முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

rain accident

வவுனியாவில் புகையிரதத்தில் மோதி பெண்ணொருவர் தற்கொலை முயற்சி!


வவுனியா சிங்கள பிரதேச சபைக்கு அருகேயுள்ள புகையிரத கடவையில் இன்று மதியம் 12.30 மணியளவில் பெண்ணொருவர் புகையிரத்தில் மோதுண்டு தற்கொலைக்கு முயன்று படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா குருமன்காடு பகுதியில் அமைந்துள்ள சிங்கள பிரதேச சபைக்கு அருகேயுள்ள புகையிரத கடவைக்கு அருகே யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரத்தில் மோதுண்டு பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் புகையிரத கடவைக்கு அருகே நீண்ட நேரமாக நின்றுள்ளார். அப்போது அவ்விடத்தில் பணிபுரிந்த கடவைக்காப்பாளர் ஏன் இவ்விடத்தில் நின்கின்றீர்கள் என வினாவிய போது ஒருவருக்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் புகையிரத சத்தம் கேட்டவுடன் புகையிரத கடவைக்கு அருகே நடந்து சென்றுள்ளார். இதனை அவதானித்த கடவை காப்பாளர் புகையிரதம் வருகின்றது செல்ல வேண்டாமென தெரிவித்துள்ளார். எனினும் அவரின் பேச்சினை செவிமடுக்காது புகையிரத கடவையில் தலையினை வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனை அவதானித்த ரயில் கட்டுப்பாட்டாளர் ரயிலினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்த போதும் குறித்த பெண் மீது ரயில் மோதுண்டது என சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்