை­வ­ருக்கும் உரிமை உண்டு. நீதி­மன்றம் சென்று நீதியின் பாது­காப்பில் இருந்­த­படி இன்று புலிகள் ஆயுதப் போரில் இல்லை எனவும் இலங்­கையில் வாழும் சுமார் 12000 முன்னாள் போர­ளி­களை முன்­னி­லைப்­ப­டுத்தி அவர்கள் இன்று ஜே.வீ.பி.யை  போன்று ஜன­நா­யக வழக்கு திரும்பி விட்­டார்கள் என எவரும் வாதிட முடியும். அதனால் இந்­நாட்டு இனப்­பி­ரச்­சினை தீர்­வுக்கு இருக்­கின்ற முக்­கி­ய­மான தடை­யையும் கணி­ச­மாக தளரும் .என தேசிய ஒரு­மைப்­பா­டுஇ நல்­லி­ணக்­கஇ அர­ச­க­ரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரி­வித்­துள்ளார்.   
புலி­களின் தலை­வ­ருக்கு சமா­ன­மாக தம்மை இன்று உரு­வ­கித்­துக்­கொண்டு புலி­களை பற்றி மறை­மு­க­மாக பேசி பேசியே அர­சியல் செய்யும் தமிழ் தலை­வர்கள் முதலில் இந்த புலித்­த­டையை நீக்க தம் சட்ட அறிவை பயன்­ப­டுத்த வேண்டும். ஆனால் இதை எவரும் இது­வரை செய்ய முன்­வ­ர­வில்லை. உண்­மையில் புலி­களை பற்றி மக்கள் மன்­றத்தில் பேசிய அப்­பாவி பெண் எம்.பி. விஜ­ய­க­லா­வுக்கு இருக்கும் தைரியம் இன்று சட்­டத்­த­ரணி தமிழ் தலை­வர்­க­ளுக்கு இல்­லையோ என்றும் முன்னாள் போரா­ளி­களை முன்­னிலை படுத்தி வழக்கு பேசினால் அந்த முன்னாள் போரா­ளிகள் ஜன­நா­யக அர­சி­யலில் எழுச்சி பெற்று விடு­வார்கள் என எவரும் அஞ்­சு­கி­றார்­களோ என்­பது எனக்கு இது இன்­று­வரை புரி­யாத புதி­ராக இருக்­கின்­றது என்றும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.
கொழும்பு டவர் அரங்கில் நேற்று நடை­பெற்ற கொழும்பு வர்த்­தக மாணவர் சங்க விருது கலை விழாவில் பிர­தம அதி­தி­யாக கலந்­து­கொண்டு உரை­யாற்­றிய அமைச்சர் மனோ கணேசன் இதனை கூறி­யுள்ளார்.
அவர் அங்கு மேலும் உரை­யாற்­று­கையில்
சிங்­கள தரப்பில் புலிகள் என்ற பெயர் இன்­னமும் அவர்கள் வயிற்றில் புளியை கரைக்­கி­றது. அதுவே இனப்­பி­ரச்­சினை தீர்­வுக்கு அவர்கள் உடன்­ப­டு­வதை தடுத்து வரு­கி­றது. ஆகவே புலி­களை பற்­றிய அபிப்­பி­ரா­யத்தை மாற்ற நமது சட்­டத்­த­ரணி அர­சி­யல்­வாதி தலை­வர்கள் சட்­டப்­படி முயல வேண்டும். இன்று புலிகள் ஆயுத போரில் இல்லை என்­பதை கூறி ஜே.வீ.பி.யை போன்று ஜன­நா­யக வழி­மு­றைக்கு வந்­து­விட்ட இலங்­கையில் உள்ள முன்னாள் போரா­ளி­களை நீதி­மன்­றத்தில் முன்­னிலை படுத்த வேண்டும்.
ஜே.வீ.பி.யை போன்று தமிழ் இளை­ஞர்கள் அன்று ஆயுதம் தூக்­கி­யதன் பின்­ன­ணியில் இருந்த கார­ணத்தை எடுத்து தர்க்­க­ரீ­தி­யாக கூற வேண்டும். 1972ஆம் ஆண்டின் குடி­ய­ரசு அர­சி­ய­ல­மைப்­புக்கு எதி­ராக தொடுக்­கப்­பட்ட “ட்ரயல்-­அட்-பார்” வழக்­குக்கு சாமா­ன­மாக இந்த வழக்­கையும் கொண்டு செல்ல வேண்டும். “ட்ரயல்-­அட்-பார்” வழக்கில் தந்தை செல்வா ஜி. ஜி. பொன்­னம்­பலம் திருச்­செல்வம் ஆகியோர் முன்­வைத்த வாதங்­களை போல் இன்­றைய சட்­டத்­த­ரணி தமிழ் தலை­வர்­களும் வாதங்­களை முன் வைக்க வேண்டும்.
ஜே.வி.பி. யை போன்று விடு­தலை புலிகள் இயக்­கமும் இலங்கை மண்ணில் செயற்­பட்ட ஒரு அர­சியல் இயக்கம். அர­சுக்கு எதி­ராக ஆயுத கிளர்ச்­சியில் இந்த இரண்டு இயக்­கங்­களும் ஈடு­பட்­டன. இரண்டும் தடை செய்­யப்­பட்­டன. ஜே.வி.பி. யின் மீதான தடை நீக்­கப்­பட்டு அவர்கள் இன்று பாரா­ளு­மன்றம் வந்து ஜன­நா­யகம் பற்றி எங்­க­ளுக்கு வகுப்பு எடுக்­கி­றார்கள். நல்­ல­துதான். ஆனால் அதேபோல் இந்த முறையில் யுத்தம் முடிந்து பத்து வரு­டங்கள் ஆன நிலையில் புலி­களை பற்­றியும் நாம் பார்க்க வேண்டும். புலிகள் இயக்­கத்தில் இருந்­தார்கள் செயற்­பட்­டார்கள் என்ற 12000 மேற்­பட்ட ஆண் பெண் தமி­ழர்கள் நம் நாட்­டி­லேயே இன்று வாழ்­கி­றார்கள். அவர்­களில் சிலர் சிறையில் அடைக்­கப்­பட்டு துன்­பு­று­கி­றார்கள். பல­ருக்கு கை கால்கள் அவ­யங்கள் இல்லை.
ஆகவே புலிகள் இன்­னமும் இருக்­கி­றார்கள். அவர்கள் ஆயுதம் தூக்க போகி­றார்கள் என்ற தோற்­றப்­பாடு உண்­மையா இல்­லையா என்­பதை பற்றி எடுத்­துக்­கூற இந்த 12000 மேற்­பட்ட கை கால்கள் அவ­யங்கள் இழந்து சிறை­களில் வாழ்­கின்ற இன்று தம் சொந்த ஊர்­களில் துன்­புற்று வாழ்­கின்ற முன்னாள் போரா­ளி­க­ளுக்­குதான் முடியும். “தாங்­கள்தான் புலிகள்” என்று கூறி புலம்­பெ­யந்த நாடு­களில் வாழும் சில குழுக்­களை விட இந்­நாட்டில் இன்று வாழும் இந்த முன்னாள் போரா­ளி­க­ளுக்கு தான் இந்த தார்­மீக உரிமை இருக்­கி­றது. ஆகவே இவர்­க­ளது ஆயி­ரக்­க­ணக்­கான வாக்­கு­மூ­லங்­களை சத்­திய கட­தா­சி­களை நமது சட்­டத்­த­ரணி தலை­வர்கள் நீதி­மன்­றத்தில் எடுத்து வைக்­க­லாமே?
