முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

kamal

கட்சியின் பெயர் குறித்து கமல் ஆலோசனை!


அரசியல் பயணம் குறித்தும், கட்சிப் பணிகள் தொடர்பாகவும், நடிகர் கமல், சென்னையில், நேற்று தீவிர ஆலோசனை நடத்தினார்.

தமிழக அமைச்சர்கள் மற்றும், பா.ஜ.,வினரை விமர்சித்து வந்த கமல், புதிய கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தார். பின், ராமேஸ்வரத்தில் உள்ள, மறைந்த ஜனாதிபதி, கலாம் வீட்டில் இருந்து, பெப்ரவரி 21ல், தமிழகம் முழுவதும் அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்கப் போவதாக அறிவித்தார்.

இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் நகருக்குச் சென்ற கமல், ‘இனி திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை’ என, அறிவித்தார். சென்னை திரும்பியதும், அரசியல் சுற்றுப்பயணம் மற்றும் கட்சிப் பணிகள் தொடர்பாக, சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில், மன்ற நிர்வாகிகளுடன், நேற்று ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில், புதிய கட்சிக்கு, ‘மக்கள் கட்சி’ என, பெயரிட்டு இருப்பதாகவும், தகவல் வெளியாகியுள்ளது.கட்சியின் பெயரை, டில்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வது தொடர்பாகவும், வழக்கறிஞர்களுடன் விவாதிக்கப்பட்டது.

மதுரையில் கட்சியின் பெயரை அறிவித்த பின், அதை பதிவு செய்வதற்கான பணிகள் தொடங்கப்படும் என, தெரிகிறது.

.மேலும், கட்சிக் கொடி வடிவமைப்பு, சுற்றுப்பயண அட்டவணை, பொதுக்கூட்ட ஏற்பாடுகள் மற்றும் அரசியல் கொள்கைகள் குறித்தும், நேற்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. அவரது சுற்றுப்பயண விபரம், 18ம் திகதி அறிவிக்கப்பட உள்ளது.

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்