மக்கள் ஆர்ப்பாட்டம்! ஆனால் விக்கி அ ஆவன்னாவை முதலில் படிக்கட்டும்! என்கிறார் மாவை (காணொளி) - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, October 21, 2018

மக்கள் ஆர்ப்பாட்டம்! ஆனால் விக்கி அ ஆவன்னாவை முதலில் படிக்கட்டும்! என்கிறார் மாவை (காணொளி)


அர­சி­ய­லில் அ,ஆவையே இப்­போ­து­தான் படிக்­கும் வடக்கு முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், எங்­களை விமர்­சிக்­கின்­றார். வர­லாறு தெரி­யாத அவர் எம்­மைக் குறை­சொல்­லித் திரி­கின்­றார்.

இவ்­வாறு இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் தலை­வ­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை.சோ.சேனா­தி­ராசா தெரி­வித்­தார் .

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் மக்­கள் சந்­திப்­பும், உத­விப் பொருள் வழங்­க­லும், யாழ்ப்­பா­ணம் ஒஸ்­மா­னி­யாக் கல்­லூ­ரி­யில் நேற்­றுக் காலை நடை­பெற்­றது. இந்த நிகழ்­வில் கலந்து கொண்டு உரை­யாற்­றும் போதே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

மக்­க­ளுக்கு உரி­மை­தான் வேண்­டும். அபி­வி­ருத்தி தேவை­யில்லை என்று சாரப்­பட முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன் நிகழ்­வொன்­றில் அண்­மை­யில் பேசி­யுள்­ளார். அவர் நீதி­ய­ர­ச­ராக இருந்து ஓய்வு பெற்­ற­வர். அவர் வடக்கு மாகாண சபையை நடத்­திய லட்­ச­ணத்தை மக்­கள் நன்று அறி­வார்­கள். அவ­ரது நடத்­தை­யால்­தான், நீதி­மன்ற அவ­ம­திப்பு வழக்கை எதிர்­கொள்­கின்­றார்.

எங்­கள் கட்­சி­யில் போட்­டி­யிட்­டு­தான் வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரா­கத் தெரி­வா­ன­வர் விக்­னேஸ்­வ­ரன். இன்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பை ஒழித்­துக் கட்­டு­வ­தில் வலு தீவி­ர­மாக இருக்­கின்­றார். நாடா­ளு­மன்­றத் தேர்­தல், உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் எல்­லாம் எங்­க­ளுக்கு எதி­ரா­கச் செயற்­பட்­டார். திசை மாறிப் பறப்­ப­வ­ராக இருந்து கொண்டு எங்­க­ளைத் தீவி­ர­மாக விமர்­சிக்­கின்­றார்.

அர­சி­ய­லில் அவர் இப்­போ­து­தான் அ,ஆ படிக்­கின்­றார். வர­லாறு தெரி­யாத அவர் எம்மை சகட்டு மேனிக்கு விமர்­சிக்­கின்­றார். அவர் முத­லில் அர­சி­யல் படிக்­க­வேண்­டும். எமது இலட்­சி­யத்தை எப்­ப­டித் தந்­தி­ர­மா­கப் பெற்­றுக் கொள்­வது என்­பது தொடர்­பில் அவர் படிக்­க­வேண்­டும் – என்­றார்.

இந்த நிகழ்­வில் வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளான அ.அஸ்­மின், கே.சயந்­தன், இ.ஜெய­சே­க­ரன் ஆகி­யோர் கலந்து கொண்­ட­னர்.


No comments:

Post a Comment

Post Bottom Ad