முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

CV

வடக்கு முதல்வர் – கஜேந்திரகுமார் சந்திப்பு!


தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பில் தமிழ்தேசிய அரசியலை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்துவது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டடுள்ளது.

முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் சுமார் 20 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இந்த சந்திப்பு தொடர்பாக தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிக்கையில்,

“கடந்த சில மாதங்களாக முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்திக்க இயலாமல் இருந்தது. இந்நிலையில் நல்லெண்ண சந்திப்பாக இந்த சந்திப்பு நடைபெற்றிருந்தது. மேலும் முதலமைச்சர் தேர்தல் காலங்களில் நல்ல அறிக்கைகளை வெளியிட்டிருந்தார். அதற்காகவும் இன்றைய சந்திப்பு விசேடமாக ஒழுங்கமைக்கப்பட்டது.

இந்த சந்திப்பின்போது சமகால அரசியல் நிலமைகள் குறித்து பேசினோம். விசேடமாக உள்ளூராட்சி சபை தேர்தலின் பின்னர் தென்னிலங்கையில் உண்டான மாற்றங்கள் தொடர்பாக பேசினோம். மேலும் மாகாணசபை தேர்தல் தொடர்பாகவும் பேசினோம். தொடர்ந்து தமிழ்தேசிய அரசியலை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்துவது தொடர்பாகவும் பேசியிருக்கின்றோம்.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்