தமிழ் இளை­ஞர்­களை அன்று ஆயுதம் தூக்க வைத்­தது தமிழ் இளை­ஞர்­க­ளது மனநோய் அல்ல. அதன் காரணம் பேரி­ன­வாத இரா­ணுவ அடக்­கு­மு­றையே ஆகும். இது வர­லாற்று உண்மை. ஆனால் இவற்றின் அர்த்தம் புலிகள் பிழையே செய்­யாத விமர்­ச­னங்­க­ளுக்கு அப்­பாற்­பட்ட அணி­யினர் என்­பது அல்ல. தமி­ழு­லகில் மட்­டு­மல்ல முழு உல­கிலும் அப்­படி யாரும் விமர்­ச­னங்­க­ளுக்கு அப்­பாற்­பட்­ட­வர்கள் கிடை­யாது.
இன்று புலி­களை மீண்டும் உயிர்ப்­பிக்க சொல்­லி­விட்டார் என்று எம்பி விஜ­ய­க­லாவை போட்டு சட்டம் இறுக்­கு­கி­றது. உண்­மையில் புலிகள் இயக்கம் ஒரு தடை செய்­யப்­பட்ட இயக்­க­மாக இருப்­பதால் அதை மீண்டும் உயிர்ப்­பிக்க சொல்­வது சட்ட விரோ­த­மாக பார்க்­கப்­ப­டு­கி­றது. ஆனால் புலிகள் மீதான தடையை நீக்­கு­மாறு கோரலாம். அது தொடர்பில் உலகின் பல நாடு­களில் நடப்­பது போல் இலங்கை நீதி­மன்­றத்­தி­லேயே வழக்கு தொட­ரலாம். சட்­டத்­துக்கு பயந்து மறை­மு­க­மாக புலி­களின் பெயரை பயன்­ப­டுத்தும் தமிழ் தேசி­ய­வாத தலை­வர்கள் அதை ஏன் இன்­னமும் செய்­யாமல் இருக்­கி­றார்கள்? இப்­போது தேர்தல் காலம் நெருங்க நெருங்க திடீ­ரென பல தமிழ் அர­சி­யல்­வா­திகள் தமிழ் தேசிய புலி­களை பற்றி அடிக்­கடி பேசு­வதை ஊட­கங்­களில் வாசிக்­கிறோம். பார்க்­கிறோம். கேட்­கிறோம்.
ஆனால் பகி­ரங்க மேடையில் பேசிய அப்­பாவி பெண் எம்.பி. விஜ­ய­க­லா­வுக்கு இருக்கும் தைரியம் புலி­களின் தலை­வ­ருக்கு சமா­ன­மாக தம்மை இன்று உரு­வ­கித்­துக்­கொள்ளும் வீரர்­க­ளுக்கு இல்­லையா? நீதி­மன்­றத்தில் போய் நீதியின் பாது­காப்பில் இருந்­த­ப­டி­கூட வாதிட முடி­யாதா? இது எனக்கு ரொம்ப நாளாக விளங்­காத ஒரு புதிர்.
நான் இன்று ஒரு அமைச்­ச­ராக இல்­லா­ம­லி­ருந்தால் இதை நானே செய்வேன். நான் அட்­டைக்­கத்தி வீரன் அல்ல. இதைபோன்ற பல்வேறு விடயங்களை நான் நெருக்கடிமிக்க களத்தில் இருந்தபடி துணிந்து செய்துள்ளேன். அது மக்களுக்கு தெரியும். இன்று நான் வகிக்கும் பாத்திரத்தில் இருந்தபடி இதை செய்வது உசிதமானதல்ல. அப்படியானால் நான் இதிலிருந்து வெளியேற வேண்டும். அப்புறம் நான் உள்ளே இருந்து இன்று செய்து வரும் பாத்திரம் காலியாகிவிடும். இந்த அரசியல் பரப்பில் ஒவ்வொருவருக்கும் ஒரு பாத்திரம் இருக்கிறது. நானே பல பாத்திரங்கள் வகிக்க முடியாது. அது சினிமாவில் மாத்திரமே முடியும்.
#manoganeshan

No comments:

Post a Comment

Post Bottom Ad