முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

dinesh-gunawarththana-01-01-2015-720x480-720x480-720x480

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெறுவதற்கான செயற்பாடு தொடரும் – தினேஷ் குணவர்த்தன!


எதிர்க்­கட்சித் தலைவர் பத­வியை பெற்­றுக்­கொள்­வ­தற்­காக நாங்கள் தொடர்ந்து செயற்­ப­டுவோம். எமக்கு எதிர்க்­கட்சித் தலைவர் பத­வியைத் தராமல் சபா­நா­யகர் ஜன­நா­யக விரோ­த­மாக செயற்­பட்­டுக்­கொண்டு வரு­கின்றார் என்று கூட்டு எதிர்க்­கட்சித் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான தினேஷ் குண­வர்த்­தன தெரிவித்தார்.

அர­சாங்கம் மக்­களின் ஆணையை இழந்­துள்­ளது. எனவே உட­ன­டி­யாக பாரா­ளு­மன்­றத்தைக் கலைத்து பொதுத்­தேர்­தலை நடத்தி புதிய ஆட்­சியை கொண்­டு­வர நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

கூட்டு எதிர்க்­கட்­சியின் அடுத்த கட்ட நட­வ­டிக்கை எவ்­வாறு அமையும் என்று விப­ரிக்­கை­யி­லேயே தினேஷ் குண­வர்த்­தன மேற்­கண்­ட­வாறு கூறினார்.

அவர் இது­தொ­டர்பில் மேலும் விப­ரிக்­கையில்,

நாங்கள் அடுத்தகட்­ட­மாக அர­சியல் ரீதியில் எவ்­வாறு செயற்­ப­டு­வது என்­பது குறித்து ஆராய்ந்து வரு­கின்றோம். குறிப்­பாக தேவை­யான நேரத்தில் அவ­சி­ய­மான திட்­டங்­களை நாங்கள் முன்­னெ­டுப்போம். அதில் நாங்கள் உறு­தி­யாக இருக்­கின்றோம். மக்­களின் ஆணை மஹிந்த தரப்­பிற்கே கிடைத்­தி­ருக்­கின்­றது. எனவே தற்­போ­தைய அர­சாங்­கத்­தினால் தொடர்ந்து பய­ணிக்க முடி­யாது.

அர­சாங்கம் உட­ன­டி­யாக பாரா­ளு­மன்­றத்தை கலைத்து பொதுத் தேர்­தலை நடத்தி புதிய ஆட்­சியை நிறுவ நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும். இந்த அர­சாங்­கத்­திற்கு தொடர்ந்து பய­ணிக்க முடி­யாது. அந்த பய­ணத்தை மக்கள் நிறுத்­தி­யி­ருக்­கின்­றனர். அதனைப் புரிந்­து­கொண்டு அர­சாங்கம் பொதுத்­தேர்­தலை நடத்­த நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும்.

இதே­வேளை பாரா­ளு­மன்­றத்தில் எதிர்க்­கட்சித் தலைவர் பத­வியை கூட்டு எதி­ர­ணிக்கு வழங்க நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும். சபா­நா­யகர் இந்த விட­யத்தில் ஜன­நா­யக ரீதியில் செயற்­ப­ட­வேண்டும். பாரா­ளு­மன்ற சம்­பி­ர­தா­யங்­களின்படி எண்­க­ணிதம் கவ­னத்தில் கொள்­ளப்­ப­ட­வேண்டும். எண்­க­ணிதம் என்­பது இந்த முழு உல­கத்­தி­னாலும் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட ஒரு விட­ய­மாகும்.

எனவே எண்­க­ணித ரீதி­யாக பார்க்கும் போது பாரா­ளு­மன்­றத்தில் கூட்டு எதி­ர­ணிக்கே அதி­க­ளவு எம்.பி.க்கள் இருக்­கின்­றனர். எனவே எதிர்க்­கட்சித் தலைவர் பதவி கூட்டு எதி­ர­ணிக்ேக வழங்­கப்­ப­ட­வேண்டும்.

தற்­போது எதிர்க்­கட்சித் தலைவர் பத­வியை வகிக்­கின்ற தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பை­விட மூன்று மடங்­கிற்கும் அதி­க­மான பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை கூட்டு எதி­ரணி வைத்­தி­ருக்­கின்­றது. எனவே இந்த விட­யத்தை கவ­னத்தில் கொண்டு சபாநாயகர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கூட்டு எதிரணிக்கு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். எவ்வாறிருப்பினும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற்றுக்கொள்வதற்காக கூட்டு எதிரணி தொடர்ந்து செயற்படும் என்பதை உறுதியாக தெரிவிக்கின்றோம் என்றார்.

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